என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்கனூர் பகுதியில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமராபாளையம், வாதானூர்,     கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு  உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் விவசாயிகள் பல ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் கரும்பு, நெல், உளுந்து, மணிலா, மரவள்ளி  உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிர் செய்து வருகிறார்கள்.

    இந்த விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்து   வருகின்றன. 
    விவசாயிகள் பயிரிட்டு  உள்ள விவசாய பயிர்களை கடித்து சேதப்படுத்துகின்றன.இத னால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து குமாரபாளையத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன்  கூறியதாவது:-

    தற்போது கொரோனா வில் இருந்து மீண்டு வந்துள்ள சூழ்நிலையில்  கடன் வாங்கி  பயிர் செய்து வருகிறோம். 

    காட்டுப்பன்றிகளின் தொந்தரவால் எங்களால் நிம்மதியாக விவசாயம் செய்ய   முடியவில்லை.  காட்டுப் பன்றிகளால்    பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

    தற்போது நான் குத்தகைக்கு பயிர் செய்து வருகிறேன். அதில் சவுக்கை யுடன் ஊடு பயிராக மணிலா பயிர் செய்து வருகிறேன். காட்டுப்பன்றிகளால் மணிலா பயிர் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன.

    புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுத்து காட்டு பன்றிகள் கட்டுப்படுத்தவும் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாது காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 74-வது பிறந்த நாள்விழா மற்றும் நலத்திட்ட  உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. இணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். கிழக்கு  மாநில செயலாளர் அன்பழகன்  அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 300-க்கும் மேற்பட்ட  ஏழை-எளியோருக்கு வேட்டி, சேலை, சர்க்கரை வழங்கி பேசியதாவது:-

    லாஸ்பேட்டை  தொகுதி மக்கள் தங்களால் தேர்வு செய்யப்பட்டவரை எண்ணிப்பார்க்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை வழங்கும் அன்பானந்தம் 30 ஆண்டு காலமாக கட்சி மாறாமல் ஒரே கட்சியிலேயே உள்ளார். 

    தற்போது தேர்வு செய்தவர் 5 ஆண்டு ஒரு கட்சி, அடுத்து 5 ஆண்டு ஒரு கட்சி என உள்ளார். அவரையும் நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள்.  அடுத்து எந்த கட்சியில் நிற்பார் என்பதும் தெரியாது. 

    அ.தி.மு.க. இணை செயலாளர் அன்பானந்தத்திற்கு எம்.எல்.ஏ.வாக வர கூடிய அனைத்து தகுதியும் உள்ளது. அவர் எம்.எல்.ஏ.வாக வருவதற்கு நான் துணையாக இருப்பேன். ஆனால் மக்களாகி நீங்கள் தான் அவருக்கு ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில அமைப்பு சார ஓட்டுநர் அணித் தலைவர் ஜெயக்குமார், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சண்முகம்,  மாநில வர்த்தக அணி துணைச் செயலளார் செல்வராஜி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சரவணன், மாநில மகளிர் அணி துணை செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர்கள் அபிஷேக், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பாகூரில் குடிபோதையில் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பாகூர் மேற்கு வீதியில் ஒரு தேசிய வங்கி அருகே 2 பேர் குடிபோதையில் அவ்வழியே சென்ற பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ   இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பாகூர் பங்களா வீதியை சேர்ந்த கார்முகில் மற்றும் பாகூர் வடக்கு வீதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் ஒரு திருமண மண்டபம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ஒருவர் ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரோந்து சென்ற வில்லியனூர் போலீசார் ரகளை செய்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் சுல்தான்பேட்டை களார் தெருவை சேர்ந்த யாசின் (வயது37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூரில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே 2 பேர் செல்போன் மூலம் வாடிக்கையாளர் களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பேப்பரை வீசிவிட்டு தப்பி யோட முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஆரியப்பாளையம் களத்துமேடு அசோக்நகரை சேர்ந்த பழனி(வயது33) மற்றும் வில்லியனூரை சேர்ந்த அந்தோணிசாமி(53) என்பதும், இவர்கள்  செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து 4 செல்போன்கள், லாட்டரி விற்பனை பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    பெண்களுக்கான அரசியல், சமூக, பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், உலக அளவில் பெண்களின் மகத்தான சாதனைகளைப் போற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான அரசியல், சமூக,  பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என கூறியுள்ளார்.

    உக்ரைனில் இருந்து மாகி திரும்பிய மாணவர்களை செல்வகணபதி எம்.பி. சந்தித்து நலம் விசாரித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 27 மாணவர்கள் படிப்புக்காக உக்ரைன் நாட்டுக்கு சென்றனர். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். 

    பெற்றோர்கள், முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி. ஆகியோரை சந்தித்து மாணவர்களை மீட்க வலியுறுத்தினர்.

    மத்திய இணை மந்திரி  முரளிதரனிடம் மாணவர்களை மீட்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் 15 மாணவர்கள் மீட்கப்பட்டு புதுவை திரும்பி உள்ளனர். அதில் 3 பேர் மாகி பகுதியை சேர்ந்தவர்கள்.

    செல்வகணபதி எம்பி. மாகி சென்று உக்ரைனில் இருந்து திரும்பிய 2 மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி நலன் விசாரித்தார்.
    மக்களை பாடாய்ப்படுத்தி வந்த கொரோனா தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி கொரோனா இல்லாத மாநிலமானது.
    புதுச்சேரி:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்தியாவிலும் புகுந்ததால் அந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இந்த தொற்று புதுவையிலும் கண்டறியப்பட்டது. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என புதுவை மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

    மக்களை பாடாய்ப்படுத்தி வந்த கொரோனா தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்து வந்தது. நேற்று ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தநிலையை புதுச்சேரி எட்டியுள்ளது.

    அதாவது நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர்கூட தொற்றினால் பாதிக்கப்படவில்லை.

    இருந்தபோதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 25 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 11 பேர் குணமடைந்தனர். புதுவையில் குணமடைவது 98.80 சதவீதமாக உள்ளது.

    நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 21 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 94 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 6 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 96 ஆயிரத்து 951 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    புதுவை சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியின் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்போடு மற்ற துறைகளை சார்ந்த ஊழியர்கள், தன்னார்வல தொண்டர்கள் அனைவரும், சுகாதாரத்துறையினருடன் இணைந்து இரவு பகல் பார்க்காமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டும் தடுப்பூசி செலுத்துவதில் ஊக்கப்படுத்தியதால் மக்களின் ஒத்துழைப்போடு இப்போது கொரோனா தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலை தொடர புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா தடுப்பு முறைகளான முககவசம் அணிதல், கை சுத்தம் பேணுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், முதல், 2-ம், 3-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்ற அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. வினர் தயாராக வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாஜகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

    கூட்டத்துக்கு ஒரு ங்கிணைப்பாளர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    புதுவையில் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி தனி நபரால் ஏற்பட்டதல்ல. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றியதாலும், மேலிட வழிகாட்டுதலாலும் கிடைத்தது. இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை.

    இப்போது 12 எம்.எல்.ஏ.க்களைத்தான் பெற்றுள்ளோம். இன்னும் பல தொகுதிகளில் நாம் காலூன்றி வெற்றி பெற வேண்டும். கட்சி வளர்ச்சியடைந்தால் அனைவருக்கும் பொறுப்பு கிடைக்கும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். எனவே நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். 

    உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை எதிர்கொள்ள பா.ஜ.க.வினர் தயாராக இருக்க வேண்டும். 2024-ல் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் புதுவையில் நாம் வெற்றி பெற வேண்டும். கட்சியை கீழ்மட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. கட்சி நாம் அனைவருக்கும் பொதுவானது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வி.பி.ராமலிங்கம் வெங்கடேசன்,  அசோக்பாபு, பொதுச்செயலாளர் மோகன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
    புதுவையில் முதன்முதலாக பீச் கபடி போட்டி நடந்தது.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் குயின் பேரடைஸ் பீச்சில் நடந்த பீச் கபடி போட்டியை புதுச்சேரி கபடி சங்க தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் டி.எம் வருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

    இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே தனித்தனியே போட்டிகள் நடைபெற்று. வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. 

    புதுவையில் முதல் முறையாக நடந்த இந்த பீச் கபடி போட்டி அடுத்து வரும் காலங்களில் மாநில அளவில் நடத்த சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில், சாண்ட் டியூன் ஓட்டல் உரிமையாளர் ஜெயபிரகாஷ், புதுச்சேரி கபடி சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
    புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் குமரன் தலைமையில் நடந்தது.

    பொதுச்செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர் ஆனந்த் மீது பொய் வழக்கு பதிவு செய்த உருளையன் பேட்டை போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். 

    வக்கீல்கள் நலனுக்கு எதிராக செயல்படும் மாவட்ட உரிமையியல் நீதிபதியை மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட் புறக் கணிப்பு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 

    இதன்படி   வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டன. வக்கீல்கள் மீது கொடுக்கப் படும் புகார்களை சங்க நிர்வாகிகளிடம் ஆலோசிக் காமல் வழக்குப் பதியக் கூடாது என வலியுறுத்தி காவல்துறை உயரதி காரிகளை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
    மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை சரமாரியாக வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை திலாசுப்பேட்டை வீமன் நகர் சிமெண்டு ரோட்டை சேர்ந்தவர் மோகன்  என்ற சத்தியசீலன் (வயது 29) பெயிண்டர். 

    இவர் அங்குள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது  அருகில் அதே பகுதியை சேர்ந்த நடேசன், திருமலை ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். 

    மதுபோதையில் நடேசன், திருமலை ஆகியோர் மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.  அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனையடுத்து திலாசுப்பேட்டை பிள்ளையார்கோவில் அருகே மோகன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நடேசனின் நண்பர்கள், அப்பு, துரைராஜ் ஆகியோர் அவரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி, கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக நெற்றி, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டினர். 

    மேலும் அவரை வாய்க்காலில் தள்ளி, செங்கல் மற்றும் சிமெண்ட் கற்களால் அடித்துள்ளனர். அவர்களிடமிருந்து மோகன் தப்பித்து வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். ஆனால் வீட்டின் அருகே அவரை சுற்றி வளைத்த அப்பு, துரைராஜ், நடேசன், கார்த்தி ஆகியோர் அவரை மீண்டும் தாக்கியுள்ளனர். 

    மோகனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தங்கை அனிதா வெளியில் வந்துள்ளார். அப்போது துரைராஜ் அனிதாவின் கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளியுள்ளார். அக்கம் பக்கத்தினர்  திரண்டு வரவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மோகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
    இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை வெட்டிய கும்பலை   தேடி வருகின்றனர்.
    திருபுவனையில் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் சேகர். இவரதுமகன் சுஜித்(வயது26) இவரும் அதே பகுதியை சேர்ந்த அருண்கவி(26) என்பவரும்  மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தாக கூறப்படுகிறது.

    அவர்கள் திருபுவனை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கிருந்து நர்சிடம் சிகிச்சை அளிக்க கூறினர். அதன்படி அவர்களுக்கு நர்சு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனால் தங்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவர்கள் நர்சிடம் தகராறு செய்தனர்.

    மேலும்  அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி நர்சை தாக்க முயன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் பயந்து போன நர்சு தலைமை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார்.

    மேலும் நடந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்&இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார் ஆகியோர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இன்று காலை ரகளையில் ஈடுபட்ட சுஜித் மற்றும் அருண்கவி ஆகிய இருவரும் கைது செய்தனர்.
    ×