என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக, அதிமுகவை பேய், பிசாசு என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்த சீமான்
- தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.
- அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க., அ.தி.மு.க.வை பேய் பிசாசு என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
* பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டி கொள்கின்றனர்.
* அ.தி.மு.க. வைத்து தி.மு.க.வை எப்படி ஒழிக்க முடியும்?
* தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.
* மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும், கூட்டணியால் அல்ல...
* அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது.
* அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க. பயணிக்கிறது.
* அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?
* விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது.
* திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள் என்றார்.






