என் மலர்
விளையாட்டு


சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட முடிவில் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 98 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களுடனும், ரகானே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, ஹனுமா விஹாரி களமிறங்கினார். புஜாராவும், விஹாரியும் இணைந்து இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 77 ரன் எடுத்த நிலையில் புஜாராவும் வெளியேறினார். இதனால், ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், அடுத்து களமிறங்கிய ரவிசந்திரன் அஸ்வின் , விஹாரியுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்கவிடாமல் தடுத்தது. இரு வீரர்களுமே தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களே வேண்டுமேன்ற வம்புக்கு இழுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்றைய 5-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன்\விக்கெட் கீப்பர் டிம் பெயின் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் அஸ்வினை கிண்டல் அடிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். டிம் பெயினின் கருத்துக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்தார்.
டிம் பெயின் கூறுகையில், ’காத்திருக்க முடியவில்லை. காபாவுக்கு (பிரிஸ்பென் மைதானத்தின் புனைப்பெயர்) வாருங்க... உங்களுடன் விளையாட மிகுந்த ஆவலாக உள்ளோம் அஸ்வின்’ என்றார்.
டிம் பெயினின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அஸ்வின், ‘அதேபோல் தான் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்க... உங்களுடன் நாங்கள் விளையாட ஆவலாக உள்ளோம். அதுதான் உங்கள் (டிம்ப் பெயின்) கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என்றார்.
I want Ashwin's autograph 😂. Roasted the "temporary captain" Tim Paine#INDvAUS#stevesmith#Wade#Ashwin#TimPainepic.twitter.com/IkH8SoYKzS
— ARYAN TRIPATHI (@AryanTripathi_2) January 11, 2021

— Virat Kohli (@imVkohli) January 11, 2021
Classic bit of “peak Straya” by Steve Smith scuffing out the batsmen’s mark for no reason other than just being an a hole... Aussies... No surprises there! pic.twitter.com/IhxgVhhWvm
— The ACC (@TheACCnz) January 11, 2021

சிட்னி:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 52 ரன்னிலும், சுப்மன் கில் 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள். புஜாரா 9 ரன்னும், ரகானே 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 309 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. எஞ்சிய 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தொடர்ந்தது.
போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே ரகானே மேலும் ரன் ஏதும் எடுக்காமல் அதே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை லயன் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 102 ஆக இருந்தது
அடுத்து ரிஷப் பண்ட் களம் வந்தார். முதல் இன்னிங்சில் பேட்டிங்கின் போது முழங்கையில் காயம் அடைந்ததால் அவர் கீப்பிங் செய்யவில்லை. அதில் இருந்து குணமடைந்த ரிஷப்பண்ட் இன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 15-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது அரை சதமாகும்.
இந்திய அணி 68-வது ஓவரில் 200 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து இருந்தது. ரிஷப்பண்ட் 74 ரன்னும், புஜாரா 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ரிஷப்பண்டின் ஆட்டம் தொடர்ந்து அதிரடியாக இருந்தது. கிரீன், லயன் ஓவர்களில் அவர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார்.
மறுமுனையில் இருந்த புஜாரா அவருக்கு உறுதுணை அளிக்கும் வகையில் நிதானமாக ஆடினார். அவர் 170 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். அவரது 27-வது அரை சதமாகும். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார்.
புதிய பந்தை எடுப்பதற்குள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் ரிஷப்பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 97 ரன்னில் ஆட்டம் இழந்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
ரிஷப்பண்ட் விக்கெட்டை லயன் கைப்பற்றினார். புதிய பந்தை எடுப்பதற்கான கடைசி ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 77 ரன்னில் இருக்கும் போது ஹசில்வுட் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இதனால் இந்திய அணி தோல்வி அடைய நிறைய வாய்ப்பு இருந்தது.
இதனையடுத்து விஹாரி அஸ்வின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கடைசி வரை விக்கெட் கொடுக்காமல் இந்த ஜோடி போட்டியை டிரா செய்தது. விஹாரி 161பந்துகள் சந்தித்து 23 ரன்களுடனும் அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வி அடைந்து விடும் என்று நினைத்த நிலையில் இந்த ஜோடி நம்பிக்கை அளித்து விளையாடியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் 15-ம் தேதி தொடங்குகிறது.
பிரிஸ்பேன்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை குயின்ஸ்லாந்து மாகாணாத்தில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கிறது.
இதற்கிடையே பிரிஸ் பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறையை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது. ஓட்டலில் தங்கி இருக்கும்போது தங்களது தளத்தை விட்டு வேறு தளத்துக்கு சென்று வீரர்களை கூட சந்திக்க முடியாது என்று கூறப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் நடைமுறைகளை மதித்து செயல்படுவதாக இருந்தால் மட்டுமே இந்திய அணி பிரிஸ்பேன் வரலாம். இல்லையென்றால் இங்கு வரவேண்டாம் என்று அந்த மாகாண சுகாதாரதுறை எச்சரித்து இருந்தது.
தனிமைபடுத்துவதற்கு இணையான இந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட இந்திய அணி தயக்கம் காட்டியது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து இருந்ததால் இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரகானே இந்த புதிய கெடுபிடிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
இதற்கிடையே அங்கு கடந்த 72 மணி நேரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரிஸ்பேனில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் 4-வது டெஸ்டை பிரிஸ்பேனில் விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹோக்ளே தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி நாளை பிரிஸ்பேன் புறப்பட்டு செல்லும்.






