என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காங்கிரசை விட்டு வெளியேறியவர்கள் நடு தெருவில் நிற்கின்றனர்- நாராயணசாமி ஆவேசம்

    காங்கிரசை விட்டு வெளியேறியவர்கள் இன்று நடு தெருவில் நிற்கின்றனர் என நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை பத்துகண்ணில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னால் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காங்கிரசில் 100 பேர் மட்டுமே இருந்தாலும் நான் சாகும் வரை காங்கிரசில் தான் இருப்பேன். கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    அப்போது 4 ஆண்டுகள் 10 மாதம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு பலர் கட்சியை விட்டு வெளியேறினர்.அவர்கள் எல்லாம் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    பிரதமர் மோடி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகிய 3 மந்திரங்களை கையில் வைத்து ஆட்டிப் படைத்து வருகிறார். 

    முதுகில் அழுக்கு உள்ளவர்கள் தான் மோடிக்கு பயப்படுவார்கள். தற்போது நடக்கும் என்.ஆர்.காங்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதியில் மத்திய மந்திரிகள் அமித்ஷாவும், நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம். மாநில அரசின் கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி வழங்குவோம் என்று அறிவித்தார்கள். 

    ஆனால் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு புதுவைக்கு கூடுதல் நிதியை வழங்கவில்லை.  தற்போதைய முதல்-அமைச்சர் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். 

    உண்மையிலேயே புதுவையை ஆளுவது கவர்னர் தமிழிசை தான். அமித்ஷா புதுவை வரும்போது எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டது. அதில் இந்திமொழியில் அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

    புதுவை மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். புதுவை வந்த அமித்ஷா புதிய திட்டம் ஏதாவது அறிவித்தாரா?. கடந்த ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தூசுதட்டி எடுத்து நிறைவேற்றி வருகிறார்கள். மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என்று சொன்னார். ஆனால் புதுவையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா புழக்கம் தான் அதிகமாக உள்ளது. 

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
    Next Story
    ×