என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்து கிடக்கும் படகு வீடு.
ரூ.1 கோடி மதிப்பிலான படகு வீடு சேதம்
பலத்த காற்றில் சிக்கி ரூ.1 கோடி மதிப்பிலான படகு வீடு கவிழ்ந்து சேதமடைந்துள்ளது
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாதுறை கீழ் இயங்கும் அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம் செயல்பட்டு வருகிறது.
இந்த குழாமில் பல ரக படகுகள் இருந்துவரும் நிலையில் பயணிகளை கவரும் வகையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மந்த்ரா என்னும் படகு வீடு வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது.இதனால் புதுவை அரசு சுற்றுலா குழுமத்திற்கு அதிக வருவாய் வந்து கொண்டு இருந்தது.
இந்த படகு வீட்டினை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுண்ணாம்பு ஆற்றுக்கு நடுவில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் புதுவை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
‘
ஆனால், மழை பெய்ய வில்லை. காற்று பலமாக வீசி வருகிறது. நேற்று வீசிய காற்றினால் சுற்றுலா துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சுண்ணாம் பாற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகுவீடு கவிழ்ந்தது. இதனால் சுமார் ரூ.1 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் படகு வீட் டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
Next Story






