search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.-காங்கிரஸ் இடையே உருவான கூட்டணி: கசப்பை இனிப்பாக்கிய கனிமொழி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தி.மு.க.-காங்கிரஸ் இடையே உருவான கூட்டணி: கசப்பை இனிப்பாக்கிய கனிமொழி

    • யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும்.
    • இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு திரைமறைவில் நடந்த கசப்பு மற்றும் இனிப்பான சம்பவங்கள் பற்றி டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:-

    டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தான் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதலில் 5 பிளஸ் 1 என்பதில் இருந்து ஏலம் தொடங்கியது. 6 பிளஸ் 1 என்று உறுதிப்படுத்தியதும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

    அதை கேட்டதும் இதற்கு மேல் ஒதுக்க முடியாது. நீங்கள் இழுத்தடித்தால் உங்களுக்குதான் சிக்கல். நீங்கள் பார்ப்பது கலைஞர் அல்ல. தளபதி. நீங்கள் உடன்படாவிட்டால் தளபதி உறுதிப்படுத்தி விட்டு அவர் வழியில் போய்க்கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.


    டி.ஆர்.பாலுவின் இந்த கறார் பேச்சு டெல்லி தலைவர்களை ஆத்திரமூட்டி இருக்கிறது. அதன் புறகு தான் யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும். அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

    மேலிடத்தின் இந்த கசப்பான அனுபவத்தை தான் எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை. இனிப்பாகவே இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சூசகமாக அடிக்கடி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.

    டெல்லியில் நல்ல நட்புடன் இருக்கும் கனிமொழிதான் தனது பேச்சு சாதுர்யத்தால் கசப்பை மறந்து இனிமையான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

    அவருடன் நடந்த பேச்சில்தான் கூட்டணி இனிப்பாக முடிந்து இருக்கிறது என்றனர்.

    Next Story
    ×