என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பணிக்கான வயது உச்சவரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கடந்த 8 ஆண்டுகளாக அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு  நடைபெறவில்லை. இதன் மூலம் புதுவை இளைஞர்களின் வேலை வாய்ப்பை அரசே பறித்து வருகின்றது. இதன் காரணமாக புதுவை இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    இதை கண்டித்து தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.  

    சட்டசபை தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் புதுவை அரசுத்துறையில் உள்ள 9 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களும் ஒரு ஆண்டிற்குள் எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கும் இடங்கொடுக்காமல் நிரப்பப்படும். வயது முதிர்ந்து அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியை இழந்த  இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து உதவும் விதமாக வயது உச்சவரம்பு 40 வயதாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை அரசுப்பணிகளில் எந்த வேலைவாய்ப்புக்கும் விண்ணப்பங்கள் கோரப் படவில்லை. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் உடனடியாக தேர்தலில் அறிவித்தபடி 9 ஆயயிரத்து 400 காலிப்பணியிடங்களையும் நிரப்ப முன்வர வேண்டும்.  அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு 40 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுவை மூலகுளம் அரசு தொடக்க பள்ளி அருகே 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மூலகுளம் பகுதியில் சாலையோர வாய்க்கால்கள் கடந்த சில வருடங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்கால்  அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டது. 

    இதனையடுத்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என உழவர்கரை நகராட்சியிடம் மனு அளித்தனர். ஆனால், நகராட்சி  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    இதனிடையே,   வாய்க்கால் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.  மேலும் சில   வீடுக ளுக்குள் கழிவுநீர் புகுந்து வருகிறது. 

    கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாகி அங்கு வசிக்கும் 
    3-க்கும் மேற்பட்ட கை  குழந்தைகளுக்கு தோல் வியாதி, காய்ச்சல் போன்ற  உடல்நலக் குறைவுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விரக்தியடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு முன்பு தேங்கிய கழிவு நீரை கால்வாயில் இறங்கி  சுத்தம் செய்கின்றனர். 

    இதனால் உடனடியாக வாய்க்காலை தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார்.
    புதுச்சேரி:

    வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலம்பாட்டக் குழு, மற்றும் புதுவை  சிலம்பம் கலை கழகம் இணைந்து நடத்திய சிலம்ப போட்டி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடைபெற்றது.

    அதில் 500-க்கும் மேற் பட்ட தமிழகம், புதுவையை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடற்கரை காந்தி திடலில்  பரிசளிப்பு விழா  நடந்தது.   சபாநாயகர் ஏம்பலம் செல்வம்  வீரர்-வீராங்கனை களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.

    பின்பு  விளையாட்டு வீரர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாவை பறக்க விட்டு சிறப்பித்தார்.  
    வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலம்பாட்டக் குழுவின் நிறுவனர் ராஜ்குமார்  ஒருங்கிணைத்து தலைமை தாங்கினார். தமிழர்களம் அழகர் நிகழ்ச்சியை நெறிபடுத்தி வழி நடத்தினார்.
    ஏம்பலத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அருகே தமிழக பகுதியான தென்னம் பாக்கத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது33). கட்டிட தொழிலாளி.  இவர் அரும்பார்த்தபுரத்தில் கட்டிட வேலை முடிந்து தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். 

    வரும் வழியில் ஏம்பலத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிகளுக்கு பெட்ரோல் நிரப்ப வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த கொத்துக்கா என்ற எழுமலை மற்றும் நல்லாத்தூரை சேர்ந்த வசந்தராஜா உள்பட 3 பேர் ரஜினியின் மோட்டார் சைக்கிள் மீது இடித்தனர்.

    இதனை ரஜினி தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஜினி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வெட்டி சேதப்படுத்தினர். மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி ரஜினியை தாக்கி கத்தியால் வெட்ட முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட ரஜினி அவர்களிடமிருந்து உயிர் தப்பினார்.

    இதுகுறித்து ரஜினி கரிக் கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொத்துக்கா உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.
    மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    புதுச்சேரி:

    மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை புதுவை இளைஞர் விடுதியில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர். அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை மற்றும் பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பேசி பயிற்சியை தொடங்கி வைத்தார். 

    இந்தியாவில் சமயங்கள் சித்தாந்தங்கள் தலித்தியம், மனித உரிமைகள், மார்க்சியம், தமிழ் தேசியம், திராவிடம் குறித்த தலைப்புகளில் பேராசிரியர்  ஜெரோம் சாம்ராஜ், வக்கீல் பாரதி அண்ணா, ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவாக மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் எதிர்கால திட்டம் செயல்பாடுகள் செய்யவேண்டிய பணிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்,  இன்றைய சூழ்நிலையில் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இளைஞரணி அமைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.
    புதுவையில் பல்வேறு இடங்களில் ரகளை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் ஒதியம்பட்டு-திருக்காஞ்சி ரோடு சந்திப்பில் ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லியனூர் தட்டாஞ் சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி(வயது28) என்பது தெரியவந்தது.இதைதத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பொது இடத்தில் ரகளை செய்த முத்துலிங்கம்பேட் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த ராஜசேகர்(38) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    தட்டாஞ்சாவடி ஓழுங்கு முறை விற்பனை கூடம் அருகே பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்த சாரம் பகுதியை சேர்ந்த குமார்(40) மற்றும் சக்தி நகர் சேர்ந்த பச்சையப்பன் ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு பகுதியில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய மயிலம் அன்னைநகரை சேர்ந்த ராஜவேலு (38) தென் கோடி பாக்கத்தை சேர்ந்த பாஸ்கர்(35) மற்றும் திண்டிவனம் முருங்கப் பாக்கத்தை சேர்ந்த மூர்த்தி (38) ஆகிய 3 பேரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் மேட்டுப்பாளையத்தில் ஒரு மதுக்கடை அருகே குடித்துவிட்டு ரகளை செய்த ஒதியம்பட்டு கோபி(30), குருமாம்பேட் விக்னேஷ் (30) ஆகிய 2 பேரை மேட்டுபாளையம் போலீசாரும், பூமியான்பேட்டை விக்டோரியாநகர் பூங்காவில் பெண்களை கிண்டல் செய்த  பூமியான்பேட் பாவாணர்நகரை சேர்ந்த விமல்(39), முருகன்(42), ரமேஷ் (40) ஆகிய 3 பேரையும் ரெட்டியார்பாளையம் போலீசாரும், மடுகரையில் குடித்துவிட்டு பொதுமக்களிடம் ரகளை செய்த அர்ப்பிசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தனுசு(40) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும், கரிக்கலாம் பாக்கம் சந்திப்பில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரகுமார், உருவையாறு சந்திப்பில் ரகளை செய்த நந்தம்மேடு பகுதியை சேர்ந்த கண்ணதாசன்(31) ஆகிய 2 பேரை மங்கலம் போலீசாரும் கைது செய்தனர்.
    கதிர்காமம் தொகுதியில் ரூ. 63 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை  கதிர்காமம் தொகுதி மாரியம்மன் நகர் மற்றும் அதனை சார்ந்த விடுபட்ட பகுதிகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய் பதித்தல் மற்றும் சாலைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் ரூ.63 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

    இதற்கான பூமிபூஜை  நடைபெற்றது. முதல்& அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன்,  கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம்  பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் உமாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    புதுவையில் பெட்ரோல் பங்க் அதிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் அன்பு செழியன் (வயது49) இவர் புதுவை மறைமலையடிகள் சாலையில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நள்ளிரவு அன்புசெழியன் பெட்ரோல் பங்கை பார்வையிட வந்தார். 

    அப்போது அங்கு பஸ்சுக்கு டீசல் நிரப்ப வந்த டிரைவரிட ம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அன்புச்செழியன் தட்டிக்கேட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அன்புச்செழியனை தகாதவார்த்தைகளால் திட்டி சராமாரியாக தாக்கினார்கள். இதனை தடுக்க வந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜசேகரையும் அவர்கள் தாக்கினர். 

    அதோடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் அன்புச்செழியனை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த தாக்கு தலில் காயமடைந்த அன்புச் செழியன் மற்றும் ராஜசேகர் இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

     பின்னர் இது குறித்து அன்புச்செழியன் உருளையன் பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் பெட்ரோல் பங்க் அதிபர் அன்புச்செழியன் மற்றும் ஊழியர் ராஜசேகரை தாக்கி யவர்கள் நாவற்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (28) மற்றும் முத்தியால் பேட்டையை சேர்ந்த செந்தில் நாயகம் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுவையில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

     புதுவை மாநிலத்தில் 454 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

     இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 2 பேருக்கும், காரைக்காலில் ஒருவரு க்கும்தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளில் 2பேர் அரசு மார்பக நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர்களில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை.

    தற்போது மருத்துவ மனைகளில் 3 பேரும், வீட்டு தனிமையில் 36 பேரும் என ஒட்டு மொத்தமாக 39 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

    புதுவையில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 744 பேர் குணமடைந் துள்ளனர், ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இத்தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
    வயது வரம்பை தளர்த்தி அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவையின் 108-வது சிந்தனை அரங்கம்& கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்  புதுவை ஜோதி கண் மருத்துவமனையில் நடைபெற்றது. பேரவை இணை செயலாளர் நாகராஜ் வரவேற்றார். பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவுசல்யா தேவி, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், ஜோதி கண்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன், பேரவை நிர்வாகிகள் வீரசேகரன், தேவிதிருவளவன், ராஜா ராம், இளமுருகன், சசிகுமார், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும், புதுவை அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். புதுவையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உள்பட அரசு பணியிடங்களை வயது வரம்மை தளர்த்தி நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    பழைய பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் தற்போது காந்தி சிலை அமைந்துள்ள இடத்தில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் துறைமுகம் செயல்பட்டது.

    இதற்காக பாலம் கட்டப்பட்டிருந்தது. அது சேதமடைந்து விழுந்ததால் சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் புதிய துறைமுகம் கட்டப்பட்டது. இதற்காக கப்பலில் சரக்குககளை ஏற்றவும், இறக்கவும் கடலுக்குள் கட்டப்பட்ட பாலம் 1962-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

    இதனை அப்போதைய மத்திய கப்பல் போக்கு வரத்து துறை மந்திரி ராஜ்பகதூர் திறந்து வைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு கட்டப்பட்ட புதுவை பழைய துறைமுக பாலம் சிதிலமடைந்தால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை துறைமுக துறை கைவிட்டது.

    இதனால், இந்த பழைய துறைமுக பாலத்தில் வி.ஐ.பி.க்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி செய்து வந்தனர். சுற்றுலா பயணிகள் பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை கண்டுகளித்து வந்தனர்.

    மேலும், இந்த பாலத்தில் பல சினிமா படப்பிடிப்புகளும் நடந்தது. பாரம்பரியமிக்க பழைய துறைமுகம் பாலத்தின் அடிப்பகுதி ஆக்ரோச கடல் அலைகளாலும், உப்பு காற்றாலும் கடுமையாக சேதமடைந்து காண்கீரீட்டின் இரும்பு கம்புகள் வெளியே தெரியும் வகையில் எலும்பு கூடாக காட்சி அளித்தது.

    பழைய பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இருப்பினும், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் மட்டும் இரவு நேரங்களில் நடைபயிற்சி சென்றனர். அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் பாலத்தில் மேல் இருந்து வலையை வீசி மீன்பிடித்தும் வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 60 ஆண்டுகள் பழமையான கடல் பாலம் இடிந்தது. பாலத்தின் ஆரம்பம் மற்றும் இறுதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தூண்கள் வலுவாக இருந்ததால் நடுபகுதி இடிந்து சரிந்து கடலுக்குள் இறங்கிவிட்டது.

    வழக்கமாக நள்ளிரவில் மீனவர்கள் பாலத்தில் இருந்து வலைவீசி மீன் பிடிப்பர். அதுபோல் நேற்று நள்ளிரவில் சில மீனவர்கள் பாலத்தில் இருந்து வலையை வீசிவிட்டு காத்திருந்தனர். அப்போது பாலம் இடிந்து சரிந்தது.

    ஆனால், மீனவர்கள் பாதுகாப்புடன் உயிர் தப்பினார்கள். இதனால் உயிர் சேதம் ஏதுமில்லை.

    தகவல் அறிந்த பொதுமக்களும், வழக்கமாக காலையில் கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர், சுற்றுலா பயணிகள் அங்கு அதிகாலை முதலே கூடி வருகின்றனர். இடிந்த பாலத்தை சோகத்துடன் பார்த்து செல்கின்றனர். பலர் செல்போன் மூலம் படமும், செல்பியும் எடுத்தனர்.

    ஹாலிவுட் திரைடங்கள் உட்பட இந்திய மொழிகள் பலவற்றின் படப்பிடிப்பு இந்த பாலத்தில் நடந்துள்ளது. ஹாலிவுட்டின் லைப்ஆப்பை, விஷாலின் அயோக்கியா, சூர்யாவின் மவுனம் பேசியதே, காக்க காக்க, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி உள்ளிட்ட படங்கள் இந்த பாலத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மயிலம் கல்வி குழுமத்தில் திறன் மேம்பாட்டு கழக பயிற்சி நிறுவன தொடக்க விழா நடைபெற்றது
    புதுச்சேரி:

    மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையுடன் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து மயிலம் திறன் மேம்பாட்டுக்கழக பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சி அக்குழுமத்தின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

    விழாவில் மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மயிலம் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவேங்கடம் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். 

    முன்னதாக கல்லூரியின் முதல்வர் செந்தில் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் டீன் ராஜப்பன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
    ×