என் மலர்

    செய்திகள்

    கோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு நண்பர்களுடன் சென்ற இளம்பெண்
    X

    கோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு நண்பர்களுடன் சென்ற இளம்பெண்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டாஸ்மாக் பார் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வாலிபர்களுடன் இணைந்து மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    கோவை:

    டாஸ்மாக் பார் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வாலிபர்களுடன் இணைந்து மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பரவும் இந்த வீடியோவில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் பாருக்கு சென்ற இளம்பெண் குடிமகன்கள் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

    அவரது முன்பு பீர் பாட்டில் இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தயிருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் நண்பர்கள் கொடுக்கும் சிகரெட்டை அவர் புகைக்கிறார். இவர்களது அருகில் இருந்த யாரோ தான் இவற்றை செல்போனில் பதிவு செய்து இணையதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

    சமீபத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா டாஸ்மாக் பாருக்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சிகள் வெளியான போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் சினிமாவுக்காக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டது தெரிய வந்த பிறகு பரபரப்பு அடங்கியது.

    தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ காட்சி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    Next Story
    ×