என் மலர்
விளையாட்டு
உக்ரைனில் உள்ள கால்பந்து வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
லண்டன்:
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மே 28-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியை ரஷியாவிற்கு பதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்த ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் அவசர செயற்குழுவில் முடிவு செய்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை ரஷியா மற்றும் உக்ரைன் கிளப் அணிகள் மற்றும் அந்த நாட்டு தேசிய அணிகளின் போட்டியை பொதுவான இடத்தில் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் ஐரோப்பிய கால்பந்தின் மதிப்புமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியை பிரான்சுக்கு மாற்றுவதற்கு தனது தனிப்பட்ட ஆதரவையும், ஈடுபாட்டையும் காட்டிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது.
உக்ரைனில் இருந்து கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசுடன் இணைந்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு முழுமையான ஆதரவு அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிராக ஜாம்ஷெட்பூர் அணி 3 கோல்கள் அடித்தது.
கோவா:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர்கள் ரால்ட்டெ மற்றும் மார்செலென்கோ தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் டவுன்கெல், கிரெக், ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சீசனில் 24 போட்டிகளில் 304 ரெய்டு பாயிண்டுகள் பெற்ற பவன் ஷெராவத், சிறந்த ரெய்டராக தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூரு:
எட்டாவது புரோ கபடி லீக் பெங்களூருவில் நடைபெற்றறது. அரை இறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் உ.பி. யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின.
பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாகவும், ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 2-வது முறையாகவும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தன.
வெற்றிக் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், டெல்லி-பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி, மாறி மாறி புள்ளிகளை பெற்றதால் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதாவது 37-36 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடைசி நேரத்தில் செய்த தவறால் பாட்னா அணி கோப்பையை இழக்க நேரிட்டது.
இந்த சீசனில் 24 போட்டிகளில் 304 ரெய்டு பாயிண்டுகள் பெற்ற பவன் ஷெராவத், சிறந்த ரெய்டராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் 24 போட்டிகளில் 89 புள்ளிகளைப் பெற்ற முகமதுரேசா ஷாத்லூயி, சிறந்த தடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் புதிய இளம் வீரராக மோகித் கோயத்தும், இந்த சீசனில் மிகவும் மதிப்பு மிக்க வீராக நவீன் குமாரும் (17 போட்டிகளில் 207 ரெயிடு பாயிண்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, சானு புதிய 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்களை மீராபாய் சானு (வயது 27) தங்கப் பதக்கம் வென்றார். முதல் முறையாக 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். 167 கிலோ எடையை தூக்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெசிகா இண்டாவது இடத்தையும், மலேசியாவின் எல்லி காசந்திரா (165 கிலோ) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், புதிதாக சேர்க்கப்பட்ட 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க மீராபாய் சானு தகுதி பெற்றுள்ளார்.
சானு தனது காமன்வெல்த் போட்டி தரவரிசையின் அடிப்படையில் ஏற்கனவே 49 கிலோ எடைப் பிரிவிலும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். எனினும், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, சானு புதிய 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் இந்தியாவின் சங்கத் சாகர் (55 கிலோ எடைப்பிரிவு), ரிஷிகாந்த சிங் (55 கிலோ எடைப்பிரிவு), பிந்தியாராணி தேவி (59 கிலோ எடைப்பிரிவு) ஆகியோரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தனர்.
பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியான சிங்கப்பூரி சர்வதேச போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்-வீராங்கனைகள் நேரடியாக காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் சேர்த்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 276 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரடிப்படி இன்று அதிகாலை தொடங்கியது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் டீன்எல்கர், சரல் எர்வீ களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர்.
டீன்எல்கர் 41 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் மார்க்ராம் களம் வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரல் எர்வீ தனது முதல் சதத்தை அடித்தார்.
தேனீர் இடைவெளியின் போது தென்ஆப்பிரிக்கா 58 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. சரல் எர்வீ 100 ரன்னுடனும், மார்க்ராம் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இடைவெளி முடிந்து மீண்டும் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி சிறிது நேரத்தில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக ஆடி சதம் அடித்த சரல் எர்வீ, மட் ஹென்றி ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தாக ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் களமிறங்கினார். இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 103 பந்துகளை சந்தித்த மார்க்ராம் 42 இருந்த நிலையில் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது.
ஆமதாபாத்தில் தொடங்கியுள்ள ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் (டி பிரிவு) நடப்பு சாம்பியனான சவுராஷ்டிரா அணி 4 விக்கெட்டுக்கு 325 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆமதாபாத்:
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. கவுகாத்தியில் நடக்கும் சத்தீஷ்காருக்கு (‘எச்’ பிரிவு) எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. இரட்டை சகோதரர்களான பாபா அபராஜித் (101 ரன், 197 பந்து, 8பவுண்டரி, 2 சிக்சர்) , பாபா இந்திரஜித் (127 ரன், 141 பந்து, 21 பவுண்டரி) சதம் விளாசினர். அபராஜித்துடன், ஷாருக்கான் (28 ரன்) களத்தில் உள்ளார்.
இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்திலேயே இரு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்த டெல்லி வீரர் யாஷ் துல் இந்த முறை 5 ரன்னில் கேட்ச் ஆகிப்போனார்.
ஆமதாபாத்தில் தொடங்கியுள்ள ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் (டி பிரிவு) நடப்பு சாம்பியனான சவுராஷ்டிரா அணி 4 விக்கெட்டுக்கு 325 ரன்கள் சேர்த்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தடுமாறியதால் உள்ளூர் போட்டிக்கு திரும்பிய புஜாரா 8 ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதே போல் கோவாவுக்கு எதிராக (டி பிரிவு) களம் இறங்கிய 41 முறை சாம்பியனான மும்பை அணி 52.4 ஓவர்களில் 163 ரன்னில் சுருண்டது. சர்ப்ராஸ் கான் (63 ரன்) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய மூத்த வீரர் அஜிங்யா ரஹானே டக்-அவுட் ஆனார். அவரை வேகப்பந்து வீச்சாளர் லக்ஷய் கார்க் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
ஜடேஜாவை டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்த விரும்புகிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
லக்னோ:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நேற்று லக்னோவில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. இஷான்கிஷன் 56 பந்தில் 89 ரன் எடுத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுத்தது. இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா 53 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் புவனேஸ்வர்குமார், வெங்டேஷ் அய்யர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இஷான்கிஷனின் மன நிலையும், திறமையும் எனக்கு தெரியும். அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 6 ஓவர்களுக்கு பிறகு அவர் நல்ல அடித்தளத்தை உருவாக்கினார். அது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இடைவெளிகளை கண்டறிந்து பந்துகளை விளாசினார்.
ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து இன்னும் அதிகமானவற்றை நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் அவரை முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம்.
வர இருக்கும் போட்டிகளில் இனி அதை நீங்கள் பார்க்கலாம். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்த விரும்புகிறோம்.
பெரிய மைதானங்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அங்குதான் நீங்கள் பேட்ஸ்மேனாக சோதிக்கப்படுகிறீர்கள்.
நாங்கள் சில கேட்ச்களை கைவிட்டோம். எங்களது பீல்டிங் பயிற்சியாளருக்கு சில வேலைகள் உள்ளன என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2-வது 20 ஓவர் போட்டி நாளை தர்மசாலாவில் நடக்கிறது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 123 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 26 அரைசதம் உள்பட 3,307 ரன்கள் எடுத்துள்ளார்.
லக்னோ:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்த போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (3,299 ரன், 112 ஆட்டம்) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து அசத்தினார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி (3,296 ரன்களுடன், 97 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி லீக் தொடரில் இதுவரை பாட்னா அணி 4-வது முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது
பெங்களூரு:
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அரை இறுதியில் பாட்னா பைரட்ஸ் உ.பி.யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது.
அந்த அணியில் சச்சின் ரைடிலும், சியானி டேக்கிளிலும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்கள். அவர்களையே அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.
தொடர்ந்து 2-வது முறையாக இறுதி சுற்றுக்குள் வந்துள்ள ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணியில், நம்பிக்கை நட்சத்திரமாக நவீன் குமார் வலம் வருகிறார். இறுதிப்போட்டியிலும் அவர் ஆதிக்கம் செலுத்தினால் டெல்லி அணியின் கோப்பை கனவு நனவாகுவதில் சிக்கல் இருக்காது.
சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இறுதி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
கோவா:
ஐ.எஸ்.எல். 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறை காரணமாக கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 5 வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ரெடீம் ஒரு கோல் அடித்தார்.
பதிலுக்கு ஆட்டத்தின் 8 வது நிமிடத்தில் மோகன் பகான் அணி சார்பில் அந்த அணி வீரர் ஜோனி கவுகோ ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரையில் இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் போடவில்லை.
இதனால் ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
பிட்இந்தியா, கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற விளையாட்டு வீர்ர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
சேலம்:
கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக, சாம்பியனை சந்தியுங்கள் என்கிற தொலைநோக்குத் திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்களில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் விதமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதன்படி, பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இரு முறை பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த
மாரியப்பன், தமது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் பள்ளி மாணவர்களை சந்தித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாரியப்பனுக்கு நூற்றுக்கணக்கான விளையாட்டு வீர்ர்கள் தேசியக் கொடியை அசைத்து பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒலிம்பிக் வீர்ர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் வீடியோ தொகுப்பு ஒளிபரப்ப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டி அனுபவம், உணவு பழக்கம், கிராமத்தில் இருந்து ஒலிம்பிக் வரை செல்லும் போது சந்தித்த சவால்கள் குறித்து மாணவ-மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு மாரியப்பன் பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாராலிம்பிக் வீர்ர் மாரியப்பன் கூறியதாவது.
கிராமப் பகுதிகளில் இருந்து அதிக விளையாட்டு வீர்ர்கள் வரவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். பிட்இந்தியா, கேலோ இந்தியா போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்தன. பிரதமர் மேற்கொள்ளும் தொடர் முயற்சியின் காரணமாக, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா குறைந்தபட்சம் 100 பதக்கங்களையாவது வெல்லும் வாய்ப்புள்ளது.
அடுத்தபடியாக, உலக சாம்பியன் மற்றும் ஆசியப் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன். சேலத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை இழை ஓடுதள மைதானம் வரவிருக்கிறது.
இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனது சொந்த விளையாட்டு அகாடெமியை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளேன். இவ்வாறு மாரியப்பன் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ளன. மேலும், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், 40 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த ஆண்டு லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில், மும்பையின் வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே ஸ்டேடியம் ஆகியவற்றில் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன.
மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். துவக்கத்தில் அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் 40 சதவீதமாக இருக்கும். கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால், முழு அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்பு உள்ளது.






