என் மலர்
புதுச்சேரி
பாகூர் அருகே விபத்தில் நெல் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூரை சேர்ந்தவர் சேகர் (வயது 48). நெல் வியாபாரி. சம்பவத்தன்று இவர் நெல் வியாபாரம் தொடர்பாக பாகூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் அரங்கனூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து எழுத்துப்பூர்வ உத்தரவு வந்துள்ளது. எனவே 20-ந்தேதி சட்டசபை கூடும் என்று தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான அரசின் செலவினத்துக்கு இதன்மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து அரசு செலவினங்களுக்காக முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு தயாரானது. இதற்காக ரூ.9 ஆயிரத்து 500 கோடியில் முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது.
ஆனால் கொரோனா காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பட்ஜெட்டில் சீரமைத்து அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதை ஏற்று ரூ.9 ஆயிரம் கோடிக்கு திருத்தம் செய்து சீரமைத்து பட்ஜெட்டை மத்திய அரசுக்கு புதுவை மாநில அரசு அனுப்பியது.
இதற்கு கடந்த ஜூன் மாத இறுதிக்குள் ஒப்புதல் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதமாகி வந்தது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி பட்ஜெட்டிற்கு அனுமதி அளித்து விட்டதாக டெல்லியில் இருந்து புதுவை அரசுக்கு வாய்மொழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து பட்ஜெட்டுக்கான எழுத்துப்பூர்வ அனுமதி வந்து விடும் என்று கருதி பட்ஜெட் அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மறுநாள் (10-ந் தேதி) அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி எழுத்துப்பூர்வ அனுமதி வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்தநிலையில் அமைச்சரவை கூட்டம் 5 நிமிடத்திலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்தது.
இந்தநிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்ய புதுவை அமைச்சர்கள் மீண்டும் கடந்த 14-ந் தேதி கூடிப்பேசினார்கள். அப்போது ஓரிரு நாட்களுக்குப் பின் முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
எதிர்பார்த்தபடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அனுப்பிய எழுத்துப்பூர்வ கடிதம் புதுவை அரசுக்கு நேற்று கிடைத்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணியில் அரசு வேகம் காட்டி உள்ளது. அதன்படி வருகிற 20-ந் தேதி புதுச்சேரி சட்டசபையை கூட்ட இருப்பதாகவும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறைந்த கால அவகாசத்திலேயே நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பான புகாரில் தேடப்பட்டு வந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்தார்.
புதுச்சேரி:
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், சுரேந்திரன் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்தனர்.
புதுவையில் மேலும் 13 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
புதுவையில் கொரோனா பாதித்த நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.சாரம் சக்திநகர் 3-வது குறுக்குத்தெரு, 2.நைனார்மண்டபம் துலுக்கானத்தமன் நகர் 4-வது குறுக்குத்தெரு, 3.முருங்கப்பாக்கம் ஜெயமூர்த்தி ராஜா நகர் பாரதியார் சாலை 3-வது குறுக்குத்தெரு, 4.வாணரபேட்டை தாவீதுபேட்டை கல்லறை வீதி, 5.முருங்கப்பாக்கம்- கடலூர் சாலை நைனார்மண்டபம் குயவர் வீதி, 6. சுதானா நகர் வசந்தம் வீதி, 7.தேங்காய்திட்டு பள்ளித்தெரு, 8.கொம்பாக்கம் பாலாஜி நகர் விநாயகர் கோவில் தெரு, 9.உருளையன்பேட்டை அய்யனார் நகர் முதல் குறுக்குத்தெரு, 10.உருளையன்பேட்டை இளங்கோ நகர் 3-வது குறுக்குத்தெரு,
11.சாரம் சக்தி நகர் 9-வது குறுக்குத்தெரு, 12.புதுப்பாளையம் நெல்லித்தோப்பு கண்ணார வீதி, 13.உருளையன்பேட்டை முத்தமிழ் நகர் புளியமரத்து வீதி ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் பொது போக்குவரத்து, பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி 22ந்தேதி வரை நகைக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று நகைக்கடைகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்:
காரைக்காலில் 4-ம் கட்ட ஊரடங்கு வரை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மற்றும் பிறபகுதிகளில் இருந்து வந்தவர்களால் அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
காரைக்காலில் நகைக்கடைகள் அதிகம் உள்ள திருநள்ளாறு ரோடு, மாதா கோவில், வயல்கரை ஆகிய வீதிகளை சுற்றி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை ஒருவாரத்துக்கு தற்காலிகமாக மூடுவது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நகைக்கடைகள் சங்க தலைவர் செல்வராஜ் வெளியிட்டார். அதன்படி நகைக்கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரை இந்த கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

வியாபாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெரிய மார்க்கெட் மூடப்பட்டு அனைத்து நுழைவாயில்களும் ‘சீல்’ வைக்கப்பட்டன.
புதுச்சேரி:
புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் குபேர் அங்காடி என்கிற பெரிய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பூ, பழம், காய்கறி, மீன், துணிகள் என அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒரே இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரிய மார்க்கெட்டில் இருந்து புதிய பஸ் நிலையம், தட்டாஞ்சாவடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ஆகிய இடங்களுக்கு காய்கறி கடைகள் மாற்றப்பட்டன. மீன்களை ஏலம் விடுவதும் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
மற்ற கடைகள் தொடர்ந்து பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வருகின்றன. இதையொட்டி அங்கு புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடிக்கடி முகாமிட்டு சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வியாபாரிகள், பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர். இதை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பெரிய மார்க்கெட் கடை வியாபாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து குபேர் அங்காடியை 48 மணி நேரத்திற்கு மூட மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ் கண்ணா, நகராட்சி ஆணையர் சிவகுமார், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அங்கு சென்று குபேர் மார்க்கெட்டை மூடினர். முழுவதுமாக அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 13 நுழைவாயில்களும் ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் கேட்டபோது, ‘குபேர் மார்க்கெட் வியாபாரிகள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கலெக்டர் உத்தரவின்பேரில் குபேர் மார்க்கெட் இன்று (நேற்று) முதல் 48 மணி நேரத்திற்கு மூடப்படும். உரிய பாதுகாப்புக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும்’ என்றார்.

புதுச்சேரியின் முதன்மையான சாலை மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்வி நிறுவனத்துக்கு மன்னர் மன்னன் பெயரை சூட்டவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், தமிழ் அறிஞருமான மறைந்த மன்னர் மன்னன் படத்திறப்பு நிகழ்ச்சி புதுவை காந்தி நகரில் உள்ள அவரது இல்லம் அருகே நடந்தது. சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மன்னர் மன்னன் மகனும், பாரதிதாசன் அறக்கட்டளை தலைவருமான கோ.பாரதி வரவேற்றார். காந்திநகர் மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் திருவேங்கடம், துணைத்தலைவர் ஜெயபால், செயலாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னர் மன்னன் உருவப்படத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, புதுச்சேரியின் முதன்மையான சாலை மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்வி நிறுவனத்துக்கு மன்னர் மன்னன் பெயரை சூட்டவேண்டும், பாரதிதாசன் நினைவிட வளாகத்தில் மன்னர் மன்னன் நினைவிடத்திற்கு மண்டபம் அமைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,743 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 606 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,75,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,52,613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10,928 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,51,820 பேருக்கும், டெல்லியில் 1,16,993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லா அளவுக்கு 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,743ஆக உயர்ந்துள்ளது. 947 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள கோவில்களில் ஆடித் திருவிழாவை ரத்து செய்து இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கோவில்களில் பின்பற்றும்படி புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை சார்பில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பல்வேறு கோவில் நிர்வாகங்கள் ஆடித்திருவிழா, தீமிதி விழா மற்றும் ஒருசில தேர்த்திருவிழா போன்றவைகளை நடத்துவது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் மேலும் சில முக்கிய ஆகம விதிகளை பின்பற்றும் பொருட்டும் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அனைத்து கோவில்களிலும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து திருவிழாக் களும் ரத்து செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
அன்றாட பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்றி தற்பொழுது உள்ள முறையில் நடைபெற வேண்டும். திரு விழாக்களின் முக்கிய தினங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குருக்கள் சிறப்பு பூஜைகள் போன்றவைகளை உரிய சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளலாம். அதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. உபயதாரர்கள் பெயரில் பூஜை செய்தால் 5 நபர்களுக்குள் மட்டுமே அனுமதி. கோவில் நிர்வாகத்தினர் மூலவர் சன்னதிகளை தவிர்த்து மற்ற பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம்.

பாகூரில் முதல்-அமைச்சருக்கு எதிராக தனவேலுவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீரென அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்:
பாகூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தனவேலு. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாகூரில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவ அதிகாரி உமாசங்கர் (பாகூர்), நாராயணன் (கிருமாம்பாக்கம்) ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த முகாமை பார்வையிட முதல்-அமைச்சர் நாராயணசாமி வர உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களில் தனவேலுவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொகுதியின் முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அங்கு கட்டப்பட்டிருந்த கருப்புக்கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் பாகூர் பூலோக மாரியம்மன் கோவில் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி அவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது முதல்-அமைச்சரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து அதை பறித்தனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. சிறிது நேரம் கழித்து அவை திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடியதாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர் அருகே தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்:
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சுமார் 400 பேரும், ஜிப்மரில் 130 பேரும் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு உத்தரவின்பேரில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வில்லியனூர் அருகே ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குடியிருப்பு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொரோனா பாதித்த 7 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அருகில் உள்ள கூடப்பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் திடீரென்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் தாசில்தார் அருண்அய்யா, துணை தாசில்தார் கஜேந்திரன், மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஆறுமுகம் (போக்குவரத்து) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேறு இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுவையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரியில் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் ஆக.1ந்தேதி முதல் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் வர அனுமதி தரக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.