என் மலர்
புதுச்சேரி
பிளஸ்-1 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே மருதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சங்கர். இவருடைய மகன் காரல் மார்க்ஸ் (வயது 17). இவர் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
ேநற்று மாலை காரல் மார்க்ஸ் வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தனது சகோதரி சவுமியாவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
பின்னர் திடீரென வீட்டில் காரல் மார்க்ஸ் தூக்கு ேபாட்டு தொங்கினார். உடனே அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காரல் மார்க்ஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரல் மார்க்ஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரோவில் நிர்வாகத்துக்கு எதிராக வாசகம் எழுதிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரோவில் பவுண்டேசன் சார்பு செயலர் சீனிவாச மூர்த்தி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேதராப்பட்டு:
புதுவையை ஒட்டிய தமிழக பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு அன்னையின் கனவு திட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள் நடந்தபோது ஆரோவில்லில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆரோவில் சர்வதேச நகரம் மையத்தில் அமைந்துள்ள டவுன்ஹால் முகப்பு கட்டிடத்தின் சுவரில் வாசகம் ஒன்று எழுதப்பட்டு இருந்தது.
நீல நிற பெயிண்டில் ஆரோவில் இப்போது சுதந்திர நாடாக மாற வேண்டும் என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆரோவில் பவுண்டேஷன் சார்பு செயலர் சீனிவாசமூர்த்தி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் விதம், இந்திய அரசாங்கத்தை அவமதிக்கும் விதமாக யாரோ வாசகத்தை எழுதி உள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆரோவில் நிர்வாகத்துக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டுள்ள சம்பவம் ஆரோவில் வாசிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் உதவியோடு அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி
புதுவை சுகாதாரத்துறையின் கீழ் உள்ள சுகாதார நலவழிமையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி கேபினட் அறையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்- அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.17 லட்சம் செலவில் புதுவையில் 21 ஆரம்ப சுகாதார நிலையம், நலவழி மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இணைக்க ப்பட்டுள்ளது.
இதன்மூலம் நோயாளிகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறார்கள்? அவர்களுக்கு என்ன மருத்துவ வசதிகள் தரப்படுகிறது? என அறியலாம்.
காரைக்காலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும். உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் அரசு உருவாக்கி வருகிறது.
சுகாதாரத்துறை மூலம் நாளை முதல் 3 நாட்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் மூலம் சுகாதார திருவிழா நடத்தப்படுகிறது. நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கி நாள்தோறும் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறும். இதில் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
நோயாளிகள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம். சுகாதார திருவிழாவில் கண்காட்சியும் அமைத்துள்ளோம். கண்காட்சியில் பாரம்பரிய உணவு முறைகள், சத்தான உணவு வகை பற்றிய காட்சிகள் இடம்பெறும்.
பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷாவிடம் மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்தியுள்ளோம்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி கிடைக்கும். கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலர் இணைந்து செயல்பட வேண்டும். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது.
தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை, ரூ.500 உதவித்தொகை உயர்வு, இலவச அரிசி, பொங்கல் பொருட்கள், பண்டிகை கால துணிகள் வழங்கியுள்ளோம். இன்னும் 4 ஆண்டு மீதமுள்ளது.
ஒரே ஆண்டில் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப முடியாது. அடுத்தபடியாக எல்.டி.சி.யூ.டி.சி. தேர்வு நடத்த உள்ளோம். சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது.
சுகாதாரத்துறையில் டாக்டர்கள், நர்சுகள் எடுத்துள்ளோம். ஊழியர்கள்மேலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தலைமை செயலரின் புதுவை பணிக்காலம் நிறைவுபெற்றதால் மத்திய உள்துறை மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.
பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி சிறந்த புதுவையாக மாற்ற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.
கோப்பு படம்
லஷ் சோர்ஸ் நிறுவனத்துடன் எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் லஷ் சோர்ஸ் நிறுவனம் மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரை சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு த்திட்ட நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கல்லூரி ஐ.ஓ.டி. துறை தலைவர் பூங்குழலி, வேலை வாய்ப்புதுறை அதிகாரி ஜெயகுமார், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் லஷ் சோர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவிதா செந்தில் நாதன், ரோஷனாரா பானு, திலீப்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீராம்பட்டினத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.10 லட்சம் நகையை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஞானசேகரன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து ஊருக்கு வரும் போது நகையாக கொண்டு வருவார். அந்த நகைகளை லாவண்யா பாதுகாப்புக்காக கூனிமேட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கொடுத்து வைத்திருந்தார்.
இதற்கிடையே நிலம் வாங்கு வதற்காக லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கொடுத்து வைத்திருந்த 27 பவுன் நகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி வந்து தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்தார்.
மேலும் பீரோவில் பூட்டு சரியில்லாததால் புதிதாக பூட்டுபோட்டு நகைகளை பாதுகாப்பாக வைத்தார். ஆனால் சாவியை பீரோவிலேயே தொங்க விட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நிலம் வாங்க நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளை லாவண்யா எடுத்து சரிபார்க்க முயன்றார்.
அப்போது நகை அனைத்தும் காணாமல் போயிருப்பதை கண்டு லாவண்யா அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நோட்ட மிட்டு பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இது குறித்து லாவண்யா அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரசை விட்டு வெளியேறியவர்கள் இன்று நடு தெருவில் நிற்கின்றனர் என நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி:
புதுவை பத்துகண்ணில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னால் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காங்கிரசில் 100 பேர் மட்டுமே இருந்தாலும் நான் சாகும் வரை காங்கிரசில் தான் இருப்பேன். கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அப்போது 4 ஆண்டுகள் 10 மாதம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு பலர் கட்சியை விட்டு வெளியேறினர்.அவர்கள் எல்லாம் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகிய 3 மந்திரங்களை கையில் வைத்து ஆட்டிப் படைத்து வருகிறார்.
முதுகில் அழுக்கு உள்ளவர்கள் தான் மோடிக்கு பயப்படுவார்கள். தற்போது நடக்கும் என்.ஆர்.காங்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதியில் மத்திய மந்திரிகள் அமித்ஷாவும், நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம். மாநில அரசின் கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி வழங்குவோம் என்று அறிவித்தார்கள்.
ஆனால் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு புதுவைக்கு கூடுதல் நிதியை வழங்கவில்லை. தற்போதைய முதல்-அமைச்சர் பொம்மை ஆட்சி செய்து வருகிறார்.
உண்மையிலேயே புதுவையை ஆளுவது கவர்னர் தமிழிசை தான். அமித்ஷா புதுவை வரும்போது எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டது. அதில் இந்திமொழியில் அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
புதுவை மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். புதுவை வந்த அமித்ஷா புதிய திட்டம் ஏதாவது அறிவித்தாரா?. கடந்த ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தூசுதட்டி எடுத்து நிறைவேற்றி வருகிறார்கள். மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என்று சொன்னார். ஆனால் புதுவையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா புழக்கம் தான் அதிகமாக உள்ளது.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
மதகடிப்பட்டு நரிக்குறவர் குடியிருப்பு அருகில் குப்பைகள் கொட்டி எரிப்பதால் மூச்சுத்திணறலால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு சந்தைந்தோப்பு எதிரில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி, பட்டா அளித்து வீடு கட்ட மானியமும் வழங்கியுள்ளது.
அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி செய்யவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் குடியிருப்பு அருகில் ஊரல்குட்டை என்ற குளம் உள்ளது.
இந்த குளத்தை சுற்றிலும் திருபுவனை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.
இதற்கு அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் உட்பட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் அதிகமாகும்போது தீ வைத்து விடுகின்றனர்.
அதேபோல இன்றும் அதிகாலை குப்பையில் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் தனியார் சோப் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் மூச்சுதிணறலால் மயங்கி விழுந்தார். அவருக்கு திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏற்கனவே நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இச்சூழலில் நீர்நிலையில் குப்பையை கொட்டுவதும், அதற்கு தீ வைப்பதும் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வசிப்பிடம் இல்லாத வேறு இடத்தில் குப்பையை கொட்டி அழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொம்பாக்கத்தில் பொதுமக்கள் சேவை மையம் சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி்:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ.வின் 55-வது பிறந்தநாளை புதுவை முழுவதும் தி.மு.க.வினர் கடந்த ஒரு வாரகாலமாக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வில்லியனூர் தொகுதிகுட்பட்ட கொம்பாக்கம் பஜனை மடவீதியில் மக்கள் நல சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
மையத்தை சிவா எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ஏழை பெண்களுக்கு தையல் மிஷினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் சண்.குமாரவேல், அமுதாகுமார், தொகுதி செயலாளர் ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மையத்தில் பொதுமக்களுக்கு தேவையான சாமியான பந்தல், நாற்காலி, டேபிள் வைக்கப்பட்டுள்ளது.
கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் துணை சபாநாயகர் ராஜவேலு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் பள்ளி அறையில் உள்ள மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றை சேதப்படு த்தியுள்ளனர்.
இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் தட்டிக் கேட்பதற்கு அச்சப்படு கின்றனர். பள்ளி வளாக பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால் இன்று துணை சபாநாயகர் ராஜவேலு பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.
மாணவர்கள் சேதப்படுத்திய அறைகளுக்குச் சென்று சோதனை செய்தார். மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதை கண்டறிந்தார்.
பின்னர் பள்ளி முதல்வர் புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
மேற்கொண்டு நெட்டப்பாக்கம் போலீசாரை தொடர்பு கொண்டு பள்ளியில் மாணவர்களை கண்காணிக்கும் படி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் பள்ளியை பார்வையிட வேண்டுமென பொதுமக்கள்கூறினர்.
திருக்கனூர் பகுதியில் புளி அமோக விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
திருக்கனூர் பகுதியில் புளி விற்பனை சூடு பிடித்துள்ளது. விலை குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமையலுக்கு பயன் படக்கூடிய புளியின் விளைச்சல் இவ்வாண்டு அதிக அளவில் உள்ளது.
திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி கிராமத்தில் உள்ள வியாபாரிகள் அதிகளவில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக புளியினை கொள்முதல் செய்து தங்கள் வீட்டு வாசல்களில் கடை போல் அமைத்து சில்லறை விற்பனையில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்கிறார்கள்.
தற்போது புளி விளைச்சல் சீசன் என்பதால் திருக்கனூர் பகுதியில் புளி வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் புளி விற்பனை இங்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
சென்ற ஆண்டு ரூ.70- க்கு விற்கப்பட்ட கொட்டை எடுக்காத புளி தற்போது விலை குறைந்து ரூ.55-க்கு விற்க்கப்படுகிறது.
கையால் ஆயப்பட்ட கொட்டை எடுத்த புளி ரூ. 130-க்கு விற்கப்படுகிறது. கடைகளில் விற்கப்படும் புளி பெரும்பாலும் இயந்திரத்தால் கொட்டை எடுக்கப்பட்டு விற்க்கப்படுகிறது. ஆனால் இங்கு கைகளால் புளி ஆயப்பட்டு கொட்டை எடுக்கப்படுவதால் சுத்தமாக இருக்கிறது என்ற காரணத்திற்காக பொதுமக்கள் ஓ்ரு ஆண்டுக்கு தேவையான புளிகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.
சிலர் வெளியூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு 10 கிலோ, 20 கிலோ என அதிகளவில் புளியை வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள். திருக்கனூர் பகுதி மட்டும் அல்லாமல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் திருக்கனூர், கொ.மணவெளி உள்ளிட்ட பகுதிகளில் புளியை ஆர்வமுடன் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.
இதனால் இங்கு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது.
புதுச்சேரி, ஏப்.27-
மங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் (ஜி.பி.ஆர்.எஸ்) தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். புதுவை மாநில காங்கிரஸ் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் செயலாளர்கள் சிவசண்முகம், ரகுபதி மற்றும் செந்தில்குமரன், ஜி.பி.ஆர்.எஸ் தலைவர் அமுதரசன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவின் 2-வது அலை பரவத்தொடங்கியது.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் குறைந்த பின்னர் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. டிசம்பர் மாதம் 6-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஜனவரி மாதம் 18-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி 1 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு கடந்த வாரம் இறுதியில் தொடங்கியது. இந்த தேர்வுகள் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை கண்காணிப்பு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு வருகை நாட்கள் குறைவு, கட்டணத்தை முழுமையாக செலுத்தவில்லை உள்ளிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்களின் தேர்ச்சியை தடுத்து நிறுத்த கூடாது. எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளையுடன் நிறைவு பெறும். அந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்கும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 30-ந் தேதி வரையும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 28-ந் தேதி வரையும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்