search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் பா.ஜ.க.வை திணற விட்ட சந்திரபாபு நாயுடு
    X

    ஆந்திராவில் பா.ஜ.க.வை திணற விட்ட சந்திரபாபு நாயுடு

    • பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை.
    • ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பா ஜனதா, தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா ஆகியவை கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க. மற்றும் பவன் கல்யாண் ஆகிய 2 கட்சிகளுக்கும் சேர்த்து 5 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கேட்ட தொகுதிகளை தர வேண்டும் என பா.ஜ.க அழுத்தம் கொடுத்தது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் 118 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடுவதற்காக தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், இணைந்து வெளியிட்டனர். ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


    பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை. கேட்ட தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு சந்திரபாபு நாயுடு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை சந்திரபாபு நாயுடு திணற விட்டுள்ளார்.

    பா.ஜ.க கூட்டணிக்கு வராவிட்டால் மீதமுள்ள தொகுதிகளிலும் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி கட்சியினரே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கு தேசம் கட்சி 94 வேட்பாளர்ளையும், ஜனசேனா வேட்பாளர்களையும் 5 வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளது.

    குப்பம் தொகுதியில் மீண்டும் சந்திரபாபுநாயுடு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிட்ட பட்டியலின்படி சந்திரபாபுநாயுடு குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நகரியில் அமைச்சர் ரோஜாவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.சி காளி முத்துகிருஷ்ணம்மா மகன் பானுபிரகாஷ், பலமனேரில் முன்னாள் அமைச்சர் அமர்நாத்தும், சித்தூரில் குருஜால ஜெகன்மோகன், கங்காதர நெல்லூரில் வி.என்.தாமஸ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×