என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கரையாம்புத்தூரில் தண்ணீர் திருவிழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    சின்ன கரையாம்புத்தூர் கிராமத்தில் தண்ணீர் திருவிழா நடை பெற்றது. விழாவில், ஊர் தலைவர் கோகுலா தலைமை தாங்கினார். உதவும் கரங்கள் நற்பணி மன்றம் தலைவர் தலைவர் பழனிவேல், அரசு ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், குளங்களை காப்போம் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நாச்சியர் அம்மன் கோவிலில் இருந்து கலச நீரை ஊர்வலமாக கொண்டு சென்றனர். 

    பின்னர் விலாமரம் குளத்தில் அதனை கலந்து குளத்து நீரை மீண்டும் கலசத்தில் விட்டனர். இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி, சாமுண்டீஸ்வரி, அரசு ஊழியர் சம்மேளன செயலளர் தாட்சாயணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    சேதராப்பட்டில் கையகப்படுத்திய நிலத்தில் சிறு, குறு தொழில் தொடங்க முன்னுரிமை கொடுப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
    புதுச்சேரி:

    இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) புதுவை கவுன்சிலின் ஆண்டுக் கூட்டம் மற்றும் புதிய உலகிற்கு ஏற்ப புதுவையைக் கட்டமைத்தல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

    சுற்றுலாத் துறையில் எதிர் பார்ப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்க முதல் அமர்வில் சி.ஐ.ஐ. புதுவை கவுன்சில் முன்னாள் தலைவர் அமர்நாத் வரவேற்றார்

    கருத்தரங்கில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து,  சேதராப்பட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 750 ஏக்கர் நிலத்தை பிப்டிக் வழியாக பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளோம்.   அந்த அனுமதி கிடைத்தவுடன் பார்மா கம்பெனிகள், ஐ.டி. நிறுவனங்கள், சிறு,குறு தொழில்கள் முதலானவைகளுக்கு இடங்கள் கொடுக்க விரும்புகிறோம்.  

    சி.ஐ.ஐ.யுடன் சேர்ந்து புதுவைக்கான புதிய தொழிற் கொள்கையை உருவாக்கவும் விரும்புகிறோம்.  அரசு புதுவையில் தொழில்கள் சிறக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தரும். 
      
    ஒற்றைச்சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும் அனுமதிகளை  எளிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கக் இருக்கிறோம்.  

    திறன் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எங்கள் அரசு ஆதரிக்கும். 2017-ம் ஆண்டு முதல் புதுவை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகை தொகை ரூ.25 கோடியில் தற்போது ரூ.10 கோடி நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். 

    நிதித்துறை ஒப்புதல் கிடைத்தவுடன்  அந்த பணம் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்து விடும். மிதி தொகையை வரும் பட்ஜெட்டில் அறிவித்து வழங்க உள்ளோம்.  சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.  

    அதே போல அனைத்து தொழிற்பேட்டைகளிலும் வசதிகளை மேம்படுத்துவோம். 
     
    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.
    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகம் புரோக்கர் மயமாக காட்சியளிக்கிறது. ஊழல் பெருகி வருகிறது என்று நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அரசின் 300 நாள் சாதனைகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்போது புதுச்சேரியில் பாலாறும், தேனாறும் ஓடுவதாகவும் கூறியுள்ளார்.

    கடந்த காலத்தில் கவர்னருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் அவர்தான். முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதை தடுக்கிறார். புதுவை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். காவலர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்தும் கோப்பினை தேவையின்றி டெல்லிக்கு அனுப்பியுள்ளார் என்று கவர்னர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்.

    எங்கள் ஆட்சிக்காலத்திலும் சென்டாக் மூலம் மாணவர்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்பட்டது. காமராஜர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இவர்கள் திறப்பு விழாதான் செய்துள்ளார்கள். அரும்பார்த்தபுரம் மேம்பாலம் திறப்புவிழாவின்போது மத்திய மந்திரி நிதின் கட்காரி எனது கோரிக்கையை ஏற்று இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிலை பகுதியில் மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டார்.

    விழுப்புரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த திட்டத்தில்தான் ஆரியபாளையத்தில் ரூ.60 கோடியில் மேம்பாலம், சாலை அமைக்கும் பணியும் வருகிறது.

    இந்த ஆட்சியாளர்களின் சாதனை முதியோர், மீனவர் உதவித் தொகைகளை உயர்த்தி கொடுத்தது ஒன்றுதான். மற்றவை எல்லாம் எங்கள் ஆட்சியில் வந்தவை. மத்திய அரசிடம் கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டார்கள். அந்த நிதி வந்ததா? மழை நிவாரணம் ரூ.300 கோடி கேட்ட நிலையில் மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மத்திய மந்திரிகள் புதுவை வந்து பேட்டி கொடுக்கின்றனர். ஆனால் என்ன நடந்தது? பிரதமர் அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி என்னவானது? நான் மாநில அந்தஸ்து, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது தொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி உள்ளிட்டவர்களை பலமுறை சந்தித்தேன். புதுவை முதல்-அமைச்சர் யாரை சந்தித்தார்? கடன் தள்ளுபடி என்னவானது?

    புதுவையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது. குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகம் புரோக்கர் மயமாக காட்சியளிக்கிறது. ஊழல் பெருகி வருகிறது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அமைச்சர் லட்சுமிநாராயணனின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேடைபோட்டு விவாதிக்க தயார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், பொதுச்செயலாளர்கள் சாமிநாதன், தனுசு ஆகியோர் உடனிருந்தனர்.
    சுப்ரீம் கோர்ட்டு தலையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 2011-க்கு பிறகு 10 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை புதுவையில் நடத்த கோரி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் 4-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியது.

    இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு கடந்த செப்டம்பரில் தேர்தல் தேதியை அறிவித்தது.

    பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடில் குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    குளறுபடிகளை சரிசெய்து தேர்தல் அறிவிப்பை வெளியிடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை அரசு ரத்து செய்தது. இதன்பின் மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.

    புதுவை அரசு சார்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.

    ஐகோர்ட்டில் இருந்த வழக்குகளை மனுதாரர்கள் வாபஸ்பெற்றனர்.

    இதனால் ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடை ரத்தானது. புதுவை மாநில தேர்தல் கமி‌ஷன் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டது. நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தது.

    இதனிடையே இந்திய தேர்தல் கமி‌ஷன் புதுவை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் மாநில தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அரசு தரப்பு, தேர்தல் கமி‌ஷன், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வாரத்துக்குள் பதிலளிக்கும் படி புதுவை அரசு, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்த வேண்டாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு தலையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதம் நடக்க உள்ளது. வழக்கமாக தேர்தல்கள் மே மாதம் தான் நடைபெறும். இப்போது பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்பில்லை.

    பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைப்பது, தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது ஆகியவற்றிலும் சிக்கல் ஏற்படும். எனவே உள்ளாட்சி தேர்தல் மேலும் சில மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
    2 நாள் மெகா வேலைவாய்ப்பு முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-புதுவை அரசு இணைந்து 2 நாள் வேலைவாய்ப்பு முகாமை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்துகிறது.

    நிபுணா மற்றும் சேவா இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலை வாய்ப்பு முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்ட்ஸ், தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன், பதிவாளர் சிவராஜ் உட்பட பலர் முகாம் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.  

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் 10-க்கும் ஆயித்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. புதுவை கவர்னர் தமிழிசையின் முயற்சியால் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது
    உக்ரைனில் தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்ப வேண்டும் என்று ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் நாட்டுக்கு படிக்க சென்ற பல ஆயிரம் மாணவர்களில் சிலர் இந்தியா திரும்பியுள்ளனர். விமானங்களுக்காக போலந்து,   ருமேனியா,  ஹங்கேரி, மால்டா நாடுகளில் காத்திருக்கின்றனர். உக்ரைன் அதிகாரிகள் வெளியேறும் இந்தியர்களுக்கு உதவ மறுக்கின்றனர். 

    ரெயிலில்  ஏறவும் அனுமதிப்பதில்லை. கடும் குளிரில் உணவு, தண்ணீர் இன்றி உயிரை  கையில் பிடித்து தவித்து வருகின்றனர். மத்திய அரசு  காலத்தோடு செயல்பட்டிருந்தால் இந்திய மக்களை காப்பாற்றி அழைத்து வந்திருக்கலாம். 

    எனவே, தமிழகத்தை பின்பற்றி அமைச்சர், எம்.பி., ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் குழுவை அனுப்பி புதுவை மாணவர்களை மீட்டுவர அரசு முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

    கோப்பு படம் உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்க 
    அமைச்சர் தலைமையில் குழு- ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தல்


    உக்ரைனில் தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க 
    அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்ப வேண்டும் என்று ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:
    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் நாட்டுக்கு படிக்க சென்ற பல ஆயிரம் மாணவர்களில் சிலர் இந்தியா திரும்பியுள்ளனர். விமானங்களுக்காக போலந்து,   ருமேனியா,  ஹங்கேரி, மால்டா நாடுகளில் காத்திருக்கின்றனர். உக்ரைன் அதிகாரிகள் வெளியேறும் இந்தியர்களுக்கு உதவ மறுக்கின்றனர். 

    ரெயிலில்  ஏறவும் அனுமதிப்பதில்லை. கடும் குளிரில் உணவு, தண்ணீர் இன்றி உயிரை  கையில் பிடித்து தவித்து வருகின்றனர். மத்திய அரசு  காலத்தோடு செயல்பட்டிருந்தால் இந்திய மக்களை காப்பாற்றி அழைத்து வந்திருக்கலாம். 

    எனவே, தமிழகத்தை பின்பற்றி அமைச்சர், எம்.பி., ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் குழுவை அனுப்பி புதுவை மாணவர்களை மீட்டுவர அரசு முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்/
    பலத்த காற்றில் சிக்கி ரூ.1 கோடி மதிப்பிலான படகு வீடு கவிழ்ந்து சேதமடைந்துள்ளது
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாதுறை கீழ் இயங்கும் அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம் செயல்பட்டு வருகிறது. 

    இந்த குழாமில் பல ரக படகுகள் இருந்துவரும் நிலையில் பயணிகளை கவரும் வகையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மந்த்ரா என்னும் படகு வீடு வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது.இதனால் புதுவை  அரசு சுற்றுலா குழுமத்திற்கு அதிக வருவாய் வந்து கொண்டு இருந்தது. 

    இந்த படகு வீட்டினை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுண்ணாம்பு ஆற்றுக்கு நடுவில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் புதுவை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
    ஆனால், மழை பெய்ய வில்லை. காற்று பலமாக வீசி வருகிறது. நேற்று வீசிய காற்றினால் சுற்றுலா துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்  சுண்ணாம் பாற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகுவீடு கவிழ்ந்தது. இதனால் சுமார்  ரூ.1 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் படகு வீட் டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
    மணல் கடத்தியவரை மாறு வேடத்தில் சென்று பாகூர் போலீசார் பிடித்தனர்
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியில் ஆற்று மணலை பதுக்கி வைப்பதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் ஏட்டு அன்பழகன் மற்றம் போலீசார் குருவிநத்தம் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வாழப்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் மணல் மூட்டைகளை பதுக்கி வைத்ததை போலீசார் கண்டனர்.  போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்ப முயன்றனர். 

    சந்தேகமடைந்த போலீ சார் ஒருவரை மடக்கி பிடித்தனர்.  விசாரணையில் அவர் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது. இவர் ஆற்று மணலை சாக்கு மூட்டையில் கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    கைது செய்யப்பட்ட  புருஷோத்தமன்  சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புருஷோத்தமனின் மருமகன் நடராஜ்  மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது. 

    தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வர் களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் 512 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவை, காரைக் கால், மாகியில் தலா ஒருவர் என 3 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    புதுவையில் 2, காரைக் காலில் ஒருவர் என 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 5, காரைக்காலில் 6 பேர் என 11 பேர் சிகிச்சையில்  குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில்  ஒட்டுமொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 742 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 736 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 25, காரைக் காலில் 13, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 41 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 44 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில்  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 95 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் சாரம் அவ்வை திடல் அருகே உள்ள எல்.ஐ.சி. கிளை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் சாரம் அவ்வை திடல் அருகே உள்ள எல்.ஐ.சி. கிளை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு துணைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயஸ்ரீ வரவேற்றார். துணை பொருளாளர் ஜானகிராமன் அறிமுக உரையாற்றினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி லிங்கம் எம்.பி., எதிர்க் கட்சித்தலைவர் சிவா, மார்க்சிஸ்டு செயலா ளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், கோட்ட பொருளாளர் தாண்டவகிருஷ்ணன், கோட்ட தலைவர் அன்பரசி ஜூலியட், மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    இணை செயலாளர் வைத்திலிங்கம் நன்றி கூறினார். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கண்டித்து இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
    முதலியார்பேட்டை தொகுதி பயனாளிகளுக்கு மானிய விலையில் கோழிக் குஞ்சுகளை சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் கால்நடை துறை சார்பில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தினர் பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ள கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. கோழிக்குஞ்சுகள் மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. 

    ஒரு கோழிக்கு ரூ.56 பயனாளிகளிடம் வசூலிக்கப் பட்டு ரூ.56   அரசு மானியம் வழங்குகின்றது. இத்திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 450 கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி முதலியார்பேட்டை எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை  சம்பத் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை இயக்குனர் செல்வராஜ், இணை இயக்குனர் டாக்டர் குமரன், கால்நடை மருத்துவர் டாக்டர் கதிரேசன் ஆகியோர் செய்திருந்தனர். 

    விழாவில் ஊர் பொது மக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். பயனாளிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய மானியத் தொகையை சம்பத் எம்.எல்.ஏ. தனது பிறந்தநாளையொட்டி சொந்த செலவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நிதி நெருக்கடியை தவிர்க்க அரசே மதுவை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வரும் நிதியாண்டுக்கு ரூ.ஆயிரத்து 729 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மாநில அரசு  கோரியுள்ளது. இதை தராவிட்டால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கும். மாநில வருவாயை பெருக்குவது அரசின் கடமை.  

    புதுவையில் மதுபான விற்பனையில்தான் வருவாய் கிடைக்கிறது. கலால்துறை மூலம் ரூ.ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதை  இருமடங்காக உயர்த்த முயற்சிக்க வேண்டும். 

    புதுவையில் 5 மதுபான தொழிற்சாலைகள், 85 மொத்த வியாபார உரிமம், 500-க்கும் மேற்பட்ட  சில்லரை வியாபார உரிமங்கள் அனைத்தும் தனியார் வசம் உள்ளது. மதுபான விற்பனையில் பொதுவான முறையை இவர்கள் பின் பற்றுவதில்லை. போலி மது, வரி கட்டாமல் கணக்கு காட்டாத மது விற்பனையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 

    இதை தடுக்க  புதுவை அரசு சார்பில் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் மதுபானங்களை கொள்முதல் செய்து அரசே சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×