என் மலர்
உலகம்

ஹமாஸ் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்- இஸ்ரேல் அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம்
- சவுதி- இஸ்ரேல் உறவுகளை கெடுக்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
- பயங்கரவாத தாக்குதலில் ஈரானின் பங்கை, வரும் நாட்களில் வெளியிடுவோம்.
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " ஹமாஸ், ஹிஸ்புல்லாவிற்கு பணமும், ராணுவ உதவியும் கொடுப்பது ஈரான் தான்.
பயங்கரவாத தாக்குதலில் ஈரானின் பங்கை, வரும் நாட்களில் வெளியிடுவோம்.
சவுதி- இஸ்ரேல் உறவுகளை கெடுக்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது" என்றார்.
Next Story






