VIDEO: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்

வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளான்.தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
VIDEO: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு போபால் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஒசாஃப் அலி கானை போலீசார் இன்று ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த வழக்கறிஞர்கள், அலி கான் மீதான கோபத்தில் நீதிமன்ற வளாகத்தில் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வழக்கறிஞர்கள் அலி கானை சரமாரியாகத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com