என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு நாள்தோறும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன.

    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கங்களை பெற்று 48-வது இடத்தை பிடித்தது.

    வேறு எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத வகையில் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் வென்றதே சிறந்த நிலையாக இருந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் 86.65 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

    121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையை அவர் பெற்றார்.

    தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு நாள்தோறும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன.

    அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு ரூ.6 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது. பஞ்சாப் அரசு ரூ.2 கோடியும், மணிப்பூர் அரசு ரூ.1 கோடியும் அறிவித்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.1 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.1 கோடியும், எலன் குழுமம் ரூ.25 லட்சமும் நீரஜ் சோப்ராவுக்கு பரிசாக வழங்குவதாக தெரிவித்தன.

    மகேந்திரா குழுமம் சொகுசு காரை பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்டிகோ நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு ஓராண்டுக்கான இலவச பயணத்தை அறிவித்தது.

    இந்தநிலையில் பைஜூஸ் நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இதற்கிடையே நாடுதிரும்பும் நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய தடளக சம்மேளனமும் முடிவு செய்து உள்ளது.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பைஜூஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கமும் பெற்று இருந்தனர்.

    இதற்கிடையே 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு ரூ.1¼ கோடி பரிசுத்தொகை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இதேபோல வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்து இருந்தது.

    21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
    அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி  13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார்.

    பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார்.

    மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.

    வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள் கூட்டத்தில் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்தார்.

    என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு குட் பை சொல்வேன் என்று நினைத்துப்பார்ககவே இல்லை.

    நீண்ட வருடங்களாக இந்த அணிக்காக விளையாடியுள்ளேன். எனக்கு வாழ்க்கையை தந்தது இந்த அணி. ஆனால் தற்போது விடைபெறுவது மிக கடினமாக உள்ளது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை

    என் தலைமையில்  நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. இந்த கிளப்பை விட்டு விலகும் நான் என் வாழ்க்கையை மாற்றும் யதார்த்தத்தை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் நாம் அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நான் அறிமுகமான நேரம், என் கனவு நனவாகியது, பின்னர் வந்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் தொடங்கிய அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன் என கூறினார்

    கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்சிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

    பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், மெஸ்சி இன்னும் வேறு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது.
    டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது.

    கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.

    ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளியுடன் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளியுடன் 3-வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளியுடன் 4வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டிஎன்பிஎல் அட்டவணை

    ‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நாளை (10ம் தேதி) தொடங்குகிறது. சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மோதும்.

    வெளியேற்றுதல் சுற்று நாளை மறுதினம் (11ம் தேதி) நடைபெறுகிறது.  இதில் 3-ம் இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 4-ம் இடம் பிடித்த லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். இது குவாலிபையர் 2 சுற்று ஆகும்.

    13-ம் தேதி நடைபெற உள்ள குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    டிஎன்பிஎல் இறுதிப்போட்டி ஆகஸ்டு 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் குவாலிபையர் 1ல் வென்ற அணியும், குவாலிபையர் 2ல் வென்ற அணியும் மோத உள்ளன.
    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணியின் நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் விளையாடின.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கவுசிக் 8 ரன்களிலும், ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

    மூன்றாவது வீரராக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. உதிரசாமி சசிதேவ் 2 ரன்களும், ஜெகநாத் சீனிவாஸ் 14 ரன்களும், ஹரிஷ் குமார் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சதீஷ், 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

    சோனு யாதவ் (3), சாய் கிஷோர் (3), மதிமாறன் சித்தார்த் (14) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.

    திருச்சி அணி தரப்பில் சரவணகுமார் 3 விக்கெட் எடுத்தார். அந்தோணி தாஸ் 2  விக்கெட், சுனில் சாம், ரகில் ஷா, மதிவண்ணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சந்தோஷ் ஷிவ் 25 ரன்னும்,  அமித் சாத்விக் 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆதித்ய கனேஷ் 24 ரன்கள் எடுத்தார்.

    நிதிஷ் ராஜகோபால் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
    டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நேர்த்தியாக விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ராதாகிருஷ்ணன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு நடைபெற்றுவருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கவுசிக் 8 ரன்களிலும், ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால், மூன்றாவது வீரராக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார்.

    அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. உதிரசாமி சசிதேவ் 2 ரன்களும், ஜெகநாத் சீனிவாஸ் 14 ரன்களும், ஹரிஷ் குமார் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியில் நேர்த்தியாக விளையாடிய ராதாகிருஷ்ணன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சதீஷ், 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

    சோனு யாதவ் (3), சாய் கிஷோர் (3), மதிமாறன் சித்தார்த் (14) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் சரவணகுமார் 3 விக்கெட் எடுத்தார். அந்தோணி தாஸ் 2  விக்கெட், சுனில் சாம், ரகில் ஷா, மதிவண்ணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
    நாட்டிங்காம் டெஸ்டின் கடைசி நாளில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், நாள் முழுவதும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு டிரா ஆனது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து சுருண்டது. இந்தியா 278 ரன்கள் குவித்தது. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (109) சதத்தால் 303 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக 208 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் இந்தியாவுக்கு 209 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.  இந்தியா நேற்றைய 4-வதுநாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்றைய கடைசி நாளில் 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 157 ரன்கள் அடித்தால் வெற்றியை ருசிக்கலாம் என்ற கனவில் இந்தியா களம் இறங்க இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காலையில் இருந்து நாட்டிங்காமில் மழை பெய்து வருகிறது.

    ஆகவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகாவது விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் தேநீர் இடைவேளை வரை போட்டி தொடங்கப்படவில்லை.

    இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. மழை விட்டுவிட்டு பெய்ய ஆரம்பித்ததால், போட்டியை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை. இறுதியாக கடைசி நாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

    இந்திய அணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில், மழையால் அந்த வெற்றி பறிபோனது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக கவுசிக் காந்தி, ஜெகதீசன் களமிறங்கினர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜெகநாத் சீனிவாஸ், ராதாகிருஷ்ணன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஆர்.அலெக்சாண்டர்.

    திருச்சி ரூபி வாரியார்ஸ் அணி: சந்தோஷ் சிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அட்னன் கான், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), ஆந்தோணி தாஸ், ஆகாஷ் சும்ரா, எம்.மதிவண்ணன், சரவண குமார், ரஹில் ஷா (கேப்டன்), சுனில் சாம்.
    லைகா கோவை கிங்ஸ் நிர்ணயித்த 170 ரன் இலக்கை எட்ட முடியாமல், தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் லீக் சுற்றோடு வெளியேறியது நெல்லை ராயல் கிங்ஸ்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பாபா அபராஜித் 28 ரன்களும், சூர்யபிரகாஷ் 36 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இருந்தாலும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களே அடித்தது. இதனால் லைகா கோவை கிங்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    பாபா இந்திரஜித் 35 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை கிங்ஸ் அணியின் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் பெற்றுள்ளது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளும் வெகுமதிகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 வீரர்கள் மற்றும் ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு இலவச பயண சலுகையை இரண்டு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

    பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச பயண டிக்கெட் வழங்கப்படும் என கோ பர்ஸ்ட் (கோஏர்) நிறுவனம் கூறி உள்ளது. அதேபோல் ஸ்டார் ஏர் விமான நிறுவனம், வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமான பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவில் 13 நகரங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.
    நாட்டிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு இன்றைய கடைசி நாளில் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில், மழை குறுக்கீடு செய்துள்ளது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து சுருண்டது. இந்தியா 278 ரன்கள் குவித்தது.

    95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (109) சதத்தால் 303 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக 208 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் இந்தியாவுக்கு 209 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. இந்தியா நேற்றைய 4-வதுநாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்றைய கடைசி நாளில் 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 157 ரன்கள் அடித்தால் வெற்றியை ருசிக்கலாம் என்ற நிலைய இந்தியா களம் இறங்க இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காலையில் இருந்து நாட்டிங்காமில் மழை பெய்து வருகிறது.

    ஆகவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. தேநீர் இடைவேளை வரை போட்டி நடைபெறவில்லை என்றால், டிரா என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. 

    போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன்  நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றார். 

    நிறைவு விழாவில் பங்கேற்ற வீரர்கள்

    நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 

    வாணவேடிக்கை

    விழாவின் முடிவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024-ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    லைகா கோவை கிங்ஸ் அணி 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஷாருக் கான் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஸ்ரீதர் ராஜூ (19 பந்தில் 30 ரன்), சுரேஷ் குமார் 35 பந்தில் 36 ரன்) சிறப்பாக விளையாடினர். ஆனால் அதன்பின் வந்த சாய் சுதர்சன் (0), அதீக் உர் ரஹ்மான் (3), முகிலேஷ் (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இவரின் அதிரடியால் 16-வது ஓவரில் 18 ரன்களும், 17-வது ஓவரில் 10 ரன்களும், 18-வது ஓவரில் 6 ரன்களும், 19-வது ஓவரில் 16 ரன்களும் சேர்த்தது லைகா கோவை கிங்ஸ். இதனால் ஸ்கோர் 150 ரன்னைத் தாண்டியது.

    கடைசி ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ஷாருக் கான் 25 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் அடிக்க லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. ஷாருக் கான் 29 பந்தில் தலா ஐந்து பவுண்டரி, சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    ×