என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆடம்பர திருமணம் கூடாது எனக் கூறிய கெஜ்ரிவால் மகளுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் நிச்சயதார்த்தம் - பாஜக அட்டாக்
    X

    ஆடம்பர திருமணம் கூடாது எனக் கூறிய கெஜ்ரிவால் மகளுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் நிச்சயதார்த்தம் - பாஜக அட்டாக்

    • ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
    • அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று முன் தினம் திருமணம் செய்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா 2 படத்தில் வரும் சாமி பாடலுக்கு தனது மனைவி சுனிதாவுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

    இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது. "திருமணங்கள் எளிமையாக இருக்க வேண்டும், எந்த ஆடம்பரமும் இருக்கக்கூடாது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய பழைய வீடியோவை டெல்லி பாஜக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    "முதலில், அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள். பின்னர் கோடிக்கணக்கில் செலவு செய்து, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் குடும்ப திருமணங்களை நடத்துகிறார்கள்," என்று பாஜக விமர்சித்துள்ளது.

    Next Story
    ×