என் மலர்
புதுச்சேரி
பாகூரில் முதல்-அமைச்சருக்கு எதிராக தனவேலுவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீரென அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்:
பாகூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தனவேலு. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாகூரில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவ அதிகாரி உமாசங்கர் (பாகூர்), நாராயணன் (கிருமாம்பாக்கம்) ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த முகாமை பார்வையிட முதல்-அமைச்சர் நாராயணசாமி வர உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களில் தனவேலுவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொகுதியின் முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அங்கு கட்டப்பட்டிருந்த கருப்புக்கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் பாகூர் பூலோக மாரியம்மன் கோவில் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி அவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது முதல்-அமைச்சரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து அதை பறித்தனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. சிறிது நேரம் கழித்து அவை திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடியதாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர் அருகே தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்:
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சுமார் 400 பேரும், ஜிப்மரில் 130 பேரும் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு உத்தரவின்பேரில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வில்லியனூர் அருகே ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குடியிருப்பு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொரோனா பாதித்த 7 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அருகில் உள்ள கூடப்பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் திடீரென்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் தாசில்தார் அருண்அய்யா, துணை தாசில்தார் கஜேந்திரன், மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஆறுமுகம் (போக்குவரத்து) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேறு இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுவையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரியில் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் ஆக.1ந்தேதி முதல் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் வர அனுமதி தரக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசுக்கு குறிவைக்கும் நோக்கில் புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று சஞ்சய்தத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் கட்சி செயலரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்து 50 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இதற்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. காங்கிரஸ் அரசை குறிவைக்கும் நோக்கில் மத்திய அரசு இத்தகைய தந்திரத்தை கையாளுகிறது. கொரோனா நெருக்கடியின் போது கூட மத்திய அரசு இதுபோல் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்த்து அரசு போராடுகிறது. பிரதமருடன், முதல்-அமைச்சரின் ஆன்லைன் மாநாட்டின் போது கூட ஜி.எஸ்.டி. மற்றும் பிற மானியங்களில் புதுச்சேரியின் பங்கை திருப்பிச் செலுத்துமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் பட்ஜெட்டுக்கான அனுமதியை தாமதப்படுத்தி மத்திய அரசு அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.
மறுபுறும் பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் கவர்னர் கிரண்பேடி கொரோனா நெருக்கடியின் இத்தகைய காலகட்டத்தில், அரசின் நலத்திட்டங்களை தடுப்பதிலும், அன்றாட செயல்பாட்டில் தலையிடுவதிலும், நிர்வாகத்தை சீர் குலைப்பதிலும் முனைப்பாக இருக்கிறார்.
மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், மோசமான சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குழுவும் களத்தில் இருக்கும்போது கவர்னர் கிரண்பேடி ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் வேலை செய்யும் நாடகத்தை மட்டுமே நடத்துகிறார்.
பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் பட்ஜெட் அனுமதியை தாமதப்படுத்துகிறார்கள். ஜனநாயகத்தில் மக்களே முக்கியம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் புதுச்சேரி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு இது ஒரு பொருத்தமான பதிலை அளிக்கும். மக்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் பா.ஜ.க.வுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் அடுத்தடுத்த தேர்தல்களில் இதே கதியை அனுபவிக்கும். மேலும் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 764-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 729 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 414 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 764-ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 582 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,67,665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,49,007 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10,695 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,47,324 பேருக்கும், டெல்லியில் 1,15,346 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596ஆக உயர்ந்துள்ளது.

முதலியார்பேட்டை தொகுதியில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம் பொருட்களை பாஸ்கர் எம்எல்ஏ வழங்கினார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதி பழைய மார்க்கெட் வீதி, பாரதிதாசன் நகர், வேல்ராம்பட்டு, திருமகள் நகர் உள்பட பல்வேறு பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. பாஸ்கர் தனது சொந்த செலவில் 20 வகையான காய்கறிகள், 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ் கண்ணா, முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மருத்துவ அதிகாரி டாக்டர் சரண்யா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், தமிழன்பன், முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ், தொகுதி செயலாளர் நாராயணன், சின்னத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

கொரோனா பாதிப்பு குறித்து சந்தேகப்படுபவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 600 படுக்கை வசதிகள் இருந்தாலும் கூட தூய்மைப் பணியில் பிரச்சினை வருகிறது. அதனால் 100 கொரோனா நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றுவதற்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அறிகுறி தெரியாத கொரோனா தொற்று உள்ள 25 நோயாளிகளை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒதியஞ்சாலை சுகாதார நல வழி மையம் சார்பில் ஜவகர் பால் பவனில் இன்று (நேற்று) நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இங்கு சனிக்கிழமை வரை பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில் இடம் பெறாத பகுதிகளுக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கூறும் இடத்தில் பரிசோதனை முகாம் நடத்த சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 1,505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 2,149 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். காரைக்காலில் 1,728, ஏனாமில் 2,354, மாகியில் 2,560 என பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த வகையில் தேசிய சராசரியை விட அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடக்கின்றன.
இதை 4 ஆயிரம் வரை அதிகரிக்கவும் தயாராக உள்ளோம். பரிசோதனை செய்துகொள்வதற்கு யார் வந்தாலும் திருப்பி அனுப்புவதில்லை. காய்ச்சல், சளி இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே பெரும்பாலான நேரம் வீட்டிலேயே இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே செல்லுங்கள். வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி பாகூர் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ..-வாக இருந்தவர் தனவேலு. இவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த 10-ந்தேதி சபாநாயகர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றமத்தில் வழக்கு தனவேலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பாகூர் எம்எல்ஏ தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டசபை சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று காலை மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து 9,06,752 ஆக உள்ளது.
5,71,460 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23,727 பேர் (கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர்) உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று காலை மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக 684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து 829 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது என்பது தற்போதைய சூழலில் இயலாத காரியம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் இன்று (நேற்று) 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முத்தியால்பேட்டை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தேன். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்களுடன் கலந்து பேசினேன். வைத்திக்குப்பம் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ததில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் 2 நாட்களுக்கு முன் அந்த பகுதியில் நடந்த திருமணத்தில் உத்தரவை மீறி அதிகப்படியான மக்கள் குவிந்துள்ளனர். அதன் மூலம் 17 பேருக்கு தொற்று பரவி உள்ளது. இதுபோன்று கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது வீட்டை சுற்றி 25 மீட்டர் தூரம் வரை தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டு வந்தது. இதை தவிர்த்து பாதித்தவர்கள் வசிக்கும் வீட்டிற்கு இடது, வலதுபுறம் என 3 வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அமைச்சரவை கூட்டப்பட்டு குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். பட்ஜெட்டுக்கான ஒப்புதல் பெற 40 நாட்களுக்கு முன்பு கோப்புகளை அனுப்பினோம். மத்திய அரசிடம் இருந்து சில விளக்கம் கேட்டனர். அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கொடுத்ததாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் கவர்னரின் உரை, பட்ஜெட் சம்பந்தமான உரை தயாரிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் எழுத்துப்பூர்வ உத்தரவு வரவில்லை என்பதால் நாங்கள் அந்த கூட்டத்தில் வேறு சில முடிவுகளை எடுத்து விட்டு பட்ஜெட், கவர்னரின் உரை சம்பந்தமான முடிவுகளை ஒத்திவைத்துள்ளோம்.
ஒரு சிலர் சட்டமன்றத்தை பல நாட்கள் நடத்த வேண்டும் என்கின்றனர். அதனை முடிவு செய்வது சபாநாயகர் தான். அவர் சட்டமன்ற அலுவல் குழு கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்வார். கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் குறுகிய நாட்களில் சட்டசபை கூட்டத்தை முடித்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் கூட கூட்டப்படவில்லை. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், சமூகவியல் உள்பட அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம்.
சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதாலும், நகரப் பகுதி மக்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உள்ளதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு துறை மந்திரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
புதுவை பல்கலைக்கழகத்தில் குறிப்பாக மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் எங்களை சந்தித்து தற்போது நாங்கள் களத்தில் இருந்து பணி செய்து வருகிறோம். எனவே படிப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.

முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் தர வேண்டாம் என்று கடைக்காரர்களை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
திருபுவனை:
நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் வணிகர்கள் நலச்சங்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து வியாபார கடைகளின் உரிமையாளர்களை அழைத்து கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமை தாங்கி, பேசியதாவது:-
மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்யவேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்கக் கூடாது.
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். தொற்று பரவலை தடுப்பது மக்களின் கையில் தான் உள்ளது. சிலரின் கவனக்குறைவால் தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவது வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், கலிதீர்த்தாள்குப்பம், மதகடிப்பட்டு வணிகர்கள் நலச்சங்க தலைவர் ஜெயக்குமார், துணைத்தலைவர் அருள்வாணன், செயலாளர் துரைமணி, பொருளாளர் ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.