என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது.
- மீண்டும் செந்நிறமாக மாறிய கடல்
புதுச்சேரி;
புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலைக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர்.
இந்த நிலையில் இன்று புதுவையில் மழை நின்று, வெயில் அடிக்க தொடங்கியது. கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து கடற்கரை சாலைக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் அனுமதித்தனர்.
இதனால் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரையில் நடந்து சென்று கடல் அழகை ரசித்தனர். அதேநேரத்தில் கடலில் வாழைகுளம் முதல் தலைமை செயலகம் வரையில் ஒரு பகுதி செந்நிறமாக காட்சி அளித்தது. ஏற்கனவே 4 முறை கடலின் நிறம் மாறியுள்ளது. இன்று 5-வது முறையாக கடல் நிறம் மாறி காட்சி அளித்தது.
- தமிழ் வளர்ச்சி சிறகத்தின் பெயர்ப் பலகை மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா நடந்தது.
- மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை தமிழ் வளர்ச்சி சிறகத்தின் பெயர்ப் பலகை மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா, லாசுப்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
புதுவை கலை, பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். தமிழ் வளர்ச்சி சிறக சிறப்பு பணி அலுவலர் வாசுகி, உறுப்பினர்கள் புலவர் வெங்கடேசன், வேல்முருகன், பேராசிரியர் இளங்கோ, சிறுகதை படைப்பாளர் எழுத்தாளர் பூபதி பெரியசாமி, சுந்தர முருகன், ஆரோக்கிய நாதன், முருகையன், தமிழ் ஆர்வலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- பாகூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
பாகூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில், மழை வெள்ள பாதிப்பு நிலவரம், முன்னெச்சரிக்கை மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பாகூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ, மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்வது, மின்தடை நேரங்களிலும் தடை இன்றி குடிநீர் வழங்குவது, மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்திட ஜே.சி.பி. இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில்,பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பாகூர் துணை தாசில்தார் விமலன், மின் துறை இளநிலை பொறியாளர்கள் ஸ்டாலின், பிரபுராம், வேளாண் அதிகாரி பரமநாதன், பொதுப் பணித்துறை உதவி பொறியளர் ராஜன், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
- மீனவர்களுக்கு இந்த மீன்பிடி இறங்கு தளம் மிக முக்கியமான கட்டுமானம் ஆகும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது, கண்டிக்கத்தக்கது. இந்த மீன்பிடி இறங்கு தளம் உலக வங்கி நிதியுடன் உருவாக்கப்பட்டது. அதன் மேம்பாட்டுக்கும் விரிவாக்கத்திற்கும் மத்திய அரசு ரூ.55 கோடி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை சென்ற மாதமே துவங்கி இருந்தால் இந்த விரிசல்கள் ஏற்பட்டு இருக்காது. மீனவர்களுக்கு இந்த மீன்பிடி இறங்கு தளம் மிக முக்கியமான கட்டுமானம் ஆகும். அவர்களது தொழிலை மேம்படுத்தும் ஒரு பெரிய அமைப்பாகும்.
இதைக்கூட ஒரு தரமான நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய வசதியாக அரசால் உருவாக்கித் தர முடியவில்லை. துவக்க விழா செய்வதற்கு முன்பே அது சேதமாகியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர், அதிகாரி மற்ற சம்பந்தப்பட்ட வர்களின் இந்த தரமற்ற வேலைக்கான காரணத்தையும் விளக்கத்தையும் கேட்க வேண்டும்.
அவர்கள் தங்கள் கடமையில் தவறி இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இந்த சேதத்தை சரி செய்ய தேவையான நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.
புதுச்சேரி:
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்க சாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக மாண்புகளைக் கட்டிக்காப்பதில் பத்திரிகை மற்றும் ஊட கங்களின் பங்கு அளப்பரியது. பத்திரிகையாளர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள்.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது, பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக விளங்கும் பத்திரிகைத்துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி நல்வாழ்த்துகனைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலையில் திரண்டதால் பரபரப்பு
- சாலையோரம் இருந்த அம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய வற்றை இடித்து அகற்றி வருகின்றனர். அரியூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக சாலையோரம் இருந்த அம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலையில் திரண்டனர். போலீசார் அவர்களை மறித்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோவிலை இடித்து தரைமட்ட மாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- புதுவையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை.
புதுச்சேரி:
பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் கோபால், சன்.சண்முகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள படுகை அணை, ஏரி மற்றும் குளங்களை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் நீர் வழித்தடத் தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் பயன்பெரும் வகையில் மட்டுமே காப்பீட்டு திட்டம் உள்ளது.
பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுவை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் பயிர் காப்பீடு திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகளாக மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் மற்றும் மழை பாதிப்புகளுக்கான எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எல்லாவற்றையும் பேசக்கூடிய கவர்னர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். புதுவை அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- ரேவதி, மற்றும் சரோஜா உதவி பேராசிரியைகள் தேவி சாந்தினி, இந்துஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை சிறப்புற வழிநடத்தினர்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நெட்டப்பாக்கத்தில் உள்ள ஆத்மா வேளாண் விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் சிறப்பு ஒரு நாள் இயல்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) முகாம் நடைபெற்றது.
இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயல்முறை மருத்துவ துறையின் பேராசிரியர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினார். முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமினை நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், ஏ.கே. ராவ் கெலுஸ்கர் ஒருங்கிணைத்தார். ரேவதி, மற்றும் சரோஜா உதவி பேராசிரியைகள் தேவி சாந்தினி, இந்துஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை சிறப்புற வழிநடத்தினர்.
- கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
- விபத்து குறித்து உண்மை நிலையை கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நிர்வாகி களுடன் நேரில் சந்தித்து வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காலாப்பட்டில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையால் அரசுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை. கடந்த 4-ந் தேதி அந்த தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.
விபத்து நடந்து 10 நாட்களாகியும் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிர்வாகத்தில் உள்ள யார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படவில்லை. அங்கு பணியில் உள்ள அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விபத்து குறித்து உண்மை நிலையை கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட வேறு மாநிலத்தை சேர்ந்த பணியில் உள்ள நீதிபதி தலைமையில் சுற்றுப்புற சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் ஆகியவற்றில் புலமை பெற்ற அதிகாரிகளை உறுப்பினர்களாக சேர்த்து ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
விசாரணைக்கு பிறகு ரசாயன தொழிற்சாலையால் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பில்லை என தெரிந்தால் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கலாம். அதுவரை அந்த தொழிற்சாலையை உற்பத்தி பிரிவினை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் தமிழிசை உறுதி
- முத்ரா வங்கி திட்டத்தில் 4ல் ஒருவருக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த விழா காணொளி காட்சி மூலம் புதுவை கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுவை ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடந்த பழங்குடியினர் கவுரவ தின விழாவுக்கு தலைமை செயலர் ராஜீவ் வர்மா வரவேற்றார். கலெக்டர் வல்லவன் முன்னிலை வகித்தார்.
கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு செயலர்கள் முத்தம்மா, கேசவன், துறை இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பழங்குடியினர் தலைவர் பகவான்பிர்சா முண்டா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விழா. நாட்டின் விடுதலைக்காக பழங்குடியின மக்கள் போராடிய சான்றுகள் இருந்தாலும் வெளியே தெரியவில்லை. பிரதமர் அவர்கள் நலனில் அக்கறை கொண்டு பகவான் மிர்சா முண்டா பிறந்த நாளை பழங்குடியினர் விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு உரிய மரியாதை, இட ஒதுக்கீடு அளித்து வருகிறது. 2016-ல் இருளர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் அனைத்து திட்டங்கள், வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் நமது லட்சியம், வளர்ச்சி யடைந்த பாரதம் என்ற வாகன பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
புதுவையில் பழங்குடி யின மக்களுக்கு பல திட்ட ங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு மருத்துவ வசதி, சாலை, பள்ளிகள் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் சில கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என தகவல்கள் அனுப்பியுள்ள னர்.
முதல்-அமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியினர்கள்.
தெலுங்கானாவில் 12 சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களில் 6 கிராமங்களை தத்தெடுத்து பணிகளை செய்து வருகிறோம். இன்னும் அவர்களுக்கான வசதிகள் செய்துதரப்படா மல் உள்ளது.
பிரதமர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியின மக்களுக்கான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முத்ரா வங்கி திட்டத்தில் 4ல் ஒருவருக்கு எஸ்.சி.,
எஸ்.டி. வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். அவர்களின் வங்கி கடனுக்கு சகோதரனாக நான் கியாரண்டி என தெரிவித்தார்.
பழங்குடியினர் தயாரிக்கும் கைவினை பொருட்கள் விற்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
வெளிநாடு செல்லும்போது வெளிநாடு தலைவர்கள் பரிசு பொருட்களில் அதிகளவில் பழங்குடியினர் தயாரிக்கும் பொருட்கள் உள்ளது. பழங்குடியினர் வளர்ச்சிக்கு பிரதமரோடு இணைந்து புதுவை அரசும் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 24-ந் தேதி நடக்கிறது
- 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், மாலையில் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கி றது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, 22-ந் தேதி காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை, 23-ந் தேதி 4-ம் கால யாக பூஜை மாலை 5-ம்கால யாக பூஜை நடக்கிறது.
24-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திக ளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறுது. 8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபி ஷேகம், தீபாராதனை நடக்கிறது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருப்பணிக்குழு கவுரவ தலைவர் அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.க்கள் பங்கேற் கின்றனர்.
- மீன்களை பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த இளைஞர்கள்
- படுகை அணையில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்கள் துள்ளி குதித்து ஓடுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கனமழையால் செட்டிபட்டு படுகை அணை நிரம்பி வழிகிறது. படுகை அணையில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்கள் துள்ளி குதித்து ஓடுகிறது.
இதனை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செட்டிபட்டு படுகை அணையில் மீன்களை பிடித்தும் செல்பி எடுத்தும், ஆனந்த குளியல் போட்டு உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.






