என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசிய காட்சி.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க.வினர் தயாராக வேண்டும்-அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. வினர் தயாராக வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பாஜகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.
கூட்டத்துக்கு ஒரு ங்கிணைப்பாளர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவையில் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி தனி நபரால் ஏற்பட்டதல்ல. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றியதாலும், மேலிட வழிகாட்டுதலாலும் கிடைத்தது. இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை.
இப்போது 12 எம்.எல்.ஏ.க்களைத்தான் பெற்றுள்ளோம். இன்னும் பல தொகுதிகளில் நாம் காலூன்றி வெற்றி பெற வேண்டும். கட்சி வளர்ச்சியடைந்தால் அனைவருக்கும் பொறுப்பு கிடைக்கும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். எனவே நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை எதிர்கொள்ள பா.ஜ.க.வினர் தயாராக இருக்க வேண்டும். 2024-ல் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் புதுவையில் நாம் வெற்றி பெற வேண்டும். கட்சியை கீழ்மட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. கட்சி நாம் அனைவருக்கும் பொதுவானது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வி.பி.ராமலிங்கம் வெங்கடேசன், அசோக்பாபு, பொதுச்செயலாளர் மோகன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






