என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறை கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் புதுவையில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    புதுச்சேரி:

    சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறை கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட கலெக்டர் வல்லவன், அரசு

    செயலர்கள் அருண்,கேசவன், முத்தம்மா, காவல்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், உள்ளாட்சித் துறை இயக்குனர் ரவிதிப் சிங் சஹார், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவையில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    • புதுவையில் நேற்று 730 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    • கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டரில் 2 பேர் என 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில்  730 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் புதுவையில் 10 பேர், காரைக்காலில் 14 பேர் என மொத்தம் 24 பேருக்கு தொற்று இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.. மாகி, ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. தற்போது புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 193 ஆக உள்ளது.

    கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டரில் 2 பேர் என 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் 189 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் 49 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,93,368 பேருக்கும், 2-வது டோஸ் 8,55,785 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,88,122 பேருக்கும் என மொத்தம் 22,37,275 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,069 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    • புதுவை குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் தங்களது 10 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். கருவூலகம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.
    • இந்த நிலையில், 21-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    புதுச்சேரி:

    புதுவை குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் தங்களது 10 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். கருவூலகம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.

    குடிசை மாற்று வாரியத்தை பொதுப்பணித்துறையின் அங்கமாக இணைக்க வேண்டும். 7-வது சம்பளக்குழு பரிந்துரை களை அமல்படுத்த வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் முரசுகொட்டி போராட்டம், கஞ்சி காய்ச்சி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், 21-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    அவர்கள் சோளக்காட்டு பொம்மையை உருவாக்கி, அதனை அதிகாரி போல் நாற்காலியில் அமர செய்து, வாரியத்திற்கு நிரந்தர அதிகாரியை நியமிக்க கோரி பொம்மையிடம் மனு அளித்தனர்.போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார்.

    செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன செயலவை உறுப்பினர் சரவணன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் தங்களது கோரிக்கைகை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ. தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், சாலையோர சங்க நிர்வாகிகள் வடிவேலு, துரியன், வீரமணி, அழகுராஜ் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பண்டிகை காலங்களில் இதுபோல நடைபாதை கடைகளை அகற்றினால் அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றமாறு வலியுறுத்தினர்.

    இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை அலுவலகம் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஏழ்மை நிலையில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளை இப்படி பண்டிகை நேரத்தில் அகற்றினால் அவர்களது நிலை என்ன ஆகும்? அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தந்துவிட்டு, அவர்களை அகற்ற வேண்டும் என கேட்டக்கொண்டார்.

    அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படியே தாங்கள் செயல்படுவதாக கூறினர்.

    இதனையடுத்து சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் பேரணியாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் இல்லாத காரணத்தினால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டு சுப்புராயப் பிள்ளை சத்திரம் கென்னடிநகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதி மற்றும் கரிமேடு வீதி ஆகிய வீதிகளில் கடந்த காலங்களில் இருந்து தெரு விளக்குகள் இல்லாமல் அப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்தது.
    • விழாவில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டு சுப்புராயப் பிள்ளை சத்திரம் கென்னடிநகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதி மற்றும் கரிமேடு வீதி ஆகிய வீதிகளில் கடந்த காலங்களில் இருந்து தெரு விளக்குகள் இல்லாமல் அப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்தது.

    புதுவை அரசு மின்துறை மூலம் இங்கு மின்கம்பங்கள் அமைத்து தெரு விளக்குகள் அமைப்பதற்கான பூமி பூஜை லயன்ஸ் கிளப் வீதியில் நடந்தது. நேரு எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கினார்.

    விழாவில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 7 நாள் என்.எஸ்.எஸ் முகாமின் நிறைவு விழா நடந்தது.
    • நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 7 நாள் என்.எஸ்.எஸ் முகாமின் நிறைவு விழா நடந்தது.

    விழாவிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ரத்தினவேல் காமராஜ், ரங்கநாயகி வளவன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், ஆலோசகர் ரத்தினபிரியா அருண்குமார், அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

    மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், ேபாட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயந்தி தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • புதுவையை அடுத்த பூரணாங்குப்பம் ஜோதி சிலம் பம் சத்ரிய குருகுலம், சத்ரிய சேனா சங்கம் சார்பில் சத்ரியர் மற்றும் சத்திரியாஸ் எனும் கர்லாகட்டை மூலம் மெய்பாடம் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • விழாவில் சமூக ஆர்வலர் ஆனந்தன், தேசிய தொழிற்சங்க தலைவர் கந்தசாமி, சேவா சங்க துணை தலைவர்கள் பயில்வான் பெரியசாமி, முருகன், இணை செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த பூரணாங்குப்பம் ஜோதி சிலம் பம் சத்ரிய குருகுலம், சத்ரிய சேனா சங்கம் சார்பில் சத்ரியர் மற்றும் சத்திரியாஸ் எனும் கர்லாகட்டை மூலம் மெய்பாடம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் சத்திரிய சேவா சங்க தொடக்க விழா குரு குலத்தில் நடைபெற்றது.

    நிறுவன தலைவர் ஜோதி செந்தில்கண்ணன் வரவேற்றார். வாசியோகி அருணோதையன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பா.ஜனதா பிரமுகர் கல்யாணராமன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    விழாவில், கடந்த 7 ஆண்டுகளாக நே ரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, கே ரளா, பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 50-க்கும்மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றனர்.

    விழாவில் சமூக ஆர்வலர் ஆனந்தன், தேசிய தொழிற்சங்க தலைவர் கந்தசாமி, சேவா சங்க துணை தலைவர்கள் பயில்வான் பெரியசாமி, முருகன், இணை செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேவாசங்க செ யலாளர் வெற்றிச் செல்வன் நன்றி கூறினார்.

    • வெங்கடேசன் புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
    • வெங்கடேசன் என்.ஆர். நகர் பகுதியில் வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே ஓடைவெளி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தார்.

    பின்னர் தனியாக மோட்டார் சைக்கிளில் பழைய சுண்ணாம்பாறு ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது என்.ஆர். நகர் பகுதியில் வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர். அதோடு சிலரை வரவழைத்து போலீஸ்காரர் வெங்கடேசனை மீண்டும் தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் உடனடியாக அவசர போலீஸ் 100-க்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    பின்னர் காயமடைந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தவளகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிச்சாமி ஏட்டு லட்சுமணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் வெங்கடேசனை தாக்கிய கும்பல் முன் விரோதத்தால் தாக்கியதா? அல்லது தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் வெங்கடேசனை தாக்கி நகையை பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ்காரரை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் I மற்றும் II நீதிமன்றங்களை கவர்னர் தமிழிசை இன்று திறந்து வைத்தார்.
    • நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு.உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் I மற்றும் II நீதிமன்றங்களை கவர்னர் தமிழிசை இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி இளந்திரையன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கலந்துகொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு.உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    மனுநீதி சோழனை போல் பசுவிற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற அரசனைப் போல உலகத்தில் எங்கேயும் மக்களுக்கு நீதி வழங்கியவர்கள் இல்லை. எந்த ஒரு மாநிலத்தில் நீதி வழுவாமல் அரசாட்சி நடக்கிறதோ அங்கே செல்வம் செழிக்கும். மக்கள் வாழ்க்கை பெருகும்.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நீதிநூல் திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால் சொல்லியிருக்கிறார்கள். நடுநிலை தவறாக தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். உலகம் முழுவதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல் தான்.

    துலாக்கோல் போல் நீதித்துறை இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கெல்லாம் தமிழர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள் என்பது சிறப்பு. எளியவர்களுக்குக் கூட சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்று நினைப்பதைப் போல எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது.

    அதேபோல நீதி வழங்குவதை விரைவாக செய்யுங்கள்.

    கிடப்பில் போடப்பட்ட. வழக்குகளை எல்லாம் மிக விரைவாக முடித்துக் கொண்டு இருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.

    அரசியல்வாதிக்கு வாக்கு மூலதனம் வக்கீலுக்கு நாக்கு மூலதனம். விவாதம் சரியாக செய்தால் எந்த வழக்கிலும் வெற்றி பெற்று விட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கண்ணகி பள்ளி தெற்கு பகுதியில் விழுப்புரம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பகுதி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், கோட்டைமேடு பகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சங்கர், தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கண்ணகி பள்ளி தெற்கு பகுதியில் விழுப்புரம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பகுதி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர்கள் பாவாடை, சீனிவாசன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், கோட்டைமேடு பகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சங்கர், தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல், கண்ணகி அரசு பள்ளியின் நுழைவு வாயிலில் இரும்பு கதவு, விழுந்த மதில்சுவர்களை புதிதாக கட்டுவதற்கும், பள்ளி வளாக சாலைகள் பராமரிப்பு பணிக்கும் ரூ.25 லட்சம் மதிப்பில் பணிகளையும், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உறுவையாறு பாலாத்தின் ஷட்டர் அமைப்புகளை புதியதாக மாற்றுவதற்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான பணிகளையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து காங்கிரசார் வழிபட்டனர்.
    • வைத்திலிங்கம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஏற்பாட்டின் பேரில் ரெயின்போ நகரில் 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து காங்கிரசார் வழிபட்டனர்.

    பிறந்தநாள் வைத்திலிங்கம் எம்.பி.க்கு பிறந்த நாளாகும். இதையடுத்து வைத்திலிங்கம் எம்.பி. பிறந்த நாளையொட்டி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரசார் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஏற்பாட்டின் பேரில் ரெயின்போ நகரில் 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணா நகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை பிராணிகள் நல பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி உலக விலங்குகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நல பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி உலக விலங்குகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    விலங்குகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருமாம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டி நடந்தது. பிராணிகள் நல சங்க தலைவர் டாக்டர் செல்லமுத்து தலைமை தாங்கினார்.

    லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் முகமது சுபையா, தேவதர்ஷினி, மகேஸ்வரி, கீர்த்திகா, புவனேஸ்வரி ம‌ற்று‌ம் பள்ளியின் ஆசிரியர்கள செய்திருந்தனர். பள்ளி துணை முதல்வர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

    ×