search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரிகளை கூண்டோடு இட மாற்றம் செய்ய வேண்டும்
    X

    அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து மனு அளித்த காட்சி.

    காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரிகளை கூண்டோடு இட மாற்றம் செய்ய வேண்டும்

    • கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
    • விபத்து குறித்து உண்மை நிலையை கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நிர்வாகி களுடன் நேரில் சந்தித்து வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    காலாப்பட்டில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையால் அரசுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை. கடந்த 4-ந் தேதி அந்த தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.

    விபத்து நடந்து 10 நாட்களாகியும் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிர்வாகத்தில் உள்ள யார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படவில்லை. அங்கு பணியில் உள்ள அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விபத்து குறித்து உண்மை நிலையை கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட வேறு மாநிலத்தை சேர்ந்த பணியில் உள்ள நீதிபதி தலைமையில் சுற்றுப்புற சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் ஆகியவற்றில் புலமை பெற்ற அதிகாரிகளை உறுப்பினர்களாக சேர்த்து ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    விசாரணைக்கு பிறகு ரசாயன தொழிற்சாலையால் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பில்லை என தெரிந்தால் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கலாம். அதுவரை அந்த தொழிற்சாலையை உற்பத்தி பிரிவினை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×