என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவன் காரல் மார்க்ஸ்
    X
    மாணவன் காரல் மார்க்ஸ்

    பிளஸ்-1 மாணவன் தற்கொலை

    பிளஸ்-1 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே மருதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சங்கர். இவருடைய மகன் காரல் மார்க்ஸ் (வயது 17). இவர் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
    ேநற்று மாலை காரல் மார்க்ஸ் வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தனது சகோதரி சவுமியாவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். 

    பின்னர் திடீரென வீட்டில் காரல் மார்க்ஸ் தூக்கு ேபாட்டு தொங்கினார். உடனே அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற னர். அங்கு        பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காரல் மார்க்ஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரல் மார்க்ஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×