search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இது இஸ்ரேலுக்கு இருண்ட நேரம் - நீங்கள் வெல்ல வேண்டும்: சுனக் திட்டவட்டம்
    X

    "இது இஸ்ரேலுக்கு இருண்ட நேரம் - நீங்கள் வெல்ல வேண்டும்": சுனக் திட்டவட்டம்

    • இரண்டாம் உலக போரின் இறுதி கட்டத்தை சர்ச்சில் "இருண்ட காலம்" என கூறினார்
    • இறையாண்மையை காக்க இஸ்ரேலுடன் இங்கிலாந்து துணை நிற்கும்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இரண்டாம் உலக போர் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் தனது நாட்டின் இறையாண்மையை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், "இது இருண்ட காலம்" என வர்ணித்ததை குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தற்போதைய நிலையை "இது இஸ்ரேலின் இருண்ட காலம் மட்டுமல்ல; உலகத்தின் இருண்ட காலம்" என கூறியுள்ளார்.

    நேதன்யாகுவுடனான சந்திப்பு நிறைவடைந்ததும் பேசிய ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    இஸ்ரேல் தற்போது அதன் வரலாற்றில் முதல்முறையாக இருண்ட காலகட்டத்தை (darkest hour) சந்தித்து வருகிறது. தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு நிச்சயம் உண்டு. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தன் தேச இறையாண்மையை காக்க இஸ்ரேல் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் இங்கிலாந்து துணை நிற்கும். ஓரு நீண்ட போருக்கு இஸ்ரேலுக்கு நீடித்த ஆதரவு தேவைப்படுகிறது. உங்களுடன் இந்த இருண்ட காலத்தில் நண்பனாக துணை நிற்பதில் பெருமையடைகிறேன். உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம். நீங்கள் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும்; நீங்கள் வெல்வதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.

    இஸ்ரேல் சுற்றுப்பயணம் முடிந்ததும் ரிஷி சுனக், சவுதி அரேபியா செல்ல உள்ளார்.

    Next Story
    ×