என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • உணவுக்கட்டுப்பாடு சார்ந்த வழிகாட்டுதல்கள் போன்ற பாடங்கள் இடம்பெறும்.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உணவியல் நிபுணர்கள்.

    நாம் உண்ணும் உணவு உற்பத்தி செய்யப்படுவது முதல், நமது உடலுக்குள் உணவாகச் செல்வது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் அறிவியல் நுட்பங்களுடன் ஆராய்ந்து படிப்பதுதான் உணவு அறிவியல் (Food Science) துறை. ஏறக்குறைய வேளாண் அறிவியலின் அடிப்படையையும், ஊட்டச்சத்து அறிவியலின் நுட்பங்களையும் ஒருங்கிணைத்துப் படிப்பதாகும்.

    இவ்வகையான படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள், 12-ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களுடன் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் போன்ற அறிவியல் பிரிவு பாடங்களைப் படித்திருக்க வேண்டும். தகுதியான பாடப்பிரிவுகளைப் படித்தவர்கள், B.Sc Food Science, B.Sc Food and Nutrition, B.Sc Nutrition and Dietetics, B.Sc Home Science போன்ற இளங்கலை படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

    இத்துறையின் இளங்கலை பிரிவில், உணவு அறிவியலுடன், அவ்வுணவை எவ்வாறு சமைத்துக்கொடுத்தால், எந்த நோயைக் குணப்படுத்தலாம் என்று படிப்பது, டயட்டடிக்ஸ் எனப்படுகிறது.

    நோய்களுக்கான உணவுமுறை அல்லது உணவுக்கட்டுப்பாடு தொடர்பான படிப்பு என்பதால், மருத்துவம் சார்ந்த உடலியங்கியல் அடிப்படைகளையும், நோயியல் சார்ந்த அடிப்படைகளையும் பாடப்பிரிவுகளாகக் கொண்டுள்ளது. மனித உடலியங்கியல், உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள், அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான உணவு முறை மாற்றங்கள், உணவுக்கட்டுப்பாடு சார்ந்த வழிகாட்டுதல்கள் போன்ற பாடங்கள் இடம்பெறும்.

    இவ்வகையான இளங்கலை பாடப்பிரிவுகளில், உணவுப் பொருட்களை உருவாக்குவது, பக்குவப்படுத்துவது, உணவு பதப்படுத்துவது, உணவிலுள்ள அறிவியல் கூறுகளை ஆராய்ந்துப் படிப்பது, உணவு வேதியியல், புலன் உணர்வுச் சோதனைகள், உணவின் தரம் பரிசோதிக்கும் செயல்முறைகள், உணவிலிருக்கும் நுண்ணுயிர்கள், அவற்றிற்கான சோதனைகள் போன்றவை இடம்பெறும். இதற்கடுத்து அதே படிப்பில் M.Sc முதுகலைப் படிப்பையும், Ph.D முனைவர் ஆராய்ச்சிப் முடிப்பவர்களுக்கு அடுத்த சிறப்பு நிலை பணி வாய்ப்புகள் அதிகம்.

    இளங்கலைப் படிப்புகளை முடித்தவர்களுக்கு கீழ்க்காணும் பொதுவான பணி வாய்ப்புகள் உறுதியாகக் கிடைக்கும்.

    புதிய உணவுப்பொருட்களின் மூலப்பொருட்கள் அல்லது சேர்மானங்களை உருவாக்கும் வல்லுனர்கள்

    உணவு உற்பத்தித் தொழிற்சாலைகளில் உணவின் சுவை, நிறம், வாசனை, தன்மை, தோற்றம் உள்ளிட்ட புலன் சாாந்த காரணிகளை உறுதிப்படுத்தும் வல்லுனர்கள்

    உணவு நுண்ணறிவியல் வல்லுனர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு வல்லுனர்கள்.

    உணவுத் தொழிற்சாலைகளில் உணவு வேதியியல் வல்லுனர்கள்.

    உணவுப் பதப்படுத்தும் தொழிற்–சாலைகளில் பொறியியல் வல்லுனர்கள்.

    உணவுத் தரக் கட்டுப்பாடு அதிகாரிகள்.

    இவற்றுள், மிகக் குறிப்பாக டயட்டடிக்ஸ் என்ற படிப்பை மட்டும் இளங்கலை, முதுகலை என்று படிப்பவர்களுக்கு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காரணம் தற்போது பெருகி இருக்கும் நீரிழிவு, உடற்பருமன், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றிற்கு அந்த குறிப்பிட்ட துறை சார்பு சிறப்பு மருத்துவ உணவியல் வல்லுனர்கள் மருத்துவமனைகளில் அதிகம் தேவைப்படுகிறார்கள். இவர்கள் கீழ்க்காணும் பணிகளுக்குத் தகுதிபெற்றவர்கள்.

    வண்டார்குழலி ராஜசேகர்

    வண்டார்குழலி ராஜசேகர்

    * அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உணவியல் நிபுணர்கள்.

    * பதிவு செய்யப்பட்ட உணவியல் வல்லுனர்கள் (முதுகலைப் படிப்பை முடித்து, ஆறு மாதகால மருத்துவமனை பயிற்சியுடன் தேர்வும் எழுத வேண்டும்).

    * உதவி ஆராய்ச்சியாளர்கள், இணை ஆராய்ச்சியாளர்கள், அரசு சாரா உணவு அமைப்புகளில் முதன்மை உணவியல் வல்லுனர்கள்

    * உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சைக்கான உணவியல் வல்லுனர்கள்

    நியூட்ரிஷன் படிப்பில் மேலும் பல பாடப்பிரிவுகள் உள்ளன. அவை:

    பொதுநலன் தொடர்பான உணவியல் வல்லுனர்கள்:

    பொதுமக்களிடையே பரவலாகக் காணப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான குறைபாடுகளான ரத்த சோகை, வைட்டமின் ஏ குறைபாடு, அயோடின் சத்து குறைபாடு, நீரிழிவு நோய் போன்றவற்றிற்கான உணவு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை நேரடியாக மக்களுக்குக் கொடுக்கும் பணி யைச் செய்யும் பொது நலன் சாாந்த உணவியல் வல்லுனர்கள்.

    இந்த வகை உணவியல் வல்லுனர்கள் உலக சுகாதார மையம் UNICEF பிற நல வழித்துறை அமைப்புகளிலும், அரசு மற்றும் அரசு சாராத உணவும் உடல் நலனும் சார்ந்த நிறுவனங்களிலும், உணவு சார்ந்த ஒழுங்குமுறை ஆணையங்களிலும், உணவியல் தொடர்பான பத்திரிகைத் துறையிலும் பணியாற்றலாம். அழகுக் கலை நிபுணர்களுடன் உணவியல் வல்லுனர்களும் தற்போது கைகோர்த்துச் செயல்படும் நிலையை திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணலாம். இவ்வாறான சுய வேலைவாய்ப்புகளும் உண்டு.

    விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு வகையான விளையாட்டுப் பயிற்சிகள், தடகளப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வீரர்களுக்கான பிரத்யேகமான உணவுகளைப் பரிந்துரை செய்து, வீரர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தி, அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவான உடல் அமைப்பிற்குத் தேவையான வழிகாட்டுதல்களைக் கொடுப்பவர்கள் விளையாட்டுத் துறைக்கான சிறப்பு உணவியல் வல்லுனர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.

    தற்போது, அரசு மற்றும் தனியார் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் நட்சத்திர வீரர் வீராங்கனைகளுக்குத் தனிப்பட்ட முறையிலும் உணவியல் வல்லுனர்களாக, உணவியல் ஆலோசகர்களாகப் பணியமர்த்திக் கொள்ளப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல், உடற்பயிற்சிக் கூடங்களில் உணவியல் வல்லுனர்கள், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சிறப்புணவுகள் தயாரிக்கும் உணவு நிறுவனங்களில் உணவியல் வல்லுனர்கள், ஆலோசகர்கள், அரசு சார்ந்த விளையாட்டு அமைப்புகளில் உணவியல் வல்லுனர்கள் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இத்துறையில் பயின்றவர்களுக்கு உண்டு.

    உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் - உணவு தொழில்நுட்பவியல் (Food science and Technology / Food Technology)

    12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் B.Sc Food science and Technology மற்றும் B.Sc Food Technology படிப்பதற்குத் தகுதி பெறுகிறார்கள்.

    இந்தியாவின் மொத்த உணவுச் சந்தையின் சதவீதத்தில் 32 சதவீதம் உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகளின் பங்கு பிரதானமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளைவிட மிகப்பெரியது இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் துறை. இதன் மூலகாரணம் இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டு வரும் உணவுத் தொழில்நுட்பவியல் துறையும் அது சார்ந்த பிற துறைகளும்தான். உணவுத் தொழில்நுட்பவியல் படித்தவர்கள் கீழ்க்கண்ட துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

    *உணவு தொழிற்சாலைகள் மற்றும் உணவு ஆராய்ச்சி நிலையங்களில் உணவியல் துறையில் உணவு அறிவியல் வல்லுனர்கள்.

    *உணவுத் தணிக்கையாளர்.

    *உணவு சார்ந்த சுயதொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சியாளர்கள்.

    *உணவுத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

    *உணவுப் பொருட்களின் புலன் சார்ந்த வல்லுனர்கள்.

    *உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளில் காணப்படும் ஊட்டச்சத்து தொடர்பான Food Labels எழுதும் உணவியல் சார்ந்த தொழில் நுட்ப எழுத்தாளர்கள்.

    *உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பகளில் அதிகாரிகள்.

    புதுச்சேரியில் இத்துறை தொடர்பான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்:

    1. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி

    * B.Sc Clinical Nutrition and Dietetics

    * Ph.D Home Science

    2. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்

    * M.Sc. Food Service Management

    & Dietetics

    3. அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்

    * B.Sc Home Science

    4. புதுவைப் பல்கலைக் கழகம்

    * M.Sc.Food Science and Nutrition

    * M.Sc.Food Science and Technology

    * Ph.D.Food Science and Nutrition

    * Ph.D.Food Science and Technology

    5. ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி

    *B.Sc Nutrition and Dietetics

    6. மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்

    *B.Sc Clinical Nutrition

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுவதால், அந்த கல்லூரிகளின் பெயர்கள் உள்ளிட்ட பிற தகவல்களை கீழ்க்காணும் வலைத்தள இணைப்பு களுக்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

    https://avinuty.ac.in/maincampus/

    https://www.indiacollegeshub.com/colleges/bsc-home-science-colleges-in-tamil-nadu.aspx

    https://www.shiksha.com/science/colleges/b-sc-home-science-colleges-tamil-nadu

    https://www.shiksha.com/medicine-health-sciences/dietics-nutrition/colleges/colleges-tamil-nadu?st[]=123&sp[]=244&uaf[]=specialization&rf=filters

    https://www.collegesearch.in/bsc/colleges-tamil-nadu

    • நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.
    • மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது.

    உத்வேகம் ஊட்டும் இந்தப் பெண்மணி தான் நியூரோ பிசியாலஜி எனப்படும் மூளை இயலை முதலில் நிறுவியவர். மனித மூளை, நினைவாற்றல் உள்ளிட்ட மூளை சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளையும அதன் அடிப்படையிலான உண்மைகளையும் கண்ட "மூளைப் பெண்மணி" இவர். 105 வயதான இவர் இன்றும் துடிப்புடன் இயங்குகிறார் என்பது ஆச்சரியகரமான ஒரு உண்மை!

    பிறப்பும் இளமையும்: இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 15-6-1918 அன்று பிரெண்டா மில்னெர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்போர்ட் ஒரு இசை விமர்சகர், பத்திரிகையாளரும் கூட. தாயார் ஒரு பாடகி. தந்தை, தாய் ஆகிய இருவரும் இசைத் துறையில் நிபுணர்களாக இருந்தாலும் கூட பிரெண்டாவிற்கு இசையில் ஒரு லயிப்பு ஏற்படவில்லை.

    1918-ல் ஏற்பட்ட இன்புளுயென்சா நோயில் தாயாரும் குழந்தையும் பீடிக்கப்பட்டு ஒரு வழியாக பிழைத்துக் கொண்டனர்.

    கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்த பிரெண்டா உளவியல் பிரிவில் சேர்ந்தார். பட்டத்தையும் பெற்றார்.

    19 வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய இவருக்கு மூளை பற்றிய ஆய்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

    நியூரோ பிசியாலஜி என்று அறியப்படும் நரம்பு இயங்கு இயலை ஒரு புதிய துறையாக இவரே கண்டுபிடித்து நிறுவினார்.

    நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.

    மூளை: மனித மூளை ஒரு சிக்கலான உறுப்பு. இதைப் பற்றிய ஆயிரம் அதிசய தகவல்கள் உண்டு. பிரமிக்க வைக்கும் சில தகவல்கள் இதோ:

    மூளையில் 73 சதவீதம் நீர் தான் உள்ளது.

    2 சதவீதம் டீ-ஹைட் ரேஷன் ஏற்பட்டால் நமது கவனிக்கும் சக்தி, நினைவாற்றல் எல்லாம் போய்விடும். மூளையின் எடை ஆண் என்றால் 1370 கிராம். பெண் என்றால் 1200 கிராம். உடல் எடையில் இது 2 சதவீதம் தான். ஆனால் 20 சதவீத ஆக்சிஜனை இது எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

    நமது மூளையில் எத்தனை செல்கள் (உயிரணுக்கள்) இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று போல் இன்னொரு உயிரணு இல்லை. 3300 வகையான உயிரணுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் குறைந்தபட்சம் நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) உயிரணுக்கள் இருக்கலாம். நூறு கோடி நரம்பிணைப்புகள் இருக்கலாம். இவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தகவலைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.

    மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது. இங்கு தகவல் மணிக்கு 268 மைல் வேகம் என்ற வேகத்தில் செல்கிறது. (பார்முலா ஒன் ரேஸ் காரின் உயர்ந்தபட்ச வேகம் மணிக்கு 240 மைல் தான்!) ஒவ்வொரு நியூரானும் ஒரு விநாடிக்கு ஆயிரம் நரம்புத்தாக்கம் (IMPULSE) ஏற்பட பல்லாயிரம் நரம்பிணைப்பு தொடர்புகள் மற்ற நியூரான்களுடன் ஏற்படுகின்றன.

    ச.நாகராஜன்

    ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் மூளையின் மூலம் 70000 எண்ணங்களை எண்ணுகிறோம். அதாவது ஒரு நிமிடத்திற்கு 48.6 எண்ணங்கள் என்ற அளவில் எண்ணுகிறோம். மூளையால் 50000 வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு நிமிடமும் 750 முதல் 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியே பாய்கிறது.

    கண் இமைக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் - நீங்கள் பார்க்கும் காட்சியை கண் அனுப்ப அதை 13 மில்லி வினாடிகளில் மூளை உணர்ந்து கொள்கிறது. மூளையில் 400 மைல் நீளம் என்ற அளவில் ரத்த நாளங்கள் உள்ளன. 25 வயதில் தான் மூளை முழு வளர்ச்சியை அடைகிறது. தொடர்ந்து மூளை இயக்கத்திற்கு ஆக்சிஜன் தேவை. ஐந்து நிமிடம் ஆக்சிஜன் இல்லையென்றால் மூளை சேதப்படும்.

    மூளையின் சேமிக்கும் திறனை முழுவதுமாக இன்னும் அறிய முடியவில்லை.

    எல்லையற்ற அளவில் அது சேமிக்கும் திறனைக் கொண்டது. இப்படி மூளை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம் - முடிவில்லாமல்!

    ஒன்பது வகை அறிவு: மனிதனுக்கு ஒன்பது வகை அறிவு உண்டு என்று அறிவியல் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    மொழி வகையிலான அறிவு- LINGUISTIC, 2) தர்க்கரீதியிலான அறிவு - LOGICAL - MATHEMATICAL, 3) பார்ப்பதன் மூலம் வருகின்ற அறிவு, மற்றும் இடம் பற்றிய அறிவு - VISUAL AND SPATIAL 4) உடல் இயக்கத்தில் இருக்கும் அறிவு - BODILY KINESTHETIC 5) இசை அறிவு- MUSICAL 6) தனி மனித உறவு சார்ந்த அல்லது நபர்களுக்கு இடையேயான அறிவு - INTERPERSONAL 7) தன்னைப் பற்றிய அறிவு - INTRAPERSONAL 8) இயற்கையின் அறிவு - NATURALISTIC. 9) புறநிலை பற்றிய அறிவு - EXISTENTIAL.

    ஆக இவற்றை கல்விப் பயிற்சியின் மூலம் திறம்படக் கூட்டிக் கொள்ளலாம். மூளையைப் பற்றிய பல தவறான தகவல்களை அறிவியல் தகர்த்து வருகிறது. மூளையைத் தீவிரமாக ஆராய்ந்த பிரெண்டா, அறிவியல் ரீதியாக மூளை பற்றிய சரியான புது தகவல்களைத் தந்தார்.

    நினைவாற்றல்: நினைவாற்றல் ஆய்வில் இறங்கிய பிரெண்டா, இருவகை நினைவாற்றல் நமக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒன்று நிகழ்வு நினைவாற்றல் இன்னொன்று செய்முறை நினைவு.

    தகவல்களை ஒழுங்கு படுத்துவதில் மூளையின் முன் மடல்களுக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை அவர் கண்டுபிடித்தார். இப்படி அவர் கண்டுபிடித்த தகவல்கள் மூளை கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட தீவிரமான வியாதிகளைத் தீர்க்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க உதவியது. 'வாடா' என்ற ஒரு சோதனை மூலம் இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவில் முன்னிலைப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் நிரூபித்தார்.

    சாதனையான சோதனை: ஒரு முறை ஹார்ட்போர்ட் என்ற இடத்திற்கு ஒரு நோயாளியைப் பார்க்க உடனே வருமாறு பிரெண்டாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்த அவர் ஹென்றி மொலைசன் (ஹெச் எம் என்று பின்னால் அனைவராலும் குறிப்பிடப்பட்டார் இவர்) என்பவரைக் கண்டார்.

    அவருக்கு தான் அன்றாடம் செய்யும் செயல்களே நினைவில் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்து போன பிரெண்டா இரு சோதனைகளை அவரிடம் மேற்கொண்டார். 1955, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த சோதனை பற்றியும் 1957-ல் ஹெச். எம் மீது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையும் 1957-ல் உலகிற்குத் தெரிய வந்தது. சுமார் 2500 ஆய்வுப் பேப்பர்களில் இந்த சோதனை மேற்கோளாகக் காட்டப்படும் அளவு இது வரலாற்று பிரசித்தி பெற்ற சோதனையாக ஆனது.

    இதில் தான் ஹிப்போகாம்பஸ் என்ற மூளையின் பின் மேடு, இதுவரை நினைவாற்றல் பற்றிய எந்த விஷயத்திலும் அறிஞர்களால் பார்க்கப்படாமல் இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் பிரெண்டா சுட்டிக் காட்டினார்.

    ஒரு சுவையான விஷயம் ஹெச். எம். மீதான அவரது தொடர் சோதனை 50 ஆண்டுகள் தொடர்ந்தன.

    குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை பற்றிய பல புதிய உண்மைகள் உலகிற்குத் தெரிய வந்தன.

    வலிப்பினால் அவதிப்பட்ட ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய காலம் பற்றிய அனைத்தையும் மறந்தார். ஆனால் அவரால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் மனித மூளையில் நினவாற்றலைக் கொள்ளும் பல்வேறு அடுக்குகள் உள்ளன என்பதை பிரெண்டா தன் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தார். மூளையின் பல்வேறு பகுதிகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்க இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.

    விருதுகள்: ஏராளமான விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவரை கவுரவித்தன. 2020- ல் மில்னெர் 25 கவுரவ பட்டங்களைப் பெற்றிருந்தார்.

    நன்கொடை: அவருக்கு வந்த பரிசுத் தொகை ஏராளமாகக் குவிந்தது. ஆகவே பத்து லட்சம் டாலர்களை அவர் மாண்ட்ரீல் நியூராலஜிகல் இண்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடையாக அளித்தார்.

    குடும்பம்: 1941-ல் பிரெண்டாவிற்கான நிதி உதவி தீர்ந்து விடவே அவர் பிரிட்டனின் சப்ளை அமைச்சகத்தில் சேர வேண்டி நேர்ந்தது. அங்கு ராடாரை இயக்கும் ஆபரேட்டர்களில் எந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அங்கு தான் அவர் பீட்டர் மில்னெர் என்ற ஆய்வாளரைச் சந்தித்தார். ராடார் ஆய்வில் ஈடுபட்டிருந்த இருவரும் 1944-ல் மணம் புரிந்து கொண்டனர். கணவருடன் கனடா சென்று அங்கு குடியேறினார் பிரெண்டா. ஆனால் 1970-ல் தனது கணவரை விவாகரத்து செய்தார் பிரெண்டா.

    நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்: 2018-ம் ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை பிரெண்டா கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில், 'தான் இன்னும் பல பிறந்த நாள்களைப் பார்க்க வழி கோலப் போவதாகச்' சொன்னார். நூறாவது வயதிலும் அவர் தனது வேலையை விடவில்லை. ஆராய்ச்சிகளையும் விடவில்லை. 101 வயதிலும் கூட மாண்ட்ரீலில் உள்ள மக்கில் பல்கலைக் கழகத்தில் பிரெண்டா பணியாற்றி வந்தார் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை!

    இளைஞர்களுக்கு பிரெண்டாவின் அறிவுரைகள்: பொருள் பொதிந்த வழிகாட்டுகின்ற அறிவுரைகளை பிரெண்டா அனைத்து இளைஞர்களுக்கும் தருகிறார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று இது:

    தப்பான ஒரு பணிக்களத்தில் அல்லது வேலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் அதை உடனே மாற்றத் தயங்காதீர்கள். (நான் மட்டும் என் பணியை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்) சாதாரண ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஒரு கணித ஆசிரியையாகவே இருந்திருப்பேன்"

    மிகத் துணிச்சலுடன் தனக்கு ஒவ்வாத ஒரு தொழிலில் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட பிரெண்டா உடனே நரம்பியலில் தன் பணியைத் தொடங்கி அதிலேயே ஆய்வு செய்து முன்னேறினார்.

    ஆகவே நீங்கள் விரும்பும் ஈடுபாடுடன் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் என்பதே இவரது முக்கியமான அறிவுரை!

    இப்போது இவருக்கு வயது 105.

    மூப்பின் முதிர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர் தொடர்ந்து தன் ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்! மூளை இயலில் புது வழி காட்டிய இவரை சாமான்யன் முதல் மேதை வரை (மூளை உள்ள அனைவரும்) மறக்க முடியுமா என்ன?

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது.
    • ரிஷப ராசிக்கு செவ்வாய் 7,12ம் அதிபதி. செவ்வாய் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.

    செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காராகன் தைரிய வீரியத்திற்குரிய கிரகம்.

    மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும்.

    இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம்மிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே. அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டிமன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். ஆனால் சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்திய ரீதியான பலனை தனது தசை, புத்தி காலங்களில் நிச்சயம் வழங்கும். இனி பனிரெண்டு ராசிக்கும் செவ்வாய் தோஷ பரிகாரங்களைக் காணலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு செவ்வாய் ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. செவ்வாய் ஆட்சி, உச்சம், சுயசாரம் பெறக் கூறாக் கூடாது. ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஏற்பட்டாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். செவ்வாய் பலம் பெற்றால் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் என வசதியாக வாழ்வார்கள். இதற்கு அசுப கிரகம் சம்பந்தம் இருந்தால் வாஸ்து குறைபாடு சொத்து தொடர்பான மன உளைச்சல் இருக்கும். செவ்வாய் அஷ்டமாதிபதி என்பதால் சிலருக்கு அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, வெளிநாட்டு வாழ்கை போன்றவைகள் அமையும். செவ்வாய் தசை, புத்தி காலங்களில் ஒரு வம்பு, வழக்கு, சர்ஜரி, தீராத நோய், கடன் இருந்தே தீரும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வேண்டும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு செவ்வாய் 7,12ம் அதிபதி. செவ்வாய் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.

    செவ்வாய் களத்திர ஸ்தான அதிபதி என்பதால் செவ்வாய் பலம் குறைந்தால் கால தாமத திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரிந்து வாழும் நிலை ஏற்படும். செவ்வாய்க்கு சனி, ராகு, கேது சம்பந்தம் இருந்தால் விவகாரத்து வரை செல்லும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவை ஏற்படுத்தும். செவ்வாய் விரயாதிபதி என்பதால் செவ்வாய் தசை, புத்தி காலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள் அல்லது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வார்கள். சிலர் தனிமையாகவோ, யாருக்கேனும் அடிமையாகவோ இருப்பார்கள். சிலர் சிறை தண்டனை அனுபவிப்பார்கள். சிலர் படுக்கையில் காலம் கழிப்பார்கள். இவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும்.

    பரிகாரம்: செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு செவ்வாய் 6, 11ம் அதிபதி. 6ம் இடத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பல்ல. 6ம் அதிபதி என்பதால் விரைவில் நோய், கடன் தாக்கும். சுய தொழிலில் மிகுதியான கடன், வம்பு, வழக்கு பண இழப்புகள் ஏற்படும். அதே நேரத்தில் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாய்க்கு சந்திரன் சம்பந்தம் சந்திர மங்கள யோகமாக செயல்படும். செவ்வாய்க்கு குரு சம்பந்தம் குருமங்களமாக செயல்படும். சிலருக்கு செவ்வாய் தசை காலங்களில் மறுமணம் நடக்கும். சிலருக்கு இந்த காலங்களில் யாருக்கும் தெரியாத ரகசிய குடும்பம் அமையும். இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். அதனால் செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் தசை முடியும் முன்பு கடன், நோய் நிவர்த்தியாகும்.

    பரிகாரம்: செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

    கடகம்

    கடக ராசிக்கு செவ்வாய் 5, 10ம் அதிபதியாக இருப்பதால் ஆட்சி, உச்சம் என சுப வலுப்பெறுவது நல்லது. செவ்வாய் கடகத்திற்கு ஏக யோகாதிபதி. செவ்வாய் சுப வலுப்பெற்றால் பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடி வரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர்களால் இவர்களுக்கும் இவர்களால் புத்திரர்களுக்கும் பயன் உண்டு. அதிர்ஷ்ட தேவதை வசப்படுவாள். குல தெய்வ கடாட்சம் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். செவ்வாய் ஏக யோகாதிபதி என்பதால் சனி ராகு, கேது சம்பந்தம் பெறாத வரை செவ்வாய் தசை வரமான காலம். செவ்வாய் சுப வலுப் பெற்ற கடக ராசியினர் பாக்கியவான்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பூர்வீகத்தில் வாழ முடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குல தெய்வ அருள் கிடைக்காது.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்து வரும் கடக லக்னத்தினருக்கு தொடர் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு செவ்வாய் 4,9ம் அதிபதி. செவ்வாய் ஒரு கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதி. இவர்களுக்கு செவ்வாய் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்றால் அபரிமிதமான சுப பலன் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி சொத்து அதிகம் இருக்கும். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். செவ்வாய் தசை, புத்தி காலங்களில் டிரஸ்ட், தர்ம ஸ்தாபனங்கள் அமைத்தல், கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்வதால் நன்மைகள் இரட்டிப்பாகும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    கன்னி

    கன்னி ராசிக்கு செவ்வாய் 3, 8ம் அதிபதி. செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் வாழ்வியல் மாற்றம் தரும் இடப் பெயர்ச்சி கிடைக்கும். உள்ளத்தில் தைரியம், தெம்பு இருக்கும். அண்டை, அயலார் உதவியாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களால் சகாயம் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாகும். நிம்மதியான தூக்கம், நல்ல வெளிநாட்டு வாழ்க்கை அமையும். செவ்வாய் அசுப பலம் பெற்றால் செவித்திறன் குறையும் . அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். முக்கிய ஆவணங்கள் தொலைந்து போகும். ஞாபகமறதி அதிகமாகும். சொத்து தொடர்பான பாகப் பிரிவினையில் குழப்பம் உருவாகும். உடன் பிறந்தவர்களால் மிகுதியான விரயம் இருக்கும். தனிமையாகவோ, யாருக்கேனும் அடிமையாகவோ இருப்பார்கள். சிலர் சிறை தண்டனை அனுபவிப்பார்கள். சிலர் படுக்கையில் காலம் கழிப்பார்கள். சிலருக்கு விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு உண்டாகும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை புதன் ஓரையில் வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு செவ்வாய் 2,7ம் அதிபதி. இனிமையான இல்வாழ்க்கை அமையும். வாக்கு சாதுர்யத்தால் குடும்ப உறுப்பினர்களின் அன்பை பெறுவார்கள். இவர்கள் பேச்சில் கவுரவம், அதிகார தோரணை இருக்கும். சமுதாயத்தில் தலை சிறந்த மனிதனாக உயருவார்கள். வார்த்தைகளில் உண்மை, நிதானம், நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்ளும் சூட்சமம் உண்டாகும். சொல்வாக்கால் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். வெற்றி மேல் வெற்றிகள் கிடைக்கும். தனக்கு மட்டுமல்ல தன்னை சார்ந்தவர்களுக்கும், நன்மைமைகளை உண்டாக்குவார்கள். உரிய வயதில் திருமணம் நடக்கும். செவ்வாய் பலம் குறைந்தால் காலதாமத திருமணம் அல்லது கலகம் நிறைந்த திருமண வாழ்க்கை அமையும். செவ்வாய் தசை, புத்தி காலங்களில் சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வயோதிகத்தில் செவ்வாய் தசை, புத்தி மாரகத்தை தரத் தவறுவதும் இல்லை.

    பரிகாரம்: செவ்வாய் தசை, புத்தி காலங்களில் கால பைரவரை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு செவ்வாய் 1, 6ம் அதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பல்ல. தங்களுக்கு ஏற்படும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள். செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், நிர்வாகத் திறமை உண்டு. அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். திருமணத்திற்கு, வீடு கட்டுவதற்கு , கல்வி செலவிற்காக, வியாபாரத்திற்காக கடன் வாங்கிவிட்டு, திரும்பி கட்டமுடியாமல் கஷ்டப்படுவார்கள். தொழில் நஷ்டம் , வேலை இழப்பு, வேலை இல்லாமை, மருத்துவ செலவு அதிகமாகுதல் ஆகியவற்றால் கடன் ஏற்படும். சிலர் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். செவ்வாய் தசை புத்தி காலங்களில் நோய், கடன், எதிரி தொல்லை, ஏவல், பில்லி சூன்ய தாக்கம் உண்டாகும்.

    பரிகாரம்: செவ்வாயால் பாதிப்பு இருப்பவர்கள் செவ்வாய் கிழமை சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு செவ்வாய் 5, 12ம் அதிபதி. செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் செவ்வாய் தசை காலங்களில் பேரதிர்ஷ்டம் உண்டாகும். பண்பு, பாசம் , நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் நன்மக்கட்பேறு உண்டாகும். பிள்ளைகள் தாய்மாமன் மூலம் நல்லது நடக்கும். அதிர்ஷ்ட தேவதை வசப்படும். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். வசீகரமான தோற்றம் ஏற்படும். ஆன்ம பலம் பெருகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் செவ்வாய் தசை முடியும் போது இழப்பையும் ஏமாற்றத்தையும், விரயத்தையும், தரத் தவறுவது இல்லை.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை குரு ஓரையில் நவகிரக செவ்வாய் பகவானை வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு செவ்வாய் 4, 11ம் அதிபதி. பாதகாதிபதி. ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் தசை ஆரம்பத்தில் ஆதாயத்தையும் தசை முடிவில் பாதகத்தையும் தருகிறது. செவ்வாய் சூட்சம வலுப்பெற்று தசை நடத்தினால் சொத்துக்களால் அதிக வருமானம் உண்டு. உயர்ரக வாகன வசதி உள்ளவர்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு, வாடகை வருமானம் என வாழ்க்கை வளமாக இருக்கும். ஆடம்பரமான, அந்தஸ்தான சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். தாய் வழி உறவுகள் மற்றும் மூத்த சகோதரம், சித்தப்பா போன்றவர்களால் ஆதாயம் உண்டு. கற்ற கல்வி பயன் தரும். படிப்பிற்கு ஏற்ற தொழில், உத்தியோகம் அமையும். தசையின் ஆரம்பத்தில் லாபத்தை கொடுத்தாலும் தசையின் முடிவில் கொடுத்ததை விட பல மடங்கு அழிவு,ஏமாற்றம் மற்றும் வம்பு, வழக்கு உண்டு. மகரம் சர ராசி என்பதால் பிரச்சனையில் இருந்து மீள்வது எளிது. சிலருக்கு உயிர் காரகத்துவத்தையும், சிலருக்கு பொருள் காரகத்துவத்தையும் பாதிக்கிறது.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை திருவண்ணாமலை சென்று வர பாதிப்பு குறையும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு செவ்வாய் 3 , 10ம் அதிபதி. ஆட்சி உச்சம் சுப வலுப் பெறுவது மிகச் சிறப்பு. சிலர் லக்னாதிபதி சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். பகை கிரகங்களுடன் சம்பந்தம் பெறாத செவ்வாய் கும்ப லக்னத்திற்கு தொழில், உத்தியோக உயர்வை நிச்சயம் தரும். ஒப்பந்த அடிப்படையான தொழில் மற்றும் கூட்டுத் தொழில் அமையும். தொழில் உத்தியோகத்திற்காக தினமும் இடம் பெயறுவார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மீகம்,குலத்தொழில் ஆர்வமும் ஆதாயமும். அதிகமாக இருக்கும். முன்னோர்கள் வழிச் சொத்து கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். ஞாபக சக்தி கூடும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை பழநி முருகனை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

    மீனம்

    மீன ராசிக்கு செவ்வாய் 2, 9ம் அதிபதி. செவ்வாய் சுப வலுப் பெற்றவர்கள் வங்கிப் பணி, ஆசிரியர் தொழில், ஜோதிடம், நிதி நிர்வாகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்கின்றனர். உற்றார் உறவினர், குடும்ப உறவுகள் உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரணை, ஆதாயம் உண்டு. தந்தையின் செல்வாக்கும், சொல்வாக்கும் அரவணைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள், புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு அமைவது , புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, உயர்ரக சொகுசு வாகனம் போன்ற அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். உயர்ந்த கல்வி, கேள்வி ஞானம் உண்டு.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை குரு ஓரையில் திருச்செந்தூர் முருகனை வழிபட ஏற்றம் அதிகரிக்கும். எந்த ஒரு பலனும் அதன் தசாபுத்திகளிலேயே அப்பட்டமாக வெளிப்படும். எனவே செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களை பயன்படுத்தி உயர்வு பெற வாழ்த்துக்கள்.

    செல்: 98652 20406

    • குறிப்பாக இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் எந்த பெரிய நன்மையும் நடக்கவே நடக்காது.
    • மகிமை வாய்ந்த இக்கோவில் சுமார் 700 வருடங்களாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

    தோஷங்களில் நிறைய வகைகள் உள்ளன. நமது மூதாதையர்கள் அந்த தோஷங்களை ஆன்மிக அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் பல வகைகளாக பிரித்து வைத்திருந்தனர். ஏனெனில் அந்த தோஷத்துக்கு உரிய பரிகாரத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

    ஆனால் கால ஓட்டத்தில் அவை மறைந்துவிட்டன. தற்போது ஜோதிட அடிப்படையில் தோஷங்களை கண்டுபிடித்து சொல்கிறார்கள். ராகு-கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், சனி தோஷம், பித்ரு தோஷம், குல தெய்வ தோஷம், பெண்கள சாப தோஷம் போன்றவைகள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

    இந்த பட்டியலில் வராமல் சில தோஷங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் "அவயோக தோஷம்" முன் ஜென்மத்தில் பல பேரை ஏமாற்றி, பலரது சாபத்தை பெற்றவர்களை மறுபிறவியில் அது "அவயோக தோஷம்" ஆக மாறி பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் எந்த பெரிய நன்மையும் நடக்கவே நடக்காது.

    இந்த அவயோக தோஷத்தை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். முன் ஜென்மத்தில் சகோதரர்களுக்கு துரோகம் செய்திருந்தால் ஜாதகத்தில் 3 அல்லது 11-வது இடம் கெட்டு போய் இருக்கும். அது போல முன் ஜென்மத்தில் மனைவியை அடக்கி, கொடுமை செய்திருந்தால் 7-ம் இடம் சரியாக இருக்காது. இந்த பிறவியில் அவர்கள் மனைவியால் படாதபாடுபடுவார்கள்.

    சிலர் பெற்ற தாயை மதிப்பதே இல்லை. முன் ஜென்மத்தில் தாய் மனம் வருந்தும்படி நடந்திருந்தால் 4-ம் இடம் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகையவர்களுக்கு இந்த பிறவியில் தாய் அன்பே கிடைக்காமல் போய்விடும். இத்தகைய தோஷங்களைத்தான் அவயோக தோஷங்கள் என்பார்கள். குல தெய்வ வழிபாடு, சூரிய வழிபாடு செய்தால் இந்த தோஷத்தை கட்டுப்படுத்த முடியும். தினமும் விலங்கு களுக்கு உணவு கொடுத்தால் கை மேல் பலன் வந்து சேரும்.

    வெள்ளிக்கிழமைகளில் பசு மாட்டுக்கு அகத்திக் கீரை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்களுக்கு உணவு, உடைகள் வாங்கிக் கொடுக்கலாம். இவை எல்லாம் செய்த பிறகு ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    கவலைப்படாதீர்கள், இந்த தோஷங்களை விரட்ட தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. சென்னை குரோம்பேட்டையில் உள்ள செங்கச்சேரி மாரியம்மன் ஆலயமும் அதில் ஒன்று. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகி ஓடி விடும். வாருங்கள்... குரோம்பேட்டை செங்கச்சேரி மாரி அம்மன் ஆலயத்துக்கு செல்லலாம்......

    மகிமை வாய்ந்த இக்கோவில் சுமார் 700 வருடங்களாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கோவிலின் தலவிருட்சமான நாவல் மரத்தடியின் கீழ் சிறிய கோவிலில் எழுந்தருளியிருந்த அம்மனுக்குக் குரோம்பேட்டை வாசிகள் சேர்ந்து அவ்விடத்திலேயே மண்டபம், கோபுரம், பிரகாரம் கூடிய பெரிய கோவில் ஒன்றை நிர்மாணித்து விட்டார்கள்.

    நாயக்கர் அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களின் பராமரிப்பில் இருந்துவந்த இக் கோவிலைத் தற்போது பக்தர்களே சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர். குரோம்பேட்டைக்கு அருகில் உள்ள ராயப்பேட்டை என்னும் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் படவேட்டம்மன் இந்த செங்கச்சேரி அம்மனின் சகோதரி என்று கூறப்படுகின்றாள். இன்றும் ஆடிமாதம் இரண்டாவது வாரத்தில் ஒருநாள் படவேட்டம்மனின் கோவிலில் இருந்து பால் குடங்கள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு செங்கச்சேரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆடிமாதம் படவேட்டம்மனின் தீமிதி உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தீமிதிக்குப் பிறகு செங்கச்சேரி அம்மனையும் தரிசித்த பின்தான் தங்களது விரதம் முழுமை பெறுவதாகக் கருதுகிறார்கள்.

    அன்பர்கள் முயற்சியால் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் இக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.

    எனவே சிவராத்திரி, ஸ்ரீராமநவமி, வருடப்பிறப்பு, பவுர்ணமி, ஆருத்ரா, வைகுண்ட ஏகாதசி போன்ற தினங்களில் விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப் படுகின்றன. நவராத்திரி சமயத்தில் அம்மனுக்குத் தினம் ஒவ்வொரு வகையான அலங்காரம் நடைபெறுவதோடு விஜயதசமியன்று தேவி உபாசகர்களைக் கொண்டு, உலக சேமத்துக்காக லலிதா ஹோமம் செய்யப் படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. வேம்பு, அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் பின்னிப் பிணைந்து வளர்ந்து காணப்படுவது இக் கோவிலுக்குள்ள மற்றொரு சிறப்பம்சம். மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் விளக்குப் பூஜை, அகல் விளக்குப் பூஜை ஆகியவையும் பெண்மணிகளால் நடத்தப்பட்டு வருகின்றன.

    கும்பகோணத்திற்கு அருகே திருக்கருகாவூர் என்று ஒரு புண்ணியத்தலம் உள்ளது. அங்குள்ள கோவிலில் குடிக்கொண்டுள்ள அம்பிகைக்கு கர்ப்பரடசாம்பிகை என்று பெயர்.

    கருவில் இருக்கும் சிசுவையும் கருக விடாமல் காப்பாற்றி அருளுபவள் என்பதால் அம்பிகைக்கு இந்தத் திருநாமம். திருமணமான பெண்கள் கருவுற்றதும் சுகபிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக அம்பாளை வேண்டிக்கொண்டு தாங்கள் வளைகாப்பு செய்துகொள்வதற்கு முன்பு அம்மனுக்கு வளையல்கள் வாங்கிச் சாத்துவார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்களும் அம்மனுக்கு வளையல் காப்பிட்டு வழிபட்டு மழலைச் செல்வங்களைப் பெற்று மகிழ்கின்றனர். வருடத்திற்கு ஒருமுறை அம்பாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கே வளைகாப்பு உற்சவம் செய்வது இன்றும் சில கோவில்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அவற்றுள் ஒன்று சென்னையிலே குரோம்பேட்டை கணபதிபுரத்தில் உள்ள செங்கச்சேரி அம்மன் கோவில்.

    ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அன்னையை நாடிவரும் இந்த ஆலயத்தில் வருடா வருடம் ஆடிப் பூரம் அன்று குறிப்பிட்ட நல்ல நேரத்தில் அம்பாளுக்குத் தைலக்காப்பிட்டுக் கதம்பப்பொடி, மஞ்சள் பொடியால் திருமஞ்சனம் செய்வித்துப் பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு அங்கு குழுமியிருக்கும் பக்தர்களுடைய பொன்னாபரணங்களால் அம்பிகைக்குக் கனகாபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும் நடைபெறுகிறது.


    அன்பர்கள் யாவரும் ஆனந்த மிகுதியால் கண்ணீர் மல்கி, உள்ளம் உருகி நிற்க, தீபாராதனை காட்டிய பின் அன்னைக்கு வேப்பிலை பாவாடையுடன் புது வஸ்திரம் சாத்தப்படுகிறது. எலுமிச்சம்பழ மாலையோடு மலர் மாலைகளையும் அணிவித்து அம்பிகைக்கு காண்பவர் கண் குளிர, மனம் மகிழ, வளைகாப்பும் பூச் சூட்டலும் நடைபெறுகிறது. ரவிக்கைத் துணியொன்றில் மட்டையுடன் கூடிய தேங்காய், வெற்றிலை, பாக்கு மஞ்சள், பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ், வெள்ளி நாணயம், வளையல்கள் ஆகிய வற்றை முடிந்து அன்னைக்கு மடி நிரப்பல் செய்யப்படுகிறது.

    பின்னர், புடவை, ரவிக்கை, பருப்புத் தேங்காய் ஓதி பெண்மணிகள் ஊஞ்சல் பாட அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், சர்க்கரை,சுண்டல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் சாதம், பழ வகைகள், பானகம், தீர்த்தம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஆகியவற்றைப் படைத்து தீபாராதனை காட்டிப் பூஜை செய்கிறார் குருக்கள். அதைத் தொடர்கிறது மங்கள ஆரத்தி.

    அம்மனின் பூஜையில் மனம் லயித்துப் பக்திப் பரவசத்துடன் அமர்த்திருக்கும் அத்தனை பெண்மணிகளுக்கும் நலங்கிட்டுத் தாம்பூலமும் வளையல்களும் தரப்படுவதோடு அங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பிரசாதங்கள் அளிக்கப்படுகின்றன. திருவிழாக் கோலத்துடன் காணப்படும் குரோம்பேட்டையில் உள்ள அத்தனை தாய்மார்களுக்கும் தங்கள் மகளுக்கே வளைகாப்புச் செய்து மகிழ்ந்தது போன்ற பரவசநிலை அடைந்து, அன்னையை நினைத்துக் கோவிலை வலம்வந்து வணங்குகின்றனர்.

    குரோம்பேட்டை வாசிகளுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்கும் செங்கச்சேரி அம்மன் பல நாட்கள் பூஜை வேளைகளில் கருவறையில் கருநாக வடிவில் எழுந்தருளிக் காட்சி அளித்திருப்பதைக் கண்டு தரிசித்த அனுபவம் பலருக்கும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

    கருணை பொங்கும் திருவதனத்துடன் மங்கல வடிவமாகத் திகழும் செங்கச்சேரி அம்மன் தன்னையே சரணம் என்று நம்பி அடைந்த வர்களுக்கு தன்னருளை வாரி வாரி வழங்கு கிறாள். அவளைத் தேடிவரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவதே இதற்குச் சான்று.

    பவுர்ணமி நாட்களில் மருதாணி இலையால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த இலையை கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இப்படி இந்த ஆலயத்தில் பல வழிபாடுகள் உள்ளன. இங்கு மனம் உருக மாரி அம்மனை வழிபட்டால் அவயோக தோஷங்கள் கொண்ட ஜென்ம வினைகளில் இருந்து நிச்சயம் விடுபட முடியும்.

    • ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
    • 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

    காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர். தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாக மாறிவிட்டது. இஞ்சி டீ, சுலைமான் டீ, பிளாக் டீ தொடங்கி மசாலா டீ, லெமன் டீ என தேநீர் வகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.

    தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர். தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது, ஆனால் ஆலை முதலில் வளர்ந்த சரியான இடம் தெரியவில்லை. தேநீர் நீண்ட காலமாக எங்களுடன் உள்ளது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.


    தேயிலை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் வளரும் நாடுகளில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது மற்றும் பல குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான ஏழைக் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

    தேயிலை தொழில் சில ஏழ்மையான நாடுகளுக்கு வருமானம் மற்றும் ஏற்றுமதி வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, மேலும் தொழிலாளர்-தீவிர துறையாக, குறிப்பாக தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வேலைகளை வழங்குகிறது. வளரும் நாடுகளில் கிராமப்புற மேம்பாடு, வறுமைக் குறைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் தேயிலை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது, இது மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும்.


    தேயிலை நுகர்வு பானத்தின் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் எடை இழப்பு விளைவுகளால் ஆரோக்கிய நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இது பல சமூகங்களில் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

    தனிநபர் நுகர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில், தேவையை விரிவுபடுத்துவதற்கான அதிக முயற்சிகளை இயக்குவதற்கு, தேயிலை மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துவது மற்றும் பாரம்பரிய இறக்குமதி செய்யும் நாடுகளில் தனிநபர் நுகர்வு குறைந்து வருவதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஆதரிப்பது, பொதுச் சபை மே 21 ஐ சர்வதேச தேயிலை தினமாக அறிவிக்க முடிவு செய்தது .


    தேயிலையின் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், பசி மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மற்றும் வளர்க்கும்.

    • குறைவான நல்ல நண்பர்கள் போதும். பெரும் கூட்டம் வேண்டாம்.
    • ஒருவன் தன்னை கட்டுப்படுத்தி வாழ்வதுதான் மிகப்பெரிய சாதனை.

    வாழ்வினை எளிமை படுத்திக் கொள்ள சில வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும்.

    * யாரிடமும் நட்பு கொள்வதில் கூட சற்று தள்ளியே இருக்க வேண்டும்.

    * முடிந்த வரை தேவையில்லாத பொழுது வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருப்பது நல்லது.

    * ரொம்பவும் அதிகமாக எதனைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பது நல்லது.

    * குறைவான நல்ல நண்பர்கள் போதும். பெரும் கூட்டம் வேண்டாம்.

    * யார் மீதும் வரிந்து கட்டிக்கொண்டு பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் வேண்டாம்.

    * பெரிய சாதனைகளை உலகறிய செய்வது மட்டுமே சாதனை ஆகாது. ஒருவன் தன்னை கட்டுப்படுத்தி வாழ்வதுதான் மிகப்பெரிய சாதனை.

    * தன்னை வருத்தி எடுத்து மிகவும் நல்லவராக மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இதற்கு மிகப்பெரிய மன பக்குவம் தேவை. பிறருக்கு எண்ணத்தால் சொல்லால், செயலால் தீங்கு செய்யாது இருந்தாலே போதும்.

    * பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது.

    * பரபரவென்ற வாழ்க்கை எதற்கு? நிதானமாய், முறையாய் வாழலாமே.

    * எந்த நேரமும் ஒரு விஷயத்தினை நினைத்து அதிக யோசனை, கற்பனை என மூழ்க வேண்டாமே.

    * சிறு சிறு விஷயங்களும் கூட உதாரணமாக அழகான பூ, சூரிய உதயம் போன்றவையும் மனதிற்கு இதமான மகிழ்ச்சி தரும்.

    * முடிந்த வரையில் மனிதர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * உங்களை நீங்களே நேசிப்பது அவசியம்.

    * மற்றவர்களை கட்டுப்படுத்து வதனை விட நம்மை கட்டுப்படுத்திக் கொள்வது எளிது. பிறரை கட்டுப்படுத்துவது ஒருவரின் பலத்தினை அதிகாரத்தினை காட்டலாம். ஆனால் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்வது ஒருவரது ஆன்ம சக்தியினை காட்டுகின்றது.

    * எதையும் எதிர்பார்க்க வேண்டாம். எதிர்பார்ப்பு ஏக்கத்தினைத் தரும்.

    * இறைவனின் படைப்பில் சிறு சிறு படைப்புகள், இயற்கை என அனைத்தினையும் மனத்திற்குள்ளாக ரசியுங்கள்.

    * எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமான 'ரியாக்ஷன்' கொடுக்க வேண்டாம்.

    * நம்மால் இயன்றதை சரியாக செய்து விட்டு இயற்கையிடம் இறைவனிடம் பிரபஞ்சத்தினிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவோம்.

    * உண்மையான பாசம் என்பது அரிதுதான். பெற்றோரிடம் கிடைப்பதே கலப்படமின்றி இருக்கும். இதுவும் 99 சதவீதம்தான். 1 சதவீதம் பெற்றோர்களின் செயல்களை நாம் படிக்க நேரிடும்போது மனம் கலங்கி விடுகின்றது. எனவே பாசமான பெற்றோராக இருப்போம்.

    * ரொம்பவும் சாதுவாக இருந்தால் பிறர் நம்மை கட்டுப்படுத்தி ஆள ஆரம்பிப்பர். இது எங்கும் நிகழாத வகையில் நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * உங்கள் வேதனைகளை, கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டால் நீங்கள் பலவீனமானவர்களாக மற்றவர்களுக்குத் தெரிவீர்கள். இதனை செய்யவே செய்யாதீர்கள்.

    கீழே கூறப்பட்டுள்ளவைகளை நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளாமல் செய்கின்றோமா?

    * அன்றாடம் உடற்பயிற்சி (இதுவே உடலுக்கு சக்தி தரும்)

    * முறையான தூக்கம் * முறையான உணவு

    * நேரத்தினை திறம்பட கையாளுதல்

    * தினமும் சிறிது நேரம் படித்தல்

    * டி.வி., போன் நேரத்தினை அளவு படுத்துதல்

    * ஒருவருக்காவது சிறு உதவி செய்தல்

    இதனை படித்து ஒதுக்காமல் மனதில் ஏற்றி முறையாக செய்ய வேண்டும்.

    * ஒருவரின் உடல் நலத்திற்கும், அவரது செல்வத்திற்கும் அவரது உறவுகளுக்கும் அவரே பொறுப்பாகின்றார்.

    * ஒன்று தெரியுமா? வார்த்தைகள் பலவீன மானவை. ஒருவரது ஆற்றல், நடத்தை, அமைதி இவையே பலமானவை.

    * மரியாதை குறைவாக நடத்தும் இடத்தில் எத்தனை பெரிய லாபம் இருந்தாலும் அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.

    * எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும். அதே நேரத்தில் கண்மூடித்தனமாக எதனையும் நம்பக் கூடாது.

    * ஒருமுறை ஒருவர் உங்களை ஏமாற்றினாலும் மனதில் அவரை தள்ளிதான் வைக்க வேண்டும்.

    இவையெல்லாம் கூற வேண்டியதன் அவசியம். இன்று நிறைய மனிதர்கள் உள்ளனர். ஆனால் மனித நேயம் அரிதாகி விட்டது. ஆக இன்றைய மனிதன் அமைதியான வாழ்க்கைக்காக சற்று மாறுபட்ட வாழ்க்கை வழியினை மககள் கடைபிடிக்க வேண்டி உள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் நம் உற்றார், உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு நாம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் செல்லலாம். உரிமையாய் அமரலாம். இருக்கலாம், சாப்பிடலாம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அவர்களது சூழ்நிலை தெரிந்தே செல்ல வேண்டி உள்ளது. இது பலருக்கு சங்கடமாகக் கூட இருக்கலாம். ஆனால் இதில் ஒரு சில உண்மைகளையும் கவனியுங்கள். கணவன, மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் காலம். அதிக பொறுப்புகள், அதிக சுமைகள், அதுவும் நகர்புற வாழ்க்கையில் வசதிகளும் உண்டு. பிரச்சனைகளும் உண்டு. இதனை நாம் உணர்ந்து நடந்தால் உறவுகள் சுமூகமாக இருக்கும்.

    அது போல் தொலைபேசியில் ஒருவரை அழைக்கின்றீர்கள். பதில் இல்லை. மறுமுறை அழைக்கின்றீர்கள். மீண்டும் பதில் இல்லை என்றால் விடாது அவர்களை போனில் துரத்தாதீர்கள். அங்கு என்ன நிலவரமோ? என்று சற்று அமைதியாய் இருங்கள். நான் ஏதாவது உதவி செய்யட்டுமா? எல்லாம் ஒகே தானே? என்ற பரிவான செய்தி அனுப்புங்கள். இதுதான் பண்பு.

    * யாரிடமும் கடன் வாங்கவே வேண்டாம். அப்படியும் வாங்கி விட்டால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கொடுத்து விடலாமே.

    * சிலர் உங்களை நம்பி ரகசியங்களை சொல்லலாம். வேதனைகளை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அது உங்கள் மனதினை விட்டு வெளியே வரவே கூடாது. உனக்கு மட்டும் சொல்கிறேன் என்று தம்பட்டம் அடித்து அனைவரும் அறிந்த ரகசியம் ஆக்கி விடாதீர்கள். இதுவும் ஒரு நம்பிக்கைத் துரோகம்தான்.

    * கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் சத்தியம்.

    * குறித்த நேரத்தில், சொன்ன நேரத்தில் இருப்பது அவசியம்.

    * ஒருவர் பேசும் போது குறுக்கே பேசுவது அநாகரீகம்.

    * 'நன்றி' சொல்வது-அது யாராக இருந்தாலும்- சிறிய உதவியாக இருந்தாலும் நன்றி சொல்வது நல்ல செயல்.

    * 'தமாஷ்' என்ற பெயரில் பிறர் மனதை காயப்படுத்தாதீர்கள்.

    இவைகள் அனைத்துமே உங்கள் உள் ஒளியினை பிரகாசிக்கச் செய்யும்.

    * இறைவனை - இயற்கையை- தன்னம் பிக்கையினை சார்ந்து இருப்பதே நல்லது. பிரர் தோளில் சாய வேண்டாம்.

    * கருணை, கனிவு என்றாலும் ரொம்ப அதிகமான இனிமை காட்டினால் மற்றவர்களால் விழுங்கப்படுவீர்கள்.

    நாம் சிலவற்றினை விடாப்பிடியாக செய்து பார்ப்போமே!

    * இளைஞர்கள் மலையேறும் நிகழ்ச்சியினை சில அமைப்புகள் செய்து வருகின்றன. ஒரு வாரம் இதற்கு சென்று பாருங்கள். வாழ்க்கையில் பல பொருட்கள், வசதிகளை நாம் தேவையற்று தேடி அலைகின்றோம். சேர்த்து குவிக்கின்றோம் என்பது புரியும்.

    * ஒரு வருட ஹாஸ்டல் வாழ்வு (எத்தனை வசதிகளுடன் இருந்தாலும் கூட) வீட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும்.

    * உயிருக்கு போராடும் நோயாளியுடன் ஒரு சில மணி நேரங்கள் இருந்து பாருங்கள். நம் வாழ்வின் அருமை புரியும்.

    * உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஸ்ட்ரெஸ்சை குறைத்து விடும்.

    * ஒரு கேள்விக்கு பதில் என்பதனை வேகம் எடுத்து சொல்லாமல் சற்று சில நொடிகள் நிதானித்து சொன்னால் மதிப்பான, பண்பான பதிலாக இருக்கும்.

    * மிகவும் சத்தமாக பேசுவதனை தவிர்க்கலாமே.

    * ஒரே நேரத்தில் அஷ்டாவதானி போல் பல வேலைகளை செய்வது அரிதான ஒன்று. ஆக நாம் நிதானமாக செய்யலாமே.

    * என்னால் இது முடியாது என்று எப்பொழுதும் நினைக்க வேண்டாமே.

    * இன்று உலகை விட்டு செல்வதில் பிறந்ததில் இருந்து அனைவரும் வரிசையில் காத்து இருக்கின்றோம். ஒருவர் முன்னே இருக்கலாம். ஒருவர் பின்னே இருக்கலாம். இங்கு வரிசையினை உடைத்து நாம் முன்னே செல்லவோ, பின்னே செல்லவோ முடியாது. இது பிரபஞ்ச விதி. இங்கு எந்த லஞ்சமும் சிபாரிசும் எடுபடாது.

    அப்படியிருக்க வாழும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. அந்த நொடியில் உலகிற்கு நம்மால் முடிந்து நல்லதை செய்வோம். அன்பு செலுத்துவோம். பிறரை புன்னகைக்க செய்வோம்.

    விடாப்பிடியாக இதனை செய்யும் பொழுது நம்முன் ஒளிசக்தி கூடும்.

    கீழ்கண்ட குணங்கள் உங்களிடம் இருக்கிறதா?

    * தனது பெருமையை தானே தம்பட்டம் அடிக்கும் குணம். எந்த முடிவும், எந்த செயலும் செய்ய பிறர் 'சரி, கரெக்ட்' என்று சொன்ன பிறகே செய்ய முயல்வது.


    * எப்பொழுதும் கடந்து போன பழைய சோக நிகழ்வில் மூழ்குவது. * பிரச்சனை பற்றி மட்டுமே பேசி விட்டு தீர்வு காண முயற்சி எடுக்காமல் இருப்பது.

    * பிறர் செய்த தவறுகளை மன்னிக்காமல் மனதில் பூதாகரமாய் வளர்த்து வைப்பது.

    * எப்பொழுதும் பிறர் வாழ்வுடன் தன்னை ஒப்பிட்டு சோகம் அடைவது. * சுய விளக்கம் அளிப்பது * பொருமை

    இவையெல்லாம் இருந்தால் நீங்கள் மனதளவில் 'மிக பலவீனமானவர்' என்பது பொருள். உடனடியாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    எதை எடுத்தாலும அது உங்களை பாதிப்பதற்கான பேச்சு (அ) செயல் என்று கற்பனை செய்து சோகத்தில் மூழ்கும் குணம் உள்ளதா. கீழே பலர் கூறிய கருத்துகளின் தொகுப்பினை பாருங்கள். * யாராவது சிடுசிடுவென பேசினால் (இன்று அநேக இடங்களில் அதிகமானோர் இப்படித்தான் இருக்கிறார்கள்) அது உங்கள் சம்மந்தப்பட்டதாக இருக்காது. பாவம் அவருக்கு எத்தனை பிரச்சனைகளோ, அதை தாங்க முடியாமல் மற்றவரிடம் சிடுசிடுவென எரிந்து விழுகின்றார்.

    * பிறர் கூறும் குற்றம், குறைகளில் உண்மை இருக்கின்றதா என்று பார்ப்போம். இல்லையென்றால் அந்த குற்றம், குறைகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். இருந்தால் நம்மை நாம் திருத்திக் கொள்வோம். அனைவரையும் ஒரு கருத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது கடினமானது. நம் வீட்டில் கூட இது நடக்காது.

    * பிறர் கஷ்டம், சோகத்தை கேட்டால் கேட்பவரின் மனதில் தன்னைப் பற்றிய டென்ஷன் குறைந்து விடுமாம். இது எல்லோருக்கும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு முறை கேட்டுத்தான் பார்க்கலாமே

    * எல்லாம் தெரிந்தும் மகிழ்ச்சியே இல்லாத மனிதர்களும் இருக்கின்றார்கள்.

    • அப்போதெல்லாம் இன்றைய காலகட்டத்தை போல் விமான வசதி கிடையாது.
    • எப்படியோ ஒரு வழியாக தலையை சீவி, பிளாஸ்டரை மறைத்து கச்சிதமாக ஹேர்ஸ்டைலை வடிவமைத்துவிட்டார்.

    நடிப்பதற்கு முக வசீகரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதிலும் முகத்துக்கு அழகு சேர்ப்பது ஹேர்ஸ்டைலே என்பதையும் சொல்ல வேண்டியது இல்லை.

    உங்கள் மீனாவுக்கென்று எப்பவுமே தனி ஹேர்ஸ்டைல் உண்டு. ஆனால் படத்துக்கு படம் ஹேர் ஸ்டைல் மாறும்.

    கதாநாயகியாக உச்சத்தில் இருந்த நேரம். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து கொண்டிருந்தேன். மறுநாள் ரஜினிக்கு ஜோடியாக எஜமானில் நடிக்க வேண்டும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலையில் பட்ட காயத்துக்கு பிளாஸ்டர் போடவேண்டிய நிலை. எப்படியோ சமாளித்து 'முட்டா மேஸ்திரி' படப்பிடிப்பை கேரளத்தில் முடித்துவிட்டேன்.

    அன்று இரவே புறப்பட்டு மறுநாள் காலையில் கோவை, பொள்ளாச்சியில் இருக்க வேண்டும்.

    அப்போதெல்லாம் இன்றைய காலகட்டத்தை போல் விமான வசதி கிடையாது. முக்கியமான நகரங்களுக்கு இடையே மட்டும் தான் விமான சேவை இருந்தது. அதுவும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படும்.

    எனவே விமான பயணத்தை விட ரெயில் பயணமே அதிகம் இருக்கும்.

    கேரளாவின் உட்புற பகுதியில் ரொம்ப தூரத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஷூட்டிங்கை முடித்து விட்டு காரில் புறப்பட்டு எர்ணாகுளம் சென்றடைந்தோம். அங்கிருந்து கோவைக்கு ரெயில் பயணம்.

    ஷூட்டிங்கில் இருந்த போது தலையில் இருந்த காயத்தின் வலி தெரியவில்லை. ரெயில் ஏ.சி. பெட்டியில் பயணித்த போது தான் வலி பின்னி எடுத்தது. டாக்டர் தந்திருந்த மாத்திரையை சாப்பிட்டு விட்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. நினைவு முழுவதும் எஜமானை சுற்றி சுழன்றது.

    ரஜினி சாரோடு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும். தலையில் பிளாஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அது தெரியாமல் எப்படி தலையை வாருவது?

    ஹேர்ஸ்டைல் நல்லா இருக்குமா? எப்படி சமாளிக்க போகிறோமோ தெரியவில்லையே என்று பல எண்ணங்கள் வந்து போனது. எப்படியோ ஒரு வழியாக நீண்ட நேரத்துக்கு பிறகு தூக்கம் கண்களை தழுவியது.

    அதிகாலையில் கோவை சென்றடைந்ததும் அங்கிருந்து காரில் பொள்ளாச்சி புறப்பட்டோம்.

    பொள்ளாச்சியில் வழக்கமாக தங்கும் ஓட்டலில் அறை தயாராக இருந்தது. ஓய்வெடுக்க நேரமில்லை. ஷூட்டிங் செல்ல தயாரானேன். எனது சிகை அலங்கார நிபுணர்தான் ரொம்ப கஷ்டப்பட்டார்.

    தலையில் போட்டிருந்த பிளாஸ்டரை பார்த்து எப்படி தலைவாரி அதை மறைப்பது? சீப்பு கொஞ்சம் அழுத்தினாலும் உங்களுக்கு வலிக்குமே என்றார். என்ன செய்வது மெதுவாக வாரிவிடுங்கள் என்றேன்.

    பளீர் வெள்ளை நிற பிளாஸ்டர் போட்டால் ரொம்ப பளிச்சென்று வெளியே தெரியும் என்பதால் சிறிய, மிருதுவான பிளாஸ்டர் போட்டு இருந்தார்கள்.

    எப்படியோ ஒரு வழியாக தலையை சீவி, பிளாஸ்டரை மறைத்து கச்சிதமாக ஹேர்ஸ்டைலை வடிவமைத்துவிட்டார்.

    மேக்-அப் ரெடியானதும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றோம். முதல் காட்சி என்ன தெரியுமா? பங்களா வீட்டின் வாசலில் ரஜினி சார் அமர்ந்து இருப்பார். அவர் மடியில் நான் தலை சாய்த்து இருப்பேன் அவர் என் தலையை கோதி விட்டபடியே

    நிலவே முகம் காட்டு

    எனை பார்த்து ஒளிவீசு

    அலைபோல் சுதி மீட்டு

    இனிதான மொழி பேசு...

    இளம் பூங்கொடியே இது தாய் மடியே...

    என்று பாடியபடி வாஞ்சையுடன் தலையை தடவி விடுவார்.

    ரஜினிசார் மடியில் தலை வைத்து அவர் தடவி விடுவது நல்லாத்தான் இருக்கும். ஆனால் தலைமுடிக்குள் வெளியே தெரியாமல் இருந்த காயத்தின் மீது அவர் கைப் பட்டதும் வலி.

    ஆனால் வலியை முகத்தில் காட்ட முடியாது. அதை பொறுத்துக் கொண்டேன். அந்த ஒரு டேக் பரவாயில்லை. நானும் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து நான் பாடும் போது

    நிலவே முகம் காட்டு

    எனை பார்த்து ஒளிவீசு

    அலைபோல் சுதி மீட்டு

    இனிதான மொழி பேசு...

    அணைத்தேன் உனையே

    இது தாய் மடியே...

    என்று பாடும் போது முகத்தில் புன்னகை வர வேண்டும். புண் வலியில் எப்படி புன்னகை வரும்? வந்துதானே ஆக வேண்டும்! இல்லாவிட்டால் டைரக்டரிடம் திட்டு வாங்க வேண்டும். ரீடேக் எடுக்க வேண்டும். என்ன செய்வது வலியை தாங்கி கொண்டு புன்னகையையும் முகத்தில் தவழவிட்டேன். காட்சி நன்றாகவே அமைந்தது. காட்சி முடிந்த பிறகுதான் தலையில் இருந்த காயத்தை பற்றி கேள்விப்பட்டு 'எப்படிம்மா காயம் பட்டது? என்று பரிவோடு கேட்டார். பொள்ளாச்சி பகுதியில் 'எஜமான்' படத்துக்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் பொள்ளாச்சி தான்.

    பொள்ளாச்சி ஷூட்டிங் முடிந்தது. உடனே லக்கேஜூகளை எடுத்து கொண்டு ஒத்துக்கொண்ட கால்ஷீட் படி தெலுங்கு படத்தின் ஷூட்டிங்குக்காக கோவையில் இருந்து நேரடியாக ஐதராபாத்துக்கு விமானத்தில் பறந்தோம்.

    தையல் போட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகியிருந்ததால் பிரிக்கலாம் என்றார்கள்.

    ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று தையலை பிரித்துக் கொண்டேன்.

    அது வரை அந்த மாதிரி காயம் பட்டதோ, தையல் போட்ட அனுபவமோ எனக்கு கிடையாது. தையல் பிரிக்கும் போதும் பயங்கரமாக வலித்தது. 'அம்மா...' என்று கத்திவிட்டேன். உண்மையிலேயே என் அம்மாவை பார்த்து அழ வேண்டிய நிலைக்கு ஆளானேன்'. அது ஏன்? அடுத்த வாரம் சொல்கிறேன். (தொடரும்...)

    • ஒப்பிட்டுப் பார்த்து வாழத்தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.
    • வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்

    ஒப்பீடு செய்வதால் உன்னதம் காணமுடியாது என்பதை நம்பும் இனிய வாசகர்களே! வணக்கம்.!.

    நம் எல்லாருக்கும் வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையை வாழ்வது என்பது பள்ளிக்கூடப் பாடங்களில் பரீட்சை எழுதுவதுபோலப் பல நேரங்களில் கடினமானதாகத்தான் இருக்கிறது.

    வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தேர்வு என்றால், அது ஒரே மாதிரியான தேர்வு அல்ல!; வழங்கப்பட்டிருக்கிற கேள்வித்தாளும் ஒரே மாதிரி கேள்வித்தாள் கிடையாது!; ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

    எனவே நமக்கான தேர்வை நாம் மட்டுமே எழுதியாக வேண்டும். அடுத்தவரைப் பார்த்து எழுதவோ, அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ முடியவே முடியாத வினோதமானது நமது வாழ்க்கை.

    அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொள்கிறார்கள்!. நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிட்டுப் போவோமே!. அவரைப் போல வாழ்!;

    இவரைப் போல வாழ்! என்று சிலரை முன்மாதிரிகளாகவோ, எடுத்துக் காட்டுகளாகவோ வைத்துக் கொள்ளலாமேயொழிய, அவரோடு நாம்!, இவரோடு நாம்! என்று ஒப்பிட்டுப் பார்த்து வாழத் தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.

    ஒப்பீடு செய்வதன்மூலம் சிறந்தவற்றைக் கண்டறிய முடியும்! என்று சிலர் கூறலாம். ஆனால் எந்த வகையிலும் சமமாகவோ பொருத்தமாகவோ இல்லாதவரோடு ஒப்பீடுகள் நிகழ்த்தி நிகழ்த்தியே உருப்படாமல் போன கதைதான் இங்கு அதிகம்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒப்பிடும் குணத்தை அவனது குழந்தைப் பருவத்திலேயே, பெற்றோர்கள் உசுப்பிவிட்டு விடுகிறார்கள்." அண்ணனைப் பார்! தம்பியைப் பார்! அக்காவைப் பார்! தங்கையைப் பார்!" என்று உடன்பிறந்தோரில் தொடங்கி, அண்டை வீடு, அயல் வீடு, உடன் படிப்போர், ஊடகங்களில் வரும் சாதனைகள் புரிவோர் … என எந்த அளவீடுகளும் இல்லாமல் எல்லாருடனும் ஒப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    உயரமாக,குள்ளமாக, குண்டாக, ஒல்லியாக, வெள்ளையாக, கறுப்பாக, முடி அடர்த்தியாக, நீளமாக, என உருவத்தில் தொடங்கி, உண்ணுகிற உணவு, படிக்கிற படிப்பு, எடுக்கிற மதிப்பெண், விளையாடுகிற விளையாட்டு, சாதிக்கிற சாதனைகள் வரை எல்லாவற்றிலும் ஒப்பீடுகள்.

    ஒப்பீடுகள் பெரும்பாலும் திட்டல்களில் தொடங்கி, 'நீ எங்கே உருப்படப் போறே!' என்று சாபங்களிலேயே நிறைவு செய்வார்கள்!. குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடமிருந்து பற்றிக்கொள்ளும் ஒப்பிடும் குணம் கடைசிவரை மாற மறுக்கிறது.

    பெரும்பாலும் நமது ஒப்பிடும் குணம் நம்மில் இருந்தே தொடங்குகிறது; அடுத்தவர்கள் நம்மைவிட எவ்வளவு தூரம் நல்ல நிலையில் இருக்கிறார்கள்? என்று சிந்திக்கத் தொடங்கும் அடிப்படையிலேயே ஒருவிதப் பொறாமைகுணம் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக்கொள்ளத் தொடங்கி விடுகிறது.

    பொறாமை எனும் தீக்குணம் நம்மிடம் வந்துவிட்டால், வஞ்சனை, கோபம், சூழ்ச்சி,பொய், களவு என அத்தனை பேய்க்குணங்களும் மனித மனத்தை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிடுகின்றன.

    அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுநோக்கிப் பார்ப்பதன்மூலம், 'அவரைப்போல நாமும் உழைக்க வேண்டும்!, அவரைப்போலப் படித்து முன்னேற வேண்டும்!, அவரைப்போல நல்ல வேலையில் அமர வேண்டும்!,

    அவரைப்போல செல்வந்தர் ஆகவேண்டும், அவரைப்போல நல்ல மனிதராக வலம் வர வேண்டும்!,அவரைப்போலச் சாதனைகள் புரிய வேண்டும்!' என நமக்கு நாமே ஊக்கம் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சிலர் கருதலாம். ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஒப்பீடுகள் நேர்முறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கி விடுகின்றன.

    ஒப்பிட்டுப் பார்ப்பதில் அடிப்படையில் தவறு இல்லை; ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும்போதே ஒருவகை எதிர்மறைகுணம் நமக்குள் வந்து அமர்ந்து கொள்வதால், எதிர்மறைச் சிந்தனையோடு, அடுத்தவர்களைப் பற்றிய தவறான கணிப்புகளையும் நாக்கூசாமல் பேசவும், விரல்கூசாமல் எழுதவும் தொடங்கி விடுகிறோம். இதுவே நம்மைத் தீயவர்களாக மாற்றி விடுகிறது.

    ஜப்பானிய சாமுராய் வீரர்கள் பெரும்பலம் பொருந்திய மகா வீரர்கள். நாட்டிற்காக உயிரையும் துச்சமென மதித்துப் போரிடுபவர்கள். அப்படிப்பட்ட சாமுராய் வீரர்களில் ஒருவன், அந்த ஊரில் இருந்த புகழ்மிக்க ஜென் மத குருவைக் காணச் சென்றிருந்தான். அதிகாலை நேரத்திலேயே மடத்திற்குச் சென்றுவிட்டான்.

    குரு ஆசுவாசமாக எழுந்து காலைப் பிரார்த்தனை, தியானம் போன்றவற்றை வரிசைக் கிரமமாகச் செய்துவிட்டு சாமுராய் வீரனை மெல்லிய புன்னகையோடு வரவேற்று வந்த காரியத்தை வினவினார்.

    கொஞ்சம் படபடப்போடு காணப்பட்ட வீரன் பேசத் தொடங்கினான், " குருவே நான் ஒரு சாமுராய் வீரன். நீங்கள் எப்படி இங்கிருந்துகொண்டு ஆன்மீக அடிப்படையில் நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபடுகிறீர்களோ, அதைப்போல நான் போர்முனையில் இருந்து கொண்டு நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபட்டு வருகிறேன்!.

    நாலைந்துமுறை சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கிறேன். கோழைகளாய் இருந்து சாவைச் சந்திக்க இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை எனது வாள்முனையில் காப்பாற்றி இருக்கிறேன்."

    சாமுராய் வீரன் எதற்காக இந்தப் பீடிகை போடுகிறான்? என்ன கூற வருகிறான்? என்பதை முன்கூட்டியே ஊகித்தறியும் அவசரமில்லாமல் ஜென் குரு அமைதியான புன்னகையோடு செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

    சாமுராய் மேலும் தொடர்ந்தான்." இவற்றை யெல்லாம் நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், அடிப்படையில் நீங்களும் நானும் ஒரே நோக்கத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! என்பதை விளங்க வைப்பதற்குத்தான். நாடும் மக்களும் அமைதியாக வாழவேண்டும் என்பதே நம் இருவரின் நோக்கமாகவும் இருக்கிறது!"

    "இதில் இங்கு நான் வந்ததற்கான காரணம் என்ன வென்றால், என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிற அடிப்படையான ஒரு வினாவை உங்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான். "

    "துறவியாகிய நீங்களும் போர்வீரனாகிய நானும் ஒரே நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்றாலும், நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுகிறீர்கள், எந்த வேலையும் செய்யாமல் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்தே அனுபவிக்கிறீர்கள்;

    காலத்தைக் கழிக்கிறீர்கள், காலைமுதல் மாலை வரை ஏராளமான மக்கள் வந்து உங்களுக்கு வணக்கம் சொல்கிறார்கள்; உங்களிடம் கடவுளைப்போல ஆலோசனை கேட்டுப் போகிறார்கள்;

    நீங்களும் எந்த சிரமமும்படாமல் சிரித்த முகத்தோடு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறீர்கள்!. நானோ அன்றாடம் வேகாத வெயிலில் போர்ப் பயிற்சியிலும், போர்முனைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!. இது எந்த வகையில் நியாயம்?" என்று கேட்டான் சாமுராய்.

    "இப்போது என்னைச் சந்தித்து ஆலோசனையும் ஆசீர்வாதங்களும் பெறுவதற்காக நிறைய அன்பர்கள் வந்து மடத்தில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வந்து உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்;

    மாலைவரை காத்திரு!" என்று கூறிவிட்டு ஜென்குரு அன்பர்களைக் காணச் சென்றுவிட்டார். அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புன்னகை மாறாத முகத்தோடு ஆசி வழங்கினார் துறவி.

    மாலைநேரம் கடந்து இருட்டத் தொடங்கிவிட்டது. துறவியைக் காணவந்திருந்த அனைவரும் சென்று விட்டனர். இப்போது துறவி, சாமுராயை உள்ளே தன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அமைதியான இருள்; வானத்தில் நிலவு வந்து தன் வெளிச்சக் கிரணங்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.

    துறவி பேசினார்," வீரனே வா!. இந்த வானத்தை பார்! மெல்லிய வெளிச்சத்தை பூமி முழுவதும் பரப்புவதற்காக அமைதியாக வந்துகொண்டிருக்கும் நிலவைப் பார். இனி விடியும் வரை வானத்திலும் பூமியிலும் இந்த நிலவின் ஆட்சிதான். நாளை விடிந்தவுடன் சூரியன் வந்து விடும்;

    அதன் ஒளியாட்சி தொடங்கிவிடும். பகலின் சூரிய ஒளியில் இப்போது மங்கலாகத் தெரிபவை எல்லாம் துல்லியமாகக் காட்சியளிக்கும். மலை, அருவி, கடல், வயல் என அனைத்தும் இரவின் நிலவொளியில் தெரிந்ததைவிடப் பன்மடங்குத் தெளிவாகச் சூரிய ஒளியில் தெரியும்."

    `நாம் இப்போதைய இரவிலும் நிலவைப் பயன்கொள்கிறோம்; நாளைய பகலில் சூரியனையும் பயன்கொள்கிறோம். என்னுடைய பயன் குறைவு என்று நிலவோ என்னுடைய பயன் கூடுதல் என்று சூரியனோ எந்த நேரத்திலும் குறைப்பட்டுக் கொண்டதாகவோ, மார்தட்டிக் கொண்டதாகவோ இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் அவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை!" என்றார் துறவி.

    படைப்புகள் அனைத்தும் அவ்வவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வியல் குறிக்கோள்களோடு வாழத் தொடங்கினாலே போதும். அவற்றின் பிறவிப்பயன் அடுத்தவர்க்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

    அடுத்தவர் கட்டியிருக்கும் வீட்டையோ, வாங்கியிருக்கும் பொருள்களையோ, வாழுகின்ற வசதியான வாழ்க்கையையோ நம்முடையவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் தேவையற்ற பொருள் விரயத்தையும் அதனால் பெரும்பான்மை நேர விரயத்தையும் நாம் சந்திக்க நேரிடும்.

    பொறாமையில் பொசுங்கிடும் மனம் என்றுமே வளமாகச் சிந்திக்கும் திராணியற்றுப் போய்விடும். முடிவற்ற மகிழ்ச்சியின்மையைச் சந்திக்க நேரிடும். மொத்தத்தில் நம்மை அடுத்தவரோடு ஒப்பிடத்தொடங்கி விட்டால், நமக்கு நாமே பின்னோக்கி ஓடத் தொடங்கிவிட்டோம் என்று பொருள்.

    வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கு நமக்கு எப்போதும் முன்னோக்கியதாகவே இருக்கிறது. ஓடுகிற குதிரையின் பார்வை முன்னோக்கியதாக இல்லாமல் பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டே ஓடுவதாக இருந்தால், அக்குதிரை நிச்சயம் ஊர்போய்ச் சேராது. அதுபோன்றதுதான் நமது வாழ்வியல் இலக்குநோக்கிய பயணங்களும்; பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டு ஓடாமல் தேங்கிவிடுவதுதான் ஒப்பிடுகிற வாழ்க்கை.

    அவர் வாழ்க்கையின் வடிவம் அப்படி; நம் வாழ்க்கையின் வடிவம் இப்படி என்று நமதைப் பற்றிய எண்ணங்களோடு வாழ்க்கையில் பயணப்பட்டால் நமக்குள் தாழ்வுமனப்பான்மை ஏற்படாது.

    தம்மைப் பற்றிய கழிவிரக்கம்!, அடுத்தவர் பற்றிய உயர்வு நவிற்சி! இவை இரண்டையும் கை விட்டாலே போதும்; எல்லா ஒப்பீடுகளும் தூள் தூளாகிப் போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கணியன் பூங்குன்றன் சொன்னான்,' மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'

    பொதுவாக நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்தால் நமக்குப் பொறாமை வரும்!; நமக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்தால் நாம் எவ்வளவோ பரவாயில்லையே என மகிழ்ச்சி வரும். இந்த இரண்டு உணர்ச்சிகளில் பொறாமையைப் போட்டியாக மாற்றும் உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், போதுமென்கிற மகிழ்ச்சியை மூலதனமாக்கி வெற்றி காணாலாம்.

    அவரவர் பாதையில் அவரவர் பயணம் என்கிறபோது, இதில் போட்டி எதற்கு? பொறாமை எதற்கு?

    வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்!

    போட்டிகள், ஒப்பீடுகள் விளையாட்டில் இருக்கலாம்!

    வாழ்க்கையில் எதற்கு?

    தொடர்புக்கு 943190098

    • கம்பர் மேல் கடும் பொறாமை கொண்ட ஒருவரும் அவையில் முன்வரிசையில் வீற்றிருந்தார்.
    • நெருப்பில் எரிந்த சுவடிகளோடு அவர் நெஞ்சில் எரிந்த பொறாமையும் அழிந்தது.

    கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாம் எழுதிய ராமாயணத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அதுவரை எழுதப்படாத சந்தங்கள், புத்தம் புதிய சொல்லாட்சி. நெஞ்சை ஈர்க்கும் உவமைகள்.

    தமிழமுதத்தை அல்லவா கம்பர் வாரி வழங்கிக் கொண்டிருந்தார்? அவையினர் சொக்கிக் கிறங்கி கம்ப ராமாயணத்தின் கவிச்சுவையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

    கம்பர் மேல் கடும் பொறாமை கொண்ட ஒருவரும் அவையில் முன்வரிசையில் வீற்றிருந்தார். புலவர் ஒட்டக்கூத்தர்தான் அவர்.

    அவர் தாமும் ஒரு ராமாயணம் எழுதி வந்தார். அப்படி அவர் ராமாயணம் எழுதும் செய்தி கம்பருக்கு மட்டுமே தெரியும். ஒட்டக்கூத்தரின் ராமாயணம் இன்னும் அரங்கேற்றம் காணவில்லை.

    ஆனால் நாள்தோறும் கம்பரின் ராமாயண அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு கம்பன் கவிதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தருக்கு உள்ளூற தன் பொறாமையையும் மீறி வியப்புத் தோன்றியது. கம்பரின் கவிநயம் எல்லோரையும் மயக்கியது போல ஒட்டக்கூத்தரையும் மயக்கியது.

    ஆனால் ஒட்டக்கூத்தர் மனத்தின் ரசனைப் பகுதியின் வலிமையை விட, பொறாமைப் பகுதியின் வலிமையே அதிகமாக இருந்தது. எவ்விதமேனும் கம்பர் பாடலில் ஒரு குற்றம் காணமுடியாதா எனக் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்தது அவர் மனம்.

    அரங்கேற்ற தினங்களில் ஒருநாள் அதற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

    சுந்தரகாண்டத்தில் கடலில் குரங்குகள் அணைகட்டுவதை விவரித்துக் கம்பர் கவிதைகள் புனைந்திருந்தார். சந்த நயம் நிறைந்த அழகிய கவிதைகள் அவை.

    சுக்கிரீவனின் ஆணையால் வானர சைன்னியங்கள் முழுவதும் ஓயாமல் அணைகட்டும் பணியில் ஈடுபட்டிருந்தன. வானர வீரர்கள் கற்களைக் கொண்டுவந்து குவித்தார்கள்.

    குமுதன் என்பவன் வானரக் கூட்டமொன்றின் தலைவன். அவன் ஒரு மலையையே பெயர்த்தெடுத்துக் கடலில் வீசி எறிந்தான். அப்போது சமுத்திரத்தில் அந்த மலையின் தாக்கத்தால் பேரலை எழுந்தது. அந்தப் பேரலையின் நீர்த்துளிகள் வானுயரச் சென்று தேவலோகத்திலும் தெறித்தன.

    அந்தக் காட்சி எப்படி இருந்தது என விவரிக்கும்போது ஓர் உவமையைச் சொன்னார் கம்பர்.

    தேவர்கள் முன்னர் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா? அப்போது அமுதத் துளி தேவலோகம் வரை தெளித்தது போல இப்போதும் தெளிக்கிறதே, மறுபடி நாம் அமுதம் உண்ண முடியும் போலிருக்கிறதே என எண்ணி மீண்டும் அமுதம் உண்ண ஆசை கொண்டார்களாம் தேவர்கள்.

    "குமுதன் இட்ட குலவரைக் கூத்தரின்

    திமித மிட்டுத் திரியும் திரைக்கடல்

    துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்

    அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால்!"

    இந்தக் கவிதையில் துளி என்று பொருள் வரும் வகையில் துமி என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தினார் கம்பர்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஒட்டக்கூத்தரின் பொறாமைத் தீ உடன் அவரைத் துள்ளி எழச் செய்தது. `துமி என்ற சொல் தமிழில் கிடையாதே? அதற்கு எந்த நூலில் இருந்தாவது இலக்கியச் சான்று காட்ட முடியுமா? அப்படிக் காட்ட முடியாவிட்டால் இந்தப் பாடலை ஏற்க இயலாது` என வாதிட்டார் ஒட்டக்கூத்தர்.

    கம்பரின் முகத்தில் ஓர் இளமுறுவல் ஓடியது. உண்மையில் இலக்கியச் சான்று ஏதும் இல்லை என்பதை அவர் அறிவார். எனினும் கடவுள் தன்னைக் கைவிடமாட்டார் என்றும் அவர் அறிவார். துணிச்சலோடு அதிரடியாக ஒரு வாதத்தை முன்வைத்தார் கம்பர்.

    `இலக்கியச் சான்று இல்லாவிட்டால் என்ன? பேச்சு வழக்கில் அந்தச் சொல் பயன்படுத்தப் படுகிறது. பேச்சு வழக்கைக் கவிதையில் பயன்படுத்தும் மரபு உண்டே? எனவே அதில் தவறில்லையே?` என வாதிட்டார் கம்பர்.

    ஒட்டக்கூத்தரோ பேச்சு வழக்கில் அந்தச் சொல்லை யார் பயன்படுத்தியும் தாம் கேட்டதே இல்லை என்றார். அது உண்மைதான். அப்படியொரு சொல்லே பேச்சு வழக்கில் கிடையாது. தமிழில் அதுவரை இலக்கிய வழக்கிலோ பேச்சு வழக்கிலோ இல்லாத புத்தம் புதுச் சொல் அது.

    அந்தச் சொல் பேச்சு வழக்கில் பயன்படுகிறது என்பதற்குக் கம்பர் சாட்சி காட்டினால் தான் ஒப்புக்கொள்ளத் தயார் என்றும் இல்லையென்றால் கம்பர் தோல்வியை ஒப்புக்கொண்டு அந்தப் பாட்டைக் கம்ப ராமாயணத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் ஒட்டக்கூத்தர் வாதிட்டார். மறுநாள் அதிகாலையில் தான் சாட்சி காட்டுவதாகக் கம்பர் ஒப்புக் கொண்டார்.

    அன்றிரவு நீண்ட நேரம் கம்பர் உறங்கவில்லை. கலைவாணியைத் துதித்தபடிப் படுத்திருந்தார்.

    `தாயே! என்மூலம் கவியெழுதுவது நீதான் அல்லவா? எல்லாக் கவிதைகளையும் எழுத வைத்தவள் நீ! அவ்வகையில் துமி என்ற சொல்லை எழுத வைத்ததும் நீ தானே? எனவே நாளை அதிகாலையில் சாட்சி காட்டவேண்டியது உன் பொறுப்புத்தான்! நான் தோற்றால் மக்கள் நகைப்பார்களே? உன் புகழுக்கல்லவா அது களங்கம்?`

    இவ்வாறு பிரார்த்தனை செய்த கம்பர் நெடுநேரம் கழித்துத் தன்னையறியாமல் உறங்கினார். உறக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் சரஸ்வதி தேவி தோன்றினாள்.

    வெள்ளை உடை உடுத்தி வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் கலைவாணி அருள்நிறைந்த மோகனப் புன்முறுவல் பூத்தாள். தன் கையில் உள்ள வீணையை விட இனிமையான குரலில் பேசலானாள்:

    `மகனே! என் அருள் இருக்க உனக்கேன் கவலை? நாளை அதிகாலை கூத்தனோடு இடையர் தெருவில் நடந்து செல். கூத்தன் செவியில் துமி என்ற சொல் விழுமாறு செய்ய வேண்டியது என் பொறுப்பு!`

    இப்படிச் சொல்லிக் கலகலவென மகிழ்ச்சியுடன் நகைத்த கலைவாணி, கம்பர் கனவில் இருந்து வெளியேறினாள்.

    கனவு கலைந்த கம்பர் வியப்புடன் எழுந்தார். கனவை நினைத்து நெகிழ்ந்தவாறே அதிகாலை வரை காத்திருந்தார்.

    சூரியன் உதித்ததும் ஒட்டக்கூத்தர் இல்லம் சென்றார். `வாருமய்யா கூத்தரே!` என அவரையும் அழைத்துக் கொண்டு வீதியில் நடக்கலானார். துமி என்ற சொல் யார் வாயில் இருந்தாவது வெளிப்படுகிறதா என ஆராய்ந்தவாறே நடந்தார்கள் அவர்கள். இடையர் தெருவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

    அந்தத் தெருவில் எல்லா வீடுகளும் உள்புறம் தாளிடப் பட்டிருக்க. ஒரே ஒரு வீடு மட்டும் திறந்திருந்தது. அதன் திண்ணையில் ஒய்யாரமாக ஒரு பெண் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.

    பேரெழிலுடன் தயிர் கடையும் இவள் யார்? மண்ணுலகத்தைச் சேர்ந்தவளா இல்லை விண்ணுலகத்தில் இருந்து வந்தவளா? ஒட்டக்கூத்தர் அவளைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார்.

    அந்தப் பெண்ணைச் சுற்றி நான்கு குழந்தைகள் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தன. குழந்தைகளின் எழிலும் நெஞ்சை அள்ளியது. கம்பரும் ஒட்டக்கூத்தரும் அந்த வீட்டைக் கடக்கும்போது ஒட்டக்கூத்தரைக் கடைக்கண்ணால் பார்த்தவாறு அந்தப் பெண் குழந்தைகளிடம் பேசலானாள்:

    `குழந்தைகளே! சற்று தள்ளிப்போய் விளையாடுங்கள். இங்கே விளையாடினால் நான் கடையும் தயிரின் துமி உங்கள் மேல் சிதறும். துமி மேலே விழாதவாறு நீங்கியிருங்கள்!`

    இப்படிச் சொல்லிவிட்டுக் கலகலவென நகைத்தாள் அவள்.

    ஒட்டக்கூத்தர் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தார். பேச்சு வழக்கில் துமி என்ற சொல் இருப்பதைக் கம்பர் இதோ நிரூபித்து விட்டார். ஒட்டக்கூத்தரும் கம்பரும் மவுனமாக நடந்தார்கள்.

    சற்று தூரம் சென்றதும் கம்பர் மகிழ்ச்சியுடன் `என் தரப்பை நிரூபித்துவிட்டேன் கூத்தரே!` என்று சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்றுத் தன் இல்லம் சென்றார்.

    தான் தோல்வியடைந்ததை எண்ணிக் கவலையோடு நின்ற ஒட்டக்கூத்தருக்கு திடீரென ஓர் ஐயம் தோன்றியது.

    யார் அந்தப் பெண்? அவளைச் சுற்றி விளையாடிய நான்கு குழந்தைகளும் யார் யார்? இதுவரை அவர்களை எங்கும் தான் பார்த்ததே இல்லையே? நேற்று இதே இடையர் தெரு வழியாக நான் நடந்து சென்றபோது அந்த வீடு பாழும் வீடாகப் பூட்டியல்லவா கிடந்தது?

    நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோத, பரபரவென நடந்து மீண்டும் அதே வீட்டை அடைந்தார் ஒட்டக்கூத்தர். என்ன வியப்பு! அந்த வீடு பூட்டிக் கிடந்தது. யாரும் திண்ணையில் அமர்ந்து தயிர் கடைந்ததற்கான அடையாளமே அங்கில்லை.

    ஒட்டக்கூத்தர் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. கலைவாணி அல்லவா நான்கு வேதங்களையும் குழந்தைகளாக்கி அங்கு வந்து சற்றுநேரம் அமர்ந்து கம்பருக்குச் சாட்சி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்! இந்த அளவு சரஸ்வதி கடாட்சம் பெற்றிருக்கும் கம்பரைத் தாம் எப்படி வெல்ல முடியும்?

    உலகில் கம்ப ராமாயணம்தான் புகழ்பெறப் போகிறது. நான் எழுதிய ராமாயணம் இனி இருந்தென்ன, இல்லாதிருந்தென்ன?

    விரக்தியுடன் தன் இல்லம் வந்த ஒட்டக்கூத்தர், தான் எழுதிய தனது ராமாயண ஓலைச் சுவடிகள் அனைத்தையும் நெருப்பில் போட்டு எரிக்கலானார்.

    கம்பர் இல்லத்தில் `கம்பனே! உடனே போய் ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தையாவது காப்பாற்று!` என அசரீரி எழுந்தது.

    ஓடோடி ஒட்டக்கூத்தர் இல்லம் வந்து சேர்ந்தார் கம்பர்.

    `கூத்தரே! என்ன செயல் செய்கிறீர்கள்?` என அவர் கையைப் பற்றித் தடுத்தார். அதற்குள் உத்தரகாண்டம் தவிர்த்து மீதிக் காண்டங்கள் அனைத்தும் நெருப்பில் எரிந்துவிட்டன.

    `கூத்தரே! நான் ராம பட்டாபிஷேகத்தோடு என் ராமாயணத்தை நிறைவு செய்து விடுவேன். உத்தரகாண்டத்தை எழுத மாட்டேன். உலகில் உங்கள் உத்தரகாண்டமே நிலைபெறும். கவலை வேண்டாம்!`

    கம்பர் சொன்ன வாசகங்களைக் கேட்டு நெகிழ்ச்சியோடு கம்பரைக் கட்டித் தழுவிக் கொண்டார் ஒட்டக்கூத்தர். நெருப்பில் எரிந்த சுவடிகளோடு அவர் நெஞ்சில் எரிந்த பொறாமையும் அழிந்தது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • வைராக்கியம் என்றால் என்ன?
    • ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், வைராக்கியம் என்றால் என்ன? நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது என்று பார்த்தோம். நம்முடைய வேதாந்தம் சொல்வது என்னவென்றால் "கோப வைராக்கியா, துக்க வைராக்கியா, சிந்தனை வைராக்கியா, ஞான வைராக்கியா" என்கிறது.

    கோப வைராக்கியம்: என்பது நாம் ஒருவர் மீது கோபம் வந்து விட்டால், வாக்கு வாதத்தில் இனி என் முகத்தில் முழிக்காதே, உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்கிறோம்.

    ஆனால் அந்த உணர்ச்சி நிலையில் இருந்து நாம் உணர்வு நிலைக்கு திரும்பியவுடன் அந்த வைராக்கியம் நம்மை விட்டு விலகுகிறது, ஆனால் வார்த்தைகள் மட்டும் விலகுவது இல்லை. எனவே கோப வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    துக்க வைராக்கியம்: என்பது நம் வாழ்வில் ஏதாவது நடக்க கூடாதது நடந்து விட்டால் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. இனி நான் எப்படி வாழ்வேன் என்று புலம்பி கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறோம்.

    உதாரணத்திற்கு நமக்கு நெருங்கிய உறவுகள் யாராவது மரணம் அடைந்து விட்டால், நம் வாழ்வே பறிபோனது போல் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு சில நாட்கள் செல்ல செல்ல, நாம் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறோம். அன்று ஏற்பட்ட துக்கம் இன்று எங்கே போனது என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

    வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இன்பத்தை ஏற்று கொள்ளும் நாம் துன்பத்தை ஏற்று கொள்ள ஏன் மறுக்கிறோம்? எனவே துக்க வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    சிந்தனை வைராக்கியம்: என்பது மனம் பற்றியது. மனம் அமைதி நிலையில் இருக்கும் போது சில முடிவுகளை எடுப்போம். உதாரணத்திற்கு இந்த புத்தாண்டில் இருந்து நான் இந்த இந்த விஷயங்களில் சில விதிமுறைகளை கடைபிடிப்பேன். சில பழக்கங்களை விட்டு விடுவேன் என்று சபதம் எடுக்கிறோம்.

    ஆனால் அந்த வைராக்கியம் நிறைய மனிதர்களுக்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. வாழ்க்கை சக்கரத்தில், சுழற்சியில் மாட்டி கொண்டு, துன்பம் வரும் போது, மனம் துவண்டு விடும்போது நம் சபதம் எல்லாம் மறைந்து விடுகிறது.

    எனவே சிந்தனையில் தெளிவு வேண்டும். இல்லை என்றால் சிந்தனை வைராக்கியத்தில் வெற்றி பெற முடியாது. மனம் எப்போதும் அமைதி நிலையில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

    ஞான வைராக்கியம்: என்பது ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் வாழ்நாள் முழுவதும் என்ன துன்பங்கள் வந்தாலும் தான் எடுத்த கொள்கையில் மாறாது இருக்க வேண்டும். முதலில் சொன்னது எல்லாம் உடல், மற்றும் மனம் சார்ந்து வருவது ஆகும். ஆனால் ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    ஆத்மா என்பது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. மற்றது அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடியது. எனவே வாழும் காலத்திலேயே பிறவி பயனை அடைவதற்கு உடல், மனம், உயிர், குணம், ஆத்மா சார்ந்து, இயற்கையோடு சேர்ந்து கொண்டு வாழ்ந்தால், ஞான வைராக்கியம் கிடைக்கும்.

    வாழ்வில் எது நடந்தாலும் மனதை சமநிலையில் வைத்து பழகி கொள்ள வேண்டும். அதனால், புலன்கள் நம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு நாம் ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க வேண்டும்.

    விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்தால் உலகம் அைமதியாகும். ஏனெனில் விஞ்ஞானம் என்பது விண்பற்றிய அறிவியல். மெய் ஞானம் என்பது இறைவன் மற்றும் நம்மை பற்றிய அறிவாகும். இதை உணராமல் இருப்பதால் தான் கர்ம வினை பதிவுகளில் சிக்கி, நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம்.

    ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அது என்னவென்றால், விஞ்ஞானம் என்றால் ஆராய்சி என்று பொருள். எனவே விஞ்ஞானத்திற்கு, ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு பொருள் தேவை.

    பொருள் என்கின்ற ஒன்று இருந்தால் தான் விஞ்ஞானத்தால் ஆராய்ச்சியை தொடரமுடியும். பொருள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாது. விஞ்ஞானத்தின் ஆரம்பம் ஆனது பொருளில் தொடங்கி அதன் முடிவு இருளில் முடியும். இருள் என்பது இறைவன். அந்த இடத்திலே ஒன்றும் இல்லை.

    அதனை தான் மகான்கள் பாழ், இருள், சூனியம், ஆதி, சுத்தவெளி, கடவுள், இறைவன், என்று நாம் சொல்கிறோம்.

    ஆனால் மெய்ஞானம் என்பது, விஞ்ஞானம் எதில் முடிந்ததோ (இருள்) அதில் தான் தொடங்கும். இருளில் தொடங்கும் மெய்ஞானம் நமக்கு உள்ளே முடியும். முடிவு என்பது நானாக இருக்கும் போது,அண்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் இந்த பிண்டத்தில் உள்ளது என்கின்ற உண்மை விளங்கும். இது தான் ஞான வைராக்கிய நிலையாகும்.

    இந்த நிலை வந்து விட்டால் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் மூச்சின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மனம் அமைதி நிலை பெறும்.

    இந்த நிலையில், நம் மனதிலே உதிக்கின்ற எண்ணங்களின் வெளிப்பாடு, சொல்லாக மாறி, நல்ல செயலிலே முடியும். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நமது மனம் ஆனது விரிந்த நிலையில், நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையில் தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.

    மனம் விரியும் போது, நமது எண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத எண்ணங்களாக மலர்கிறது. இது கர்ம வினை பதிவுகளில் இருந்து, நம்மை விடுவித்து கொள்ளும் வழியாகும்.

    குறுகும் மனம் ஆசை, துன்பத்தை தரக்கூடிய எண்ணங்களாக மலரும் போது, நமக்கும் பிறருக்கும், தீமையை உருவாக்குகிறது. இதனால் நமக்கு தீமை தரக்கூடிய பதிவுகள் சேருகிறது.

    எனவே எந்த ஒன்றுக்கும் ஆரம்பம் இறைவன் என்றால் அது முடியும் இடம் நம்முடைய மனம் ஆகும். அசையாமல் இருந்தால் சிவம். அது அசைந்தால் மனம். எனவே ஞான வைராக்கியத்திலே நமக்குள்ளாக அடிக்கடி நான் சிவமா? அல்லது மனமா என்ற கேள்வியை எழுப்பி கொண்டே இருக்க வேண்டும். இதை தான் அக ஆராய்ச்சி என்கிறோம்.

    உதாரணத்திற்கு நாம் உடலை அசைத்து நடந்து செல்லும் போது, நம்மோடு எந்த அசைவும் இல்லாமல், நமக்குள்ளாக ஒன்று வந்து கொண்டு இருக்கிறதே அது யார்? எனக்கு தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று சொல்கிறோமே, அது உடலுக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா?

    எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்கி–றோமே எனக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா? -இப்படி என்றாவது நாம், நம் சுகத்தை நோக்கி ஆராய்ச்சி செய்து இருக்கிறோமா?

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேலே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், எந்த வித தொடர்பும் இல்லாமல், எந்த கர்ம வினை பதிவுகளோடும் தொடர்பு இல்லாமல், எந்த பொருள் மற்றும் உறவுகளோடு பற்றும் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறதே அது யார்?

    இதை அடிக்கடி நாம் நமக்குள்ளாக கேள்வியாக எழுப்பும் போது, அதுவே சர்வ வல்லமை பொருந்திய ஆத்மா என்பது தெரிய வரும்.

    ஒரு கட்டத்தில் இந்த ஞான வைராக்கியம் மலரும் போது, இந்த உடல், மனம், உயிர், பொருள் அல்ல நான், ஏகமாக எங்கும் உள்ள இறைவனின் சொரூபமான ஆத்மாமே நான் என்பது விளங்கும். அப்படி தன்னை ஆத்மாவாக உணர்ந்தவர்களை தான் 'ஆத்மஸ்வருபி' என்று அழைக்கிறோம்.

    அந்த நிலையில், நாம் காணும் காட்சிகள், பொருட்கள், நபர்கள் அனைத்தும் இறைவனின் பிம்பங்களாகவே தெரியும். இதை தான் 'சர்வம் பிரம்ம மயம்' என்று கூறுகிறோம்.

    அப்படி ஞான வைராக்கியத்திலே எல்லாம் இறை காட்சிகளாக தெரிந்தால், நம்மோடு தினமும் நம்முைடய குடும்பத்திலே உறவாடி கொண்டு இருக்கின்ற உறவுகளான கணவர், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் இவர்கள் எல்லாம் யார்? அனைவரும் இறைவனின் பிம்பங்களே!

    இந்த நிலை வந்து விட்டால் நமக்குள்ளே எந்த பகையும், வெறுப்பும் வராது. குடும்பத்திலே சச்சரவுகள் எதுவும் வராது. இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமைதி என்பது தனி மனிதரில் ஆரம்பித்து, குடும்ப அமைதியாக மாறி, அது சுற்றத்தை மாற்றி, சுற்றம் ஆனது ஊரையே மாற்றி, ஊர் ஆனது உலகத்தை மாற்றி உலகம் முழுவதும் அமைதியை கொடுக்கும் வல்லமை படைத்தது தான் இந்த ஞான வைராக்கியம்.

    இதை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். தொடக்கம் என்னில் இருந்து என்றால், நான் எப்பேற்பட்டவன், எனக்குள் உள்ள பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமக்குள் உள்ள தெய்வீகத்தை முறையாக வெளிபடுத்த வேண்டும். அப்படி செய்தால் நான் வாழும் காலத்திலேயே ஞானம் அடைந்தவராக மாறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

    இறைவன் நம்மை பல பிறவிகள் கடக்க வைத்து, இறுதி பிறவியான மனிதனாக ஒரு தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கி, அதனோடு நமக்கான கர்மாவையும் கொடுத்து இருக்கிறார் என்றால், நாம் எவ்வளவு புண்ணி யம் செய்தவர்கள்.

    எனவே நான் ஏன் பிறந்தேனோ என்று சலிப்பு அடையாமல், இந்த பிறவியை கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதன் மூலம் நமது வாழ்க்கை முழுமையடையும். அந்த முழுமை பேறு பற்றி ஆராய்ச்சி தொடரும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள்

    கி. சௌமித்ரன்,

    பொன்னி சௌமித்ரன்

    போன்: 9444234348

    • அன்பு இல்லையெனில் குடும்பத்தில் அமைதி இருக்காது.
    • அன்பிற்கு பக்தி, அர்ப்பணித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    திருக்குறளில் உடைமைகள் என்னும் தலைப்பில் 10 அதிகாரங்கள் உள்ளன. உடைமை என்பது மூலதனம். அதில் முதல் உடைமை அன்புடைமை. அன்பு இல்லையெனில் குடும்பத்தில் அமைதி இருக்காது. கணவனுக்கு மனைவியிடத்தில் அன்பு மேலோங்கி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாய்க்கும், பிள்ளைக்கும் அன்பு இருக்க வேண்டும்.

    தொழிற்சாலைகளில், சக தொழிலாளர்களிடம் அன்பு காட்டுதல் அவசியம். அப்பொழுதுதான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். அன்பிற்கு நாட்டுப்பற்று என்ற பொருளும் உண்டு. தியாகம் என்ற பொருளுமுண்டு. அன்பு இருக்கும் இடத்தில் அறிவு இருக்கும். அன்பு இல்லையென்றால், அறிவு இருக்க முடியாது. தியாகத்திற்கு அன்பே அடிப்படை காரணமாக உள்ளது.

    இல்லறத்தை நடத்துவதற்குக் காரணமான அன்பே பிறவிப் பிணியையும் அறுக்கும்; விட்டுக் கொடுக்கும் பண்பை உண்டாக்கி நட்பை வளர்க்கும். உலக வாழ்க்கைக்கு, அன்பு தேவைப்படுகிறது, பிறவித் துன்பத்தை ஒழிக்கவும் அன்பு தேவைப்படுகிறது.

    பிற உயிர்கள்பால் அன்பு செலுத்துவதை ஜீவதயவு, ஜீவகாருண்யம், கருணை என்றும் கூறலாம். இதற்கு அன்பு உணர்ச்சியே காரணமாக உள்ளது. அதனால் எல்லா ஜீவராசிகளும் நம்மை வாழ்த்தும்.

    எறும்பு முதல் யானைவரை மற்றும் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் மனிதனிடத்தும் அன்பு மேலோங்கி இருக்க வேண்டும். ஏனெனில், எல்லா உயிர்களிடத்தும் தலைவன் இருக்கின்றான். எல்லா ஜீவராசிகளிடத்திலும், மக்களிடத்திலும் அன்பு செலுத்தினால் அவர்கள் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவார்கள். அதன் விளைவாகவே கடவுள் நம்மீது அன்பு செலுத்துவார்.

    அன்பிற்கு பக்தி, அர்ப்பணித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். நம்முடைய ஊழ் நீங்கி ஞானம் சித்திக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும். எதனை நாம் விரும்புகின்றோமோ அதனை எல்லாம்வல்ல கடவுள் நமக்கு கொடுப்பான்.

    இதயத்தில் அன்பு இல்லாமல் பக்தி செலுத்த இயலாது. தன்னால் படைக்கப்பட்ட எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்தக்கூடியவன் கடவுள். மற்ற உயிர்கள் மீது அன்பு செலுத்தினால் தூய்மையான எண்ணங்கள் உண்டாகும். இதனால் இறைவனின் ஆசி கிடைக்கும். அதன் விளைவாக முக்தி நெறியை அடைய வாய்ப்பு உண்டாகும்.

    அன்புணர்ச்சி என்பது தனித்தன்மை உடையது. அன்பின் அடிப்படையிலேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் அன்புணர்ச்சி குறைந்துள்ளது. இதுவே காலத்தின் கோலம்.

    மழையின்மை, வறுமை, பட்டினி, பஞ்சம், நோய் இவைகளெல்லாம் மிகுந்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை உள்ளது. அதனால் மக்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். பேராசை என்னும் இருள் அவர்களை சூழ்ந்துள்ளது.

    வறுமை அகற்றப்படவேண்டும். அதற்கு இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டும். இறைவன் மீது பக்தி கொண்டு மனம் உருகி வேண்டினால், வறுமை நீங்கி சுபிட்சம் அடையலாம். நாம் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்கின்றோம். நமக்கு வருகின்ற பொருளை முறைதவறி செலவு செய்தால் அருள் கிடைக்காது. சரியான முறையில் மக்களுக்கு பசியாற்றுவதால் தலைவன் நம்மீது கருணைக் கொண்டு கேட்பவற்றை எல்லாம் கொடுக்கின்றான்.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    நாம் அன்புணர்ச்சியை மூலதனமாக வைத்தே அறப்பணிகளைச் சிறப்பாகச் செய்கின்றோம். தூயமனம் உள்ள இடத்தில் அன்பு இருக்கும். அன்பின் முதிர்ச்சிதான் ஞானம். மரணமில்லாப் பெருவாழ்வு அடைய வேண்டுமென்றால், முற்றுப்பெற்ற முனிவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அப்படி அன்பு செலுத்துவதால் காம உணர்ச்சியிலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல முடியும்.

    அன்புக்கடலாக இருப்பவனிடத்தில் அன்பு செலுத்தினால் மனம் தூய்மை அடைந்து கனிவாக இருக்கும். அன்புக்கு, கடவுள் என்ற பொருள் உண்டு. இந்த அன்பு உணர்ச்சி வீடுதோறும், நாடுதோறும் மக்கள் அனைவரிடமும் தோன்றிப் பரவ வேண்டும்.

    அன்பை அடைத்து வைக்கக்கூடிய தாழ் இல்லை. அன்பு உடையவர்கள் எத்தனை காலம் பிரிந்திருந்தாலும், அவர்கள் சிந்தும் கண்ணீரில் அவர்கள் உள்ளத்தில் உள்ள அன்பு வெளிப்படும். பேராசை உள்ளவர்களிடம் அன்பு இருக்க முடியாது. பேராசை என்பது இருட்டு. அன்பு என்பது வெளிச்சம். அன்பு இல்லாதவர்கள் பிறர் பொருளை அபகரித்து பிறரை வருத்துவார்கள், மிருகத்துக்கு ஒப்பாவார்கள். உருப்பானைத் துன்பப்படுத்துவார்கள், கருணை இல்லாதவர்களாக.

    புலால் மறுத்தல், உயிர்க்கொலை செய்யாதிருந்தல், உள்ளம் உருகி -அன்புனம் செய்தல், பசியாற்றுவித்தல் போன்ற பண்புகளினால் மட்டுபே அன்புணர்ச்சி மிகும். இல்லையெனில் அன்புணர்ச்சி வராது. அன்பு இல்லாத இருள் சேர்ந்த இதயத்தைக் கொண்டவர்கள், நீதி தவறி நரகத்திற்குச் செல்வார்கள். இறைவனிடம் மன்றாடி தன்னுடைய குறைகளைப் போக்கிக் கொள்ளாதவனின் மனதில் இருள் சூழ்ந்திருக்கும். அவன் அன்புணர்ச்சி இல்லாதவனாக இருப்பான்.

    கனிவே இல்லாத பாறை போன்ற இதயத்தில் ஒளி இருக்காது, இருள் சூழ்ந்திருக்கும். அன்னதானம், தியானம் இரண்டும் செய்யச்செய்ய ஒளி பெருகும். அதனால் சிறிய ஒளி மேலும் தூண்டப்பட்டு பெரு வெளிச்சம் கிடைக்கும். ஒளி பெருகினால் அறிவு முதிர்ச்சியடையும். அறிவு முதிர்ச்சியடைந்தால் தியாகம் வரும், உயர்ந்த பெருந்தன்மை உள்ளவனாக மாறமுடியும்.

    பக்தி என்ற ஒளியும், புண்ணியம் என்ற ஒளியும் இருந்தால் இதயம் தூய்மையாகி எல்லாவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் குணம் உண்டாகும். அன்பு இல்லாதவன் மற்றவர் பொருளைத் தனதாக்கிக் கொள்வான்.

    உடம்புக்கும் உயிருக்கும் உள்ள பொருத்தம் அன்பு செலுத்தி வாழ்தலுக்காகவே. அன்பு இல்லாதவன் பனைமரம் போன்று துணை இல்லாமல் இருப்பான். கடுமையான பேச்சுக்களால் உறவுகளைத் துண்டித்துக் கொள்வான்.

    அன்பு உணர்ச்சி நட்பு உறவுகளைப் பெருக்கும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உண்டாக்கும், மிகுந்த சிறப்பைத் தரும். அன்பின் முதிர்ச்சியால் மக்கள்மீது அன்பு கொண்டவர் வாழ்க்கையை நோக்கினால் அவர்கள்மீது மக்களும் அன்பு செலுத்தி வாழ்வார்கள். இவ்வுலக வாழ்க்கையில் அன்பு பொருந்தி வாழ்கின்றவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    நாம் தர்மம் செய்வதற்கு எவ்வாறு அன்பு காரணமாக உள்ளதோ, அவ்வாறே பகையை வெல்வதற்கும் அன்பே கருவியாக உள்ளது. பகை இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்காது. அப்பகையை அன்பின் மூலம் வென்று மன அமைதி பெற முடியும். அறிவு உள்ள மக்கள் பகைவனிடமும் அன்பு காட்டி அவர்களிடம் உறவு வைத்துக்கொள்வார்கள். அன்பின் துணை கொண்டு பகையை அழிக்கலாம்.

    எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொண்டு நடப்பவருக்கு, அந்த எல்லா உயிர்களிலும் கலந்திருக்கும் கடவுள் கருணைகாட்டுவார். எல்லோரையும் துன்பப்படுத்துபவன், அவர்கள் அடையும் துன்பத்தின் காரணமாக பாவத்தைச் சேர்த்துக்கொள்வான். அவனுக்குத் துன்பமும், நோயும் சேரும். எலும்பு இல்லாத புழுவை சூரியன் வருத்துவது போல் அன்பு இல்லாதவனைக் கடவுள் நோய் கொடுத்து வருத்துவார்.

    இதயத்தில் அன்பு இல்லாதவன் பட்டமரத்திற்கு ஒப்பாவான் பட்டமரத்தில் நிழல் இருக்காது, துளிர்க்காது, பசுமை இருக்காது, போன்று தனியாய் இருப்பான். அவனுடைய அன்பில்லாத கடுமை அவன் அருகில் யாரும் செல்லமாட்டார்கள். அவனுக்கு வாழ்க்கையே வறண்டு போனதாக இருக்கும்.

    நல்லவற்றைச் செய்கின்ற கைகளும், கருணையுடன் கூடிய கண்களும் அமைதியான முகத்துடனும், கனிவான புன்னகையுடனும் இருப்பதற்கு, அன்பு உணர்ச்சி உள்ளத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் முகம் கடுகடுப்பாகவும், சினத்துடனும் காணப்படும். அன்பு இல்லையேல் உடம்பின் உறுப்புகள் பயன்படாதவைகளாகவே இருக்கும்.

    அன்புடைய பக்தி, மனம் உருக தியானிக்கச் செய்யும், பாவபுண்ணியத்தை அறியும் அறிவை உண்டாக்கும். தூய அன்பு உயர்ந்த சிந்தனையை கொடுக்கும். அதனால் பேச்சிலும் பாவத்தை உண்டாக்காது.

    காம தேகத்தை நீத்த ஞானியர்கள் மீது அன்பு செலுத்தசெலுத்த உள்ளே சுனல் தோன்றும். அதனால் எல்லா நன்மைகளும் உண்டாகும். நல்லமனம் உண்டாகும். தேகத்தின் இயல்பைப் பற்றி அறியலாம்.

    உடம்பையும், உயிரையும் அறிந்து அதற்குண்டான தொடர்பை அறிந்து கொள்ள முடியும். ஞானியர்கள், உடம்பு என்கிற சந்திர கலையையும், உள் என்கிற சூரிய கலையையும் ஒன்றாக்கிப் புருவமத்தியில் செலுத்துவார்கள். அதனால் அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.

    அவர்கள் திருவடியைப் பற்றி, அன்பு செலுத்தி, மரணமில்லா பெருவாழ்வு அடையும் மார்க்கத்தை அடைந்து மரணத்தை வெல்ல முடியும். இதற்கு அன்பின் அடிப்படையில் உள்ள பக்தியே காரணமாகும்.

    • நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும்.
    • வேட்பாளர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு.

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் மதன் லாகூர், ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் சமீபத்தில் ஒரு அழைப்பு விடுத்தனர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இத்தகைய விவாதங்கள் எப்போதும் நடந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர்கள் பல்வேறு நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள்.

    நாட்டின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய வேட்பாளர்களின் கருத்துகளை வாக்காளர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு. விவாதங்களின் சிறப்பு மற்றும் வேட்பாளர்களின் அணுகுமுறைத் தெளிவு ஆகியவற்றை வைத்து வாக்காளர்கள் முடிவுக்கு வருவார்கள்.

    சில நேரங்களில் நாடு முழுமைக்குமான ஒரே ஒரு பிரச்சினை குறித்த விவாதமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. "கிரேட் டிபேட்" என்று இன்றும் அழைக்கப்படும் விவாதம் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் சார்பாக நடந்தது.

    அதன் பின்னர் தான் குடிமக்களின் உரிமைகள் குறித்த ஷரத்து அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்றது. கூட்டாட்சித் தத்துவம் வலிமை பெற்றது.

    அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே டிபேட்டுகள் களை கட்டத் துவங்கி விடும். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவருக்கும் இடையிலான விவாதம் 2020-ல் நடந்தது.

    முன்னதாக "எப்போது வேண்டுமானாலும்- எங்கு வேண்டுமானாலும்- எந்த நேரம் வேண்டுமானாலும்" விவாதத்திற்கு தயார் என்று மார்தட்டினார் டிரம்ப். ஆனால் பல டிபேட்களுக்கு அவர் டிமிக்கி கொடுத்தார். இறுதியாக பைடன் விவாதம் வாக்காளர்கள் மனங்களைக் கவர்ந்தது.

    ஜனாதிபதி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி 1960 முதல் நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களால் அவை நடத்தப்பட்டன. ஆனால் 1987-க்குப் பிறகு டிவிக்கள் இத்தகைய விவாதம் நடத்த அனுமதி இல்லை.

    ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு இன்று சிபிடி என்று அழைக்கப்படும் தனியான அரசு அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. டிபேட் மற்றும் அவற்றின் விதிமுறைகளை அது வகுக்கிறது. உதவி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதங்களும் நடப்பது உண்டு.

    வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் போர்ட் எதிரணி வேட்பாளரான கார்ட்டரை விவாதத்திற்கு அழைத்தார். அந்த டிபேட்டில் போர்ட் ஜொலிக்கவில்லை. பரபரப்பாக இருந்த அந்த விவாதத்தை நான் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டேன்.

    நேருக்கு நேர் லைவ் விவாதங்களில் உடல் மொழி மிகவும் முக்கியம். அடிக்கடி வாட்சைப் பார்த்தார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அமெரிக்காவில் உண்டு.

    விவாதத்திற்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே நிபுணர்கள் இருக்கிறார்கள். வேட்பாளர்களின் அங்க அசைவுகள் மற்றும் பார்வை மூலம் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. நடுவர் உண்டு. எதிர்த்தரப்பு வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வேட்பாளர் எப்படி பதில் சொல்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.

    லைவ் டிபேட்டுகளுக்குப் பின் அவை பற்றிய விமர்சனங்கள் டிவிக்களில் எழுப்பப்படும். மதிப்பெண்கள் போடப்பட்டு வெற்றி-தோல்வி அலசப்படும். எனவே உலகெங்கிலும் இது பேசுபொருள்.

    ஆனால் அமெரிக்கக் கான்செப்ட் இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அங்கு இரண்டு கட்சி முறை. அதிபர் தேர்தல் என்பதால் நேரடி விவாதம் சாத்தியப்படுகிறது.

    மேலும் ஆங்கிலம் என்கிற ஒற்றை மொழி. இங்கு இந்தி பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகிறது. என்றாலும் பல்வேறு பழமையான மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

    இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக யாரும் கிடையாது. நாம் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கிறோம். எனவே மோடி- ராகுல் நேரடி நேருக்கு நேர் சாத்தியமில்லை.

    ஆனால் தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கிற "லீடர்ஸ் டிபேட்" சாத்தியம். நியூசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய விவாதம் நடக்கிறது.

    நேருக்கு நேர் விவாதத்தின் மூலமாக நாட்டின் பொதுப் பிரச்சினை பற்றிய தலைவர்களின் கருத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு எடுக்க அது உதவி செய்யும்.

    தலைவர்களும் கொள்கை மற்றும் செயல்திட்டத்தைப் பற்றி மட்டும் பேசுவார்கள். வெறுப்புப் பேச்சு, மதம் மற்றும் ஜாதி ரீதியிலான பிளவுக்கு இடம் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

    இந்தியத் தேர்தல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் தலைவர்கள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

    தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி இந்து, முஸ்லீம் என்று பேசினார். வெறுப்புப் பேச்சு என்று கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் சென்றன. ஆனால் இப்போது அவரே தான் அப்படிப் பேசவில்லை என்று கூறுகிறார்.

    இறுதியில் யார் எண்ண பேசினார்கள் என்று வாக்காளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. எனவே தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மாதிரியான அமைப்புகள் நேருக்கு நேர் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    ஆனால் உச்சகட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகம் முன்பெல்லாம் கட்சி பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் பொது மேடை அமைத்து தந்து வந்தது தூர்தர்ஷன். அவற்றில் பெரிய தலைவர்கள் பேசி வந்தார்கள். கல்லூரிப் பருவத்தில் ரேடியோவில் அண்ணா, கலைஞர் பேசியதைக் கேட்ட நினைவு இருக்கிறது.

    மொத்தத்தில் பொது மேடைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இப்போதெல்லாம் பெரும்பாலும் செய்தித் தொடர்பாளர்கள் தான் கலந்து கொள்கிறார்கள்.

    பொது மேடைகளுக்குப் பதிலாக டிவிக்களில் தினமும் இரவு விவாத அரங்கம் நடத்தப்படுகிறது. அன்றாடப் பிரச்சினைகள் குறித்த கருத்துகள் அலசப்படுகின்றன.

    அவற்றில் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் மூத்த பத்திரிகையாளர்களும் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

    தலைவர்கள் கலந்து கொள்ளும் நேரடி விவாதம் அல்ல. என்றாலும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் டி.வி. விவாத மேடைகளில் தலைவர்களும் தோன்றுகிறார்கள்.

    இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சில தலைவர்கள் விவாதப் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சிலருக்கு செயல் திறன் மட்டுமே!

    எடுத்துக்காட்டாக 2009 பொதுத் தேர்தலில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் என்று பரவலாக வர்ணிக்கப்பட்ட அத்வானியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் சரிப்பட்டிருக்குமா?

    தலைவர்கள் அனைவருக்கும் "கம்யூனிகேஷன் ஸ்கில்" ஒரே மாதிரி இருக்க வழியில்லை. செய்தித் தொடர்பாளர்கள் தான் அந்தப் பணி செய்கிறார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனே முன்னாள் செய்தி தொடர்பாளர் தான். அப் பணியை அவர் நேர்த்தியாகக் கையாண்ட விதமே அவருக்கு மோடியின் குட் புக்சில் இடம் பெற்றுத் தந்தது.

    பொது விவாதத்தின் தேவை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளும் மூத்த பத்திரிகையாளரும் பின்வருமாறு விளக்கி உள்ளார்கள்.

    1. நடப்பு தேர்தலில் வெறும் குற்றச்சாட்டுகளும், பரஸ்பர சவால்களும் மட்டுமே மலிந்துள்ளன.

    2. மக்களுக்குப் பயன் தரக்கூடிய பொருள் பொதிந்த தீர்வுகள் முன் வைக்கப்படவே இல்லை.

    3. ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா மற்றும் அதை அடுத்து அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பொது விவாதத்தில் கலந்து கொள்வது இந்திய ஜனநாயகத்தை முதிர்ச்சி அடையச் செய்யும் .

    4. எனவே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    ராகுல்காந்தி தரப்பில் உடனடிச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. இணங்கவில்லை. ராகுல் காந்தி வெறும் எம்பி என்றும் அதே நேரத்தில் மோடி பிரதமர் என்றும் அது கூறி விட்டது. இருவருக்கும் ஒரே அரசியல் அந்தஸ்து இல்லை என்றும் மறுத்து விட்டது.

    ஆனால் தேசிய அரசியல் பற்றிய பரப்புரைகளின்போது ராகுல்காந்தியை மட்டுமே "இளவரசர்" என்று மையப்படுத்தினார் பிரதமர். தனக்கு ராகுல் சரியான களப் போட்டியாளர் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். அதாவது களத்தை "மோடி vs ராகுல்" என்று கட்டமைத்தது அவர் தான்.

    தராசு காலகட்டத்தில் மக்கள் மேடை என்ற பதாகையின் கீழ் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை வைத்து இத்தகைய "நேருக்கு நேர்" நிகழ்ச்சிகளை துவக்கத்தில் நடத்தினோம். ஆனால் நாளாவட்டத்தில் வேட்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். எனவே அது கை விடப்பட்டது. மறைந்த எம்.எஸ்.உதயமூர்த்தி இது போன்ற விவாதங்களை நடத்தியதாக ஒரு நினைவு.

    தலைவர்கள் நேரடி விவாதங்களுக்குச் சம்மதித்தால் நமது மக்களாட்சி மேலும் கூர்மைப்படும்.

    ×