என் மலர்
டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபனில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இதில் சீனாவின் ஜெங்கை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் சபலென்கா.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது இவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
14 sets played, 14 sets won, the reigning champion retains her ?!
— #AusOpen (@AustralianOpen) January 27, 2024
Queen Aryna's second coronation caps a perfect fortnight at Melbourne Park.@SabalenkaA • @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/x7639RQr84
- 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான ஷபலென்கா காத்திருக்கிறார்.
- 27 வயதான ஜெங் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ளவருமான சபலென்கா (பெலாராஸ்)-சீனாவை சேர்ந்த 12-ம் நிலை வீராங்கனையான ஜெங் மோதுகிறார்கள்.
சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான சபலென்கா காத்திருக்கிறார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற அவர் அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்திலும், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.
சபலென்காவுக்கு எல்லா வகையிலும் ஜெங் ஈடு கொடுத்து விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவ் (ரஷியா-நான்காம் நிலை வீரான சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.
மெட்வதேவ் 2-வது கிராண்ட்சிலாம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச்சை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய சின்னர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்.
- 2வது அரையிறுதியின் முதல் 2 செட்டை ஸ்வரேவ் எளிதில் வென்றார்.
- அடுத்த 3 செட்களை மெத்வதேவ் போராடி கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.
முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.
- முதல் அரையிறுதியின் முதல் 2 செட்டை சின்னர் எளிதில் வென்றார்.
- மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.
இதில் சின்னர் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.
இறுதியில், சின்னர் 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- முதல் அரையிறுதியில் சீனாவின் ஷெங் வென்றார்.
- 2வது அரையிறுதியில் சபலென்கா எளிதில் வென்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, சீனாவின் குயின்வென் ஷெங்குடன் மோதினார். இதில் ஷெங் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கவூப்புடன் மோதினார். இதில் சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ஷெங் ஆகியோர் மோதுகின்றனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- சீனாவின் சாங் சீசென், செக் நாட்டின் தாமஸ் மெக்காக் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
- முதல் இரு செட்களை அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்றார்.
- மூன்றாவது செட்டை கார்லோஸ் அல்காரஸ் போராடி கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் யாஸ்ட்ரீம்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நோஸ்கோவாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஷெங், ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இதில் ஷெங் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முதல் காலிறுதியில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர்.
- வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இதில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
இறுதியில், மெத்வதேவ் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- அர்ஜெண்டினாவின் மால்டெனி, கோன்சலேஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- இன்று நடந்த 2வது காலிறுதியில் சபலென்கா வென்றார்.
- அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவூபை சந்திக்கிறார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் பெலார்சின் அரினா சபலென்கா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பார்பராவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவூபுடன் மோதுகிறார்.
- அமெரிக்க வீரரை 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேற்றம்.
- இவர் 58 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் ஜோகோவிச் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் 4-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கவூப் 7-6 (8-6), 6-7 (3-7) 6-2 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்டியூக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியோ அசரென்கா தகுதி சுற்று வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
- உக்ரைனை சேர்ந்த டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 18-வது வரிசையில் உள்ள வருமான விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்) தகுதி சுற்று வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
உக்ரைனை சேர்ந்த டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் லிண்டா நோஸ்கோவை (செக்குடியரசு) சந்திக்கிறார்.
19-வது வரிசையில் உள்ள எலினா சுவிட்டோலினாவுக்கு எதிராக லிண்டா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது சுவிட்டோலினா காயத்தால் விலகினார். இதனால் லின்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.






