என் மலர்
சீனா
- நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பதிவு
- உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பீஜிங்:
சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பெரும்பாலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீன அரசின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் மனித குலத்திற்கு கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
டிசம்பர் 20 அன்று மதிப்பிடப்பட்ட தினசரி 37 மில்லியன் பாதிப்பு என்பதற்கும், அந்த நாளில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 3,049 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. தினசரி பாதிப்புக்கான முந்தைய உலக சாதனையை விட இது பல மடங்கு அதிகமாகும்.
ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தோன்றி பல்வேறு நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 19ம் தேதி தினசரி பாதிப்பு 4 மில்லியனை எட்டியது. இதுவே உலக அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
- ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
- கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பீஜிங்:
சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை தலைவர் மைக்கேல் ரேயான் கூறும்போது, "கொரோனா இறப்பு குறித்து சீனாவின் வரையறை மிகவும் குறுகலானது" என்றார்.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5 ஆயிரம் பேர் பலியானதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி லிமிடெட் ஆய்வு நிறுவனம் கூறியதாவது:-
சீனாவில் கொரோனாவின் ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
அடுத்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மார்ச் மாதத்தில் 42 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாக நேரிடும். அப்போது உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும்.
சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 வைரசால் அடுத்தடுத்து 3 அலைகள் வரை ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் கூறும் போது, தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து உண்மையான தகவல்களை சீன அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.
- உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.
- சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுகிறது.
பீஜிங் :
சீனாவில் தற்போது கொரோனா வைரசின் புதிய அலை எழுச்சி பெற்றுள்ளது. அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங் தென் மேற்கு பகுதி மற்றும் சிறிய நகரங்களில் வார்டுகள் நிரம்பி வழிகின்றனவாம்.
சீனாவின் தொழில்துறை மாகாணமான ஹீபெய் மாகாணத்தில் உள்ள ஜூஜவ் நகரில் உள்ள நெரிசலான வார்டுகளில் ஆபத்தான நிலையில் உள்ள டஜன் கணக்கான வயதான நோயாளிகள் சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்படுவதை பத்திரிகையாளர்கள் நேரில் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.
'ஜீரோ கோவிட்' கொள்கை என்ற பெயரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சீனா கொண்டு வந்த தீவிர கட்டுப்பாட்டுக்கொள்கை மக்களை விரக்தியில் ஆழ்த்தி, போராட்டத்தில் குதிக்க வைத்தது. இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன. பலர் தங்கள் வீடுகளிலேயே சோதனை செய்து கொள்கின்றனர்.
அதன்பிறகுதான் இப்போதைய கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொரோனாவால் உயிர்ப்பலிகள் பெருகி வந்தாலும், கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளாக அவை காட்டப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகளால் உயிரிழப்புகள் நேரிடுவதாகத்தான் சீனா பதிவு செய்கிறது.
பீகிங் பல்கலைக்கழகத்தின் முதலாம் எண். ஆஸ்பத்திரியின் தலைவர் வாங் கெய்கியாங், ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகளால்தான் நோயாளிகள் சாகிறார்கள் என கூறி உள்ளார்.
ஆனால் தகன மையங்கள், உடல்களால் நிரம்பி வழிவதாகவும், உடல்களை தகனம் செய்து விட்டு, அஸ்தியைப் பெறுவதற்காக மக்கள் கார்களில் காத்திருப்பதாகவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஜூஜவ் நகரில் இறுதிச்சடங்குக்கான பொருட்களை விற்பனை செய்கிற கடைக்காரர்கள், ஒரு தகன மைய ஊழியர் இதுபற்றி கூறும்போது, "கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது முதற்கொண்டு, சாவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு தினமும் 3 அல்லது 4 உடல்களை எரித்த தகன மையங்களில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் தினமும் 20 முதல் 30 உடல்கள் எரிக்கப்படுகின்றன" என தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. ஆனால் அந்த நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து 5 ஆயிரத்து 241 என சீன தேசிய சுகாதார கமிஷன் பதிவு செய்துள்ளது. இதற்கான காரணத்தைக்கூட பதிவு செய்யவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலை தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான், "கொரோனா இறப்பு குறித்த சீனாவின் வரையறை மிகவும் குறுகலானது" என விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "கொரோனாவால் சாகிறவர்கள், நோய்த்தொற்றின் தீவிரத்தால் பல்வேறு மாறுபட்ட உறுப்புகளின் செயலிழப்பால்தான் மரணத்தை தழுவுகிறார்கள். எனவே, கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு, சுவாசக் கோளாறு உள்ள ஒருவருக்கு கொரோனா இறப்பைக் கண்டறிவதைக் கட்டுப்படுத்துவது, கொரோனாவுடன் தொடர்புடைய உண்மையான இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும்" என தெரிவித்தார்.
சீனாவின் கொரோனா நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக வருகிற தகவல்கள் கவலை அளிக்கின்றன" என தெரிவித்தார்.
- மேற்குப் பகுதி எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை.
- இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட முடிவு
இந்தியா-சீனா ராணுவ கமாண்டர் அளவிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சு சீனாவில் உள்ள சுசுல் மால்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 17ந் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது என்று இருதரப்பினரும் அப்போது ஒப்புக் கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது என்று இந்த கூட்டத்தில் முடுவு செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- பாடகியின் பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பீஜிங்:
சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பி.எப்.7 ஒமைக்ரான் என்ற வகை வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் பிரபல பாடகி ஒருவர் தனக்குத் தானே கொரோனாவை வரவழைத்து உள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான ஜேன் ஜாங் (38) ஆங்கில வருடப் பிறப்பையொட்டி டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கருதி உள்ளார். இதனால் கொரோனா பாதித்த தனது நண்பர்களை வேண்டுமென்றே அவர்கள் சிகிச்சைபெறும் மையங்களுக்கு சென்று சந்தித்து உள்ளார்.
இதனால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
சீன சமூக வலை தளங்களில் 4.3 கோடி பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் ஜேன்னின் இந்த பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ள நிலையில் பிரபலமான பாடகியே இப்படி செய்ததற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவில் நேற்று முன் தினம் 3101 பேர் புதிய ஒமைக்ரான் வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த 90 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் பாடகி ஜேன் ஜாங் தனது பதிவுகளை அழித்துவிட்டு, தான் செய்ததற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.
- கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- ஆஸ்பத்திரிகள் முற்றிலுமாக நிரம்பி வழிகின்றன.
பீஜிங்:
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.
கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியானது. சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
இறுதி சடங்கு செய்யும் சேவை நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கூறும் போது, "மீண்டும் கொரோனா பரவலுக்கு பிறகு எங்களது பணிச்சுமை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுகிறோம். தினமும் மயானத்துக்கு 200 உடல்கள் வருகின்றன. வழக்கமாக ஒரு நாளைக்கு 30 அல்லது 40 உடல்கள்தான் வரும்" என்றார்.
மேலும் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் உடல்கள் நிரம்பி வழிகின்றன என்று வால் ஸ்ட்ரீப ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் முற்றிலுமாக நிரம்பி வழிகின்றன. சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
தலைநகர் பீஜிங்கில் உடல்கள் தகனம் இடைவிடாது நடைபெறுகிறது. பிணவறைகள் அதிக சுமையுடன் உள்ளன. சீன கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய குறிக்கோள், தொற்றால் யார் பாதிக்கப்பட விரும்புகிறார்களோ பாதிக்கட்டும். யார் இறந்து விடுவோம் என்று நினைக்கிறார்களோ இறக்கட்டும் என்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொரோனாவுடன் தொற்றால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளின் இறப்பு அதிகரித்து வருவதாக தகவல்.
- கிராமப்புறங்களில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பதிவான இறப்புகளுடன் அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,237 ஆக உயர்ந்தது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, இதய நோய் பாதிப்பு உள்பட பிற நோயாளிகளின் இறப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இறப்புகளை, சீன சுகாதாரத்துறை, கொரோனா இறப்பு கணக்கில் சேரப்பதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால், அடுத்த மாதம் முதல் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஜனவரி மாதம் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட பயணங்களை அந்நாட்டு மக்கள் மேற்கொள்வார்கள் என்பதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்களின் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள் இயக்கி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- அனைத்து கொரோனா தடுப்பு மையங்களும் அங்கு மூடப்பட்டன.
பீஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. இதனால் அங்கு தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முதல் முறையாக சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசு ஊடகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகின.
சீனாவில் கடைசியாக கடந்த 3-ந் தேதி கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினந்தோறும் 100-க்கும் அதிகமான பிணங்கள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சீன பொருட்களை வாங்க மறுப்பதற்கு எல்லையில் சீன படைகளுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதும் ஒரு காரணம்.
- மேட் இன் சீனா பொருட்களைவிட, மேட் இன் இந்தியா பொருட்கள் சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் ஒரு இந்தியர்கள் நம்புகிறார்கள்.
2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன படைகளிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது 60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர்.
சீன பொருட்களுக்கு பதிலாக 11 சதவீதம் பேர் தரமான இந்திய பொருட்களையும், 8 சதவீதம் பேர் மற்ற வெளிநாட்டு பொருட்களையும் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். குறைந்த விலை, தரம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட காரணங்களை கொண்டு மற்ற நாட்டு பொருட்களை இந்தியர்கள் வாங்குவது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் சீன பொருட்கள் கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைப்பதில்லை என்று கூறி உள்ளனர்.
சீன பொருட்களை வாங்க மறுப்பதற்கு எல்லையில் சீன படைகளுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதும் ஒரு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் உணர்வு அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஆடைகள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற சில துறைகளில் சீன பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 11 சதவீதம் பேர் சீன பைகள், ஆடைகள், உதிரி பாகங்களை வாங்கினார்கள். அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீன வாகன உதிரி பாகங்களை வாங்கிய 7 சதவீதம் பேர் கடந்த ஒரு வருடமாக எதையும் வாங்கவில்லை.
ஆனாலும் கடந்த ஆண்டில் 29 சதவீதமாக இருந்த சீன பொருட்களின் தேவை இந்த ஆண்டு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. பண்டிகை கால தேவை, எலக்ட்ரானிக் பொருட்கள் எழுது பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஆனாலும் மேட் இன் சீனா பொருட்களைவிட, மேட் இன் இந்தியா பொருட்கள் சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் ஒரு இந்தியர்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன.
- கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன.
பீஜிங்:
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.
சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது.
பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன.
தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் தினசரி பாதிப்புகளும் குறைந்து உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் காய்ச்சல் கிளீனிக்குகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி அங்குள்ள 47 பொது மருத்துவமனைகளில் 14 ஆயிரம் காய்ச்சல் கிளீனிக்குகளும் சமுதாய மருத்துவமனைகளில் 31 ஆயிரம் கிளீனிக்குகளும் திறக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிளீனிக்குகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
- சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
பீஜிங்:
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் 5 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது.
2025-ம் ஆண்டுக்குள் மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து பல ஒப்பந்த உற்பத்தியாளர்களை சீனாவில் இருந்து வேறு இடத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
- குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது. இதனால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீடுகளைவிட்டு பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைபடுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் ஜின்ஜியாங் உரும்கி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உரும்கியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. அதிபர் ஜின்பிங் பதவி விலகுமாறு பொதுமக்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்தநிலையில் கொரோனா தடுப்பு மையத்துக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர். இந்த தொடர் போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி உருவானது.
போராட்டம் வலுத்து வருவதால் சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 5வது பெரிய நகரமாக திகழும் குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இந்த நகரில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. காஸ்சே, செங்டு உள்பட பல இடங்களில் பல சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மேலும் சில நகரங்களில் பொது முடக்க கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.






