என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலக கோப்பை: 4 அமெரிக்க வீரர்களுக்கு இந்திய விசா மறுப்பு - ஏன் தெரியுமா?
- அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
- இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7- ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை.
இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காெணாலி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடு களிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






