என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நெட்டப்பாக்கம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக ராஜேந்திரன் ஆணி பாதம் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூர் புதுகாலனி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது56). கூலி தொழிலாளி. இவருக்கு மயிலம்மாள் என்ற மனைவியும், சீதா என்ற மகளும் உள்ளனர். சீதாவுக்கு திருமணமாகி அவரது கணவர் சாந்தலிங்கத்துடன் தனது தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக ராஜேந்திரன் ஆணி பாதம் நோயினால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் ஆணி பாதம் நோய் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத போது அவர் ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மருமகன் சாந்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உலக மனநல மாத விழிப்புணர்வை முன்னிட்டு புதுவை அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரின்ஸ் சிட்டி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
    • முன்னதாக அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் அனைவரையும் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    உலக மனநல மாத விழிப்புணர்வை முன்னிட்டு புதுவை அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரின்ஸ் சிட்டி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, ரோட்டரி உதவி ஆளுநர் மதிவாணன், ரோட்டரி கிளப் ஆப் பிரெஞ்சு சிட்டி தலைவர் சதிஷ்குமார், செயலாளர் சீனிவாசன், மருந்தியல் மருத்துவர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பாரதி பூங்கா முன்பு தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் முக்கிய சாலை கள் வழியாக சென்று மீண்டும் பாரதி பூங்காவில் முடிவடை ந்தது. இதில் அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரச மாதேவி ரவிச்சந்திரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், ரோட்டரி முன்னாள் சங்க தலைவர்கள் ராஜகணபதி, கோடி ஆகியோர் பங்கேற்றனர்.

    முன்னதாக அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆத்திச்சுவடி பள்ளி தாளாளர் சத்தியவண்ணன் நன்றி கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
    • புதுவையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. புதுவையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இ ந்நிலையில் நேற்று முதல் புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. கடுமையான வெப்பம் அடித்த நிலைமாறி புதுவை குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறியுள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வந்தது. சுமார் 8.30 மணியளவில் மழை வேகமெடுத்தது. கனமழை காரணமாக நகர பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளமாக ஓடியது.

    இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கியுள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் கடந்த மாதம் பெய்த மழையினாலும் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் 11 ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்பொழுது பெய்து வரும் மழையில் மற்ற ஏரிகளை நிரப்ப பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரி மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது பெய்து வரும் மழையால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகூர் பகுதியில் உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது.

    மேலும் வரத்து மற்றும் போக்கு வாய்க்கால்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி நிலத்திலும் வீடுகளிலும் தண்ணீர் புகாதவாறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவசரமாக நடக்கும் வாய்க்கால் தூர்வாரும் பணியினால் கன மழை பெய்தால் மீண்டும் வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுவது உறுதியென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தெற்கு பகுதி பொதுப்பணித்துறை சாலை மற்றும் போக்குவரத்து பிரிவு மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பராமரிப்பில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாகூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்து வருகிறது.

    • தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர், சிங்கார கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்
    • இவர் டி.என். பாளையத்தில் பரமசிவம் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர், சிங்கார கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் டி.என். பாளையத்தில் பரமசிவம் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதே நிலத்தை ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் குத்தகை வைத்திருந்ததால் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கணேசன் பராமரித்து வந்த தென்னங்கன்றுகளை ஆதி கேசவனுடைய தாயார் கிருஷ்ணவேணி ஆடுகளை கொண்டு மேய்த்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கணேசன், ஆதிகேசவனிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிகேசவன் அவரது சகோதரர் ராமதாஸ், தாயார் கிருஷ்ணவேணி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி சப் -இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதுவை திருமுடி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்.
    • இவர் வேறு வீடு மாற இருந்ததால் பழைய வீட்டில் உள்ள பொருட்களை அந்த வீட்டில் வைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் வீடு புகுந்து மின்விசிறி திருடிய நபர் கையும் களவுமாக சிக்கினார். புதுவை திருமுடி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் வேறு வீடு மாற இருந்ததால் பழைய வீட்டில் உள்ள பொருட்களை அந்த வீட்டில் வைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று மோகன்ராஜ் முன்பு குடியிருந்த வீட்டின் மாடியில் வசிக்கும் தனது மாமனாரை பார்க்க வந்தார். அப்போது இரவு 7.30 மணியளவில் வீட்டில் யாரோ நடமாடும் சத்தமும், பொருட்கள் உருட்டும் சத்தமும் வந்ததால் சந்தேகமடைந்த மோகன்ராஜ் கீழே இறங்கி வந்து பார்த்தார்.

    அப்போது ஒருவர் வீட்டில் இருந்த டேபிள் மின் விசிறியை திருடிக்கொண்டு வெளியேறுவதை கண்டு மோகன்ராஜ் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பெரியகடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர்.

    • ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரெஞ்சு நாடு ஆதரவாக உள்ளது.
    • புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரெஞ்சு நாடு ஆதரவாக உள்ளது.

    புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    நீலம்-மஞ்சள் நிறத்தில் இடம்பெறும் உக்ரைன் தேசியக்கொடி வண்ணத்தைப் பதிந்து அதில் பிரான்ஸ் உக்ரைனுடன் இருக்கிறது என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரெஞ்சு துணை தூதரகத்தில் மேலே பிரான்ஸ் தேசியக்கொடி பறக்க, கீழே உக்ரைன் கொடி வண்ணம் இட்டு அதில் தனது ஆதரவை மக்கள் அறியும் வகையில் பிரான்ஸ் அரசு பதிவு செய்துள்ளது.

    • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், புதுவை மாநிலத்தில் முதன் முறையாக தோழியர் பாலின மன்றம் எனும் மகளிருக்கான குறை தீர்வு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
    • மகளிர் சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், புதுவை மாநிலத்தில் முதன் முறையாக தோழியர் பாலின மன்றம் எனும் மகளிருக்கான குறை தீர்வு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த குறை தீர்வு அமைப்பு, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அரியாங்குப்பம், வில்லியனூர் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட மதிக்கிருஷ்ணா புரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பில் 'தோழியர் பாலின மன்றம்' தொடங்கப்பட்டது.

    இது சம்மந்தமான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்ரமணியன், வட்டார விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், வட்டார இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, பாலின ஒருங்கிணைப்பாளர் சாவித்ரி, கிராம சேவகர் சுப்புராயன், ராணி, கலைமதி, விஷ்ணுபாரதி, ஞானா ம்பிகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை நேருவீதி காலம் காலமாக வியாபாரத்திற்கு சிறந்த இடமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வணிகம் குறைவாகவே நடைபெற்று வருகிறது.
    • இதற்கு காரணம் நேரு வீதியில் சாலையின் ஒருபக்கம் மட்டுமே வாகன நிறுத்தம் வசதி செய்யுமாறு உத்தரவிட்டதே ஆகும்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி வணிகர் சங்க தலைவர் நமச்சிவாயம், துணைத்தலைவர் இசைக்கலைவன், வர்த்தக சபை துணை தலைவர் ரவி மற்றும் மார்க்கெட் அசோசியேஷன் சங்க உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நேருவீதி காலம் காலமாக வியாபாரத்திற்கு சிறந்த இடமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வணிகம் குறைவாகவே நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் நேரு வீதியில் சாலையின் ஒருபக்கம் மட்டுமே வாகன நிறுத்தம் வசதி செய்யுமாறு உத்தரவிட்டதே ஆகும். இதனால் நேரு வீதி அதன் தனித்துவத்தை இழந்து வருகிறது.

    வணிகர்களின் நலனை மீட்டெடுக்கவும், தொழிலாளர் களின் நலனை கருதியும் கடந்த 3 ஆண்டுகளாக நேரு வீதி வணிகர் சங்கம் வணிக திருவிழாவை நடத்தி வாடிக்கையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக நேரு வீதி பக்கம் திரும்ப வைத்துள்ளனர்.

    இந்த வீதியில் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்த தாங்கள் ரங்கசாமி உத்தரவிட்டு வணிகர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். ஆனால் நேரு வீதியில் ஒரு பக்கமாக வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இதனால் நேரு வீதியில் வாகனம் நிறுத்துமிடம் பாதியாக குறைந்து விடும். வியாபாரமும் பாதிக்கப்படும். எனவே நேரு வீதியில் இருபுறமும் வாகன நிறுத்தம் வசதியை தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
    • கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சார்லஸ் வரவே ற்று பேசினார். தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் 'மாணவர்களும் தேச ஒருமைப்பாடும்' என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகளிடத்தில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் விரிவுரையாளர் நடேசன் நன்றி கூறினார்.

    • புதுவை மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது.
    • சங்கத் துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுவை மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது.

    சங்கத் துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார். சங்க பொது செயலாளர் தயாநிதி தேசிய யோகா விளையாட்டு போட்டி பற்றி விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    இதில் நேரு எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு துணைத்தலைவர் மற்றும் சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்தபாலயோகி பவனானி ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவ- மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக மூத்த சங்கத் துணைத் தலைவர் கஜேந்திரன், துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்கப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் லலிதா சண்முகம் கலந்துக் கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தினர்.

    நிகழ்ச்சியில் யோகா நடுவர்கள் கவுரவி க்கப்பட்டனர்.முடிவில் சங்க துணை செயலாளர் சதிஷ் குமார் நன்றி கூறினார்.

    • புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் இலவச பொது மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • சமுதாய நல கூடத்தில் இம்மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் இலவச பொது மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    வாணரப்பேட்டை கல்லறை ரோட்டில் சமுதாய நல கூடத்தில் இம்மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், உப்பளம் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பஸ்கல், கிளை செயலாளர்கள் செல்வம், மணிகண்டன்,கவி மற்றும் ராகேஷ் கவுதமன், மோரிஸ், ரகுமான், லாரன்ஸ், மதன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
    • இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.

    புதுச்சேரி:

    விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு  அமலுக்கு வரஉள்ளது.

    இதற்காக கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    ×