என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு முன்பு தேங்கியுள்ள கழிவுநீர்.
    X
    வீட்டு முன்பு தேங்கியுள்ள கழிவுநீர்.

    வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது

    புதுவை மூலகுளம் அரசு தொடக்க பள்ளி அருகே 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மூலகுளம் பகுதியில் சாலையோர வாய்க்கால்கள் கடந்த சில வருடங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்கால்  அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டது. 

    இதனையடுத்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என உழவர்கரை நகராட்சியிடம் மனு அளித்தனர். ஆனால், நகராட்சி  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    இதனிடையே,   வாய்க்கால் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.  மேலும் சில   வீடுக ளுக்குள் கழிவுநீர் புகுந்து வருகிறது. 

    கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாகி அங்கு வசிக்கும் 
    3-க்கும் மேற்பட்ட கை  குழந்தைகளுக்கு தோல் வியாதி, காய்ச்சல் போன்ற  உடல்நலக் குறைவுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விரக்தியடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு முன்பு தேங்கிய கழிவு நீரை கால்வாயில் இறங்கி  சுத்தம் செய்கின்றனர். 

    இதனால் உடனடியாக வாய்க்காலை தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×