search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    ராதாகிருஷ்ணன் அபாரம் - திருச்சி அணிக்கு 133 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நேர்த்தியாக விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ராதாகிருஷ்ணன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு நடைபெற்றுவருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கவுசிக் 8 ரன்களிலும், ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால், மூன்றாவது வீரராக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார்.

    அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. உதிரசாமி சசிதேவ் 2 ரன்களும், ஜெகநாத் சீனிவாஸ் 14 ரன்களும், ஹரிஷ் குமார் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியில் நேர்த்தியாக விளையாடிய ராதாகிருஷ்ணன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சதீஷ், 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

    சோனு யாதவ் (3), சாய் கிஷோர் (3), மதிமாறன் சித்தார்த் (14) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் சரவணகுமார் 3 விக்கெட் எடுத்தார். அந்தோணி தாஸ் 2  விக்கெட், சுனில் சாம், ரகில் ஷா, மதிவண்ணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
    Next Story
    ×