search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zheng"

    • 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான ஷபலென்கா காத்திருக்கிறார்.
    • 27 வயதான ஜெங் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ளவருமான சபலென்கா (பெலாராஸ்)-சீனாவை சேர்ந்த 12-ம் நிலை வீராங்கனையான ஜெங் மோதுகிறார்கள்.

    சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான சபலென்கா காத்திருக்கிறார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற அவர் அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்திலும், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    சபலென்காவுக்கு எல்லா வகையிலும் ஜெங் ஈடு கொடுத்து விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவ் (ரஷியா-நான்காம் நிலை வீரான சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.

    மெட்வதேவ் 2-வது கிராண்ட்சிலாம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச்சை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய சின்னர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்.

    ×