search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Housing Exchange Board"

    • புதுவை குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் தங்களது 10 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். கருவூலகம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.
    • இந்த நிலையில், 21-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    புதுச்சேரி:

    புதுவை குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் தங்களது 10 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். கருவூலகம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.

    குடிசை மாற்று வாரியத்தை பொதுப்பணித்துறையின் அங்கமாக இணைக்க வேண்டும். 7-வது சம்பளக்குழு பரிந்துரை களை அமல்படுத்த வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் முரசுகொட்டி போராட்டம், கஞ்சி காய்ச்சி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், 21-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    அவர்கள் சோளக்காட்டு பொம்மையை உருவாக்கி, அதனை அதிகாரி போல் நாற்காலியில் அமர செய்து, வாரியத்திற்கு நிரந்தர அதிகாரியை நியமிக்க கோரி பொம்மையிடம் மனு அளித்தனர்.போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார்.

    செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன செயலவை உறுப்பினர் சரவணன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் தங்களது கோரிக்கைகை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ×