search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    பாகூர் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் பொக்லின் எந்திரம் மூலம் தூர் வாரி வருவதை படத்தில் காணலாம்.

    புதுவையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
    • புதுவையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. புதுவையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இ ந்நிலையில் நேற்று முதல் புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. கடுமையான வெப்பம் அடித்த நிலைமாறி புதுவை குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறியுள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வந்தது. சுமார் 8.30 மணியளவில் மழை வேகமெடுத்தது. கனமழை காரணமாக நகர பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளமாக ஓடியது.

    இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கியுள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் கடந்த மாதம் பெய்த மழையினாலும் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் 11 ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்பொழுது பெய்து வரும் மழையில் மற்ற ஏரிகளை நிரப்ப பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரி மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது பெய்து வரும் மழையால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகூர் பகுதியில் உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது.

    மேலும் வரத்து மற்றும் போக்கு வாய்க்கால்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி நிலத்திலும் வீடுகளிலும் தண்ணீர் புகாதவாறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவசரமாக நடக்கும் வாய்க்கால் தூர்வாரும் பணியினால் கன மழை பெய்தால் மீண்டும் வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுவது உறுதியென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தெற்கு பகுதி பொதுப்பணித்துறை சாலை மற்றும் போக்குவரத்து பிரிவு மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பராமரிப்பில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாகூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×