என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித்ஷா பதில்
- தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவாக்க விரும்புகிறோம்.
- கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெற தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்நோக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியில் இணையுமா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை த.வெ.க. தரப்பில் மறுத்தாலும், அ.தி.மு.க.,பா.ஜ.க. தரப்பில் எந்த கட்சியும் இணையலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் த.வெ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமித்ஷா,
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவாக்க விரும்புகிறோம். கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டணிக்காக யார் வேண்டுமானாலும் எந்த கட்சியுடனும் பேசலாம் என்றார்.






