என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுரவ்  கங்குலி
    X
    சவுரவ் கங்குலி

    இந்த மூன்று பேரும் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள்: கங்குலி

    புஜாரா, பண்ட், அஸ்வின் கிரிக்கெட் அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன் என சவுரவ் கங்குலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா இந்த போட்டியை டிரா செய்தது.

    இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி டுவிட்டர் பக்கத்தில் புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்கி தரமான பந்து வீச்சை எப்போதும் எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல.... கிட்டதட்ட 400 விக்கெட்டுகள் எளிமையாக கிடைக்கவில்லை.. இந்தியா சிறப்பாக எதிர்கொண்டது... தொடரை வெல்வதற்கான நேரம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×