search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை நீதிபதிகளுக்கு கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
    X

    காரைக்காலில் ஒருங்கினைந்த நீதி மன்றங்களை கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி. 

    புதுவை நீதிபதிகளுக்கு கவர்னர் தமிழிசை வேண்டுகோள்

    • காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் I மற்றும் II நீதிமன்றங்களை கவர்னர் தமிழிசை இன்று திறந்து வைத்தார்.
    • நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு.உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் I மற்றும் II நீதிமன்றங்களை கவர்னர் தமிழிசை இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி இளந்திரையன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கலந்துகொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு.உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    மனுநீதி சோழனை போல் பசுவிற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற அரசனைப் போல உலகத்தில் எங்கேயும் மக்களுக்கு நீதி வழங்கியவர்கள் இல்லை. எந்த ஒரு மாநிலத்தில் நீதி வழுவாமல் அரசாட்சி நடக்கிறதோ அங்கே செல்வம் செழிக்கும். மக்கள் வாழ்க்கை பெருகும்.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நீதிநூல் திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால் சொல்லியிருக்கிறார்கள். நடுநிலை தவறாக தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். உலகம் முழுவதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல் தான்.

    துலாக்கோல் போல் நீதித்துறை இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கெல்லாம் தமிழர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள் என்பது சிறப்பு. எளியவர்களுக்குக் கூட சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்று நினைப்பதைப் போல எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது.

    அதேபோல நீதி வழங்குவதை விரைவாக செய்யுங்கள்.

    கிடப்பில் போடப்பட்ட. வழக்குகளை எல்லாம் மிக விரைவாக முடித்துக் கொண்டு இருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.

    அரசியல்வாதிக்கு வாக்கு மூலதனம் வக்கீலுக்கு நாக்கு மூலதனம். விவாதம் சரியாக செய்தால் எந்த வழக்கிலும் வெற்றி பெற்று விட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×