search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்னுடைய பேட்டியை திரித்து, சிதைத்து வெளியிடுவதா?- கார்கே, ஜெய்ராம் ரமேஷ்க்கு கட்கரி நோட்டீஸ்
    X

    என்னுடைய பேட்டியை திரித்து, சிதைத்து வெளியிடுவதா?- கார்கே, ஜெய்ராம் ரமேஷ்க்கு கட்கரி நோட்டீஸ்

    • சாலை, ஏழை மக்கள், குடிநீர் குறித்து நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார்.
    • பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டதாக கட்கரி குற்றச்சாட்டு.

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு பேட்டியில் "கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. கிராமங்களில் சிறந்த சாலைகள் இல்லை. குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை. நல்ல பள்ளிக்கூடம் இல்லை" எனக் குறிப்பிடுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இது நிதின் கட்கரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வீடியோ தனது பேட்டியின் ஒரு பகுதி. அப்படி இருந்த நிலை மாற்றப்பட்டு தங்களது ஆட்சி காலத்தில் சிறந்த சேவையை செய்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தேன்.

    அந்த பேட்டியை திரித்து, சிதைத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் இந்த வீடியோவை நீக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரம், மூன்று நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×