என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சி.எஸ்.கே- டெல்லி போட்டியை கண்டுகளிக்கும் தோனியின் பெற்றோர்
    X

    சி.எஸ்.கே- டெல்லி போட்டியை கண்டுகளிக்கும் தோனியின் பெற்றோர்

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
    • சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கேப்டனாக களம் இறங்கினார்.

    ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியை தோனியின் பெற்றோர் கண்டுகளித்து வருகின்றனர். அவர்களுடன். தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவர்களது மகளும் போட்டியை கண்டு வருகின்றனர்.

    சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர் முதல்முறையாக அவரது ஆட்டத்தை நேரில் காண வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×