search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    காயத்தை பொருட்படுத்தாமல் அணிக்காக 256 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி - அஸ்வின் ஜோடி

    ஹனுமா விஹாரி ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரியால் அவதிப்பட்ட நிலையிலும், அஸ்வின் முது வலியால் அவதிப்பட்ட நிலையிலும் அணிக்காக போராடியது பாராட்டுக்குரியது.
    சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 2 வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 98 ரன்கள் எடுத்திருந்தது.

    புஜாரா 9 ரன்களுடனும், ரகானே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் ரஹானே நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார்.

    அதன்பின் புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். முதலில் மெதுவாக விளையாடிய ரிஷப் பண்ட் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி விரைந்தது. ஆனால் ரிஷப் பண்ட் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்பும் இந்தியா வெற்றிக்காக போராட நினைத்தது. ஆனால் அடுத்து வந்த ஹனுமா விஹாரிக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி ஏற்பட்டது. இதனால் தடை ஏற்பட்டது. அதேவேளையில் புஜாரா 77 ரன்கள் எடுத்த  நிலையில் வெளியேறினார்.

    ஹனுமா விஹாரி

    அப்போது இந்தியா 88.2 ஓவரில் 272 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து அஸ்வின் களம் இறங்கினார். இந்தியாவின் வெற்றிக்கு 43.4 ஓவரில் 135 ரன்கள் தேவைப்பட்டது. ஹனுமா விஹாரியால் ஓட முடியாது. அஸ்வின் நேற்று படுக்கச் செல்லும்போது அவருக்கு முதுகுப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் அவரால் குனிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அணிக்காக விளையாட வந்தார்.

    இதனால் தடுப்பாட்டம் ஒன்றே வழி என்ற நிலையில் இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் காயம் ஏற்பட்டிருக்கும் ஜடேஜா களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அந்த நிலை ஏற்படாமல் இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

    விஹாரி 161 பந்தில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்தில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    Next Story
    ×