தாடி வேண்டுமா.. காதலி வேண்டுமா.. ம.பி.யில் பேரணியாக சென்ற பெண்கள் வீடியோ வைரல்

இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணிதாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் விவாதம்.
தாடி வேண்டுமா.. காதலி வேண்டுமா.. ம.பி.யில் பேரணியாக சென்ற பெண்கள் வீடியோ வைரல்
Published on

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் பல்வேறு பதாகைகளை பெண்கள் ஏந்தி சென்றுள்ளனர். குறிப்பாக 'தாடியை நீக்கி காதலை காப்பாற்று' (Remove beard, save love) என்ற பதாகையையும் கிளீன் சேவ் செய்யவில்லையெனில் காதலிக்கமாட்டோம் (No Clean Shave, No Love) என்ற பதாகையையும் , தாடி வேண்டுமா காதலி வேண்டுமா முடிவு உங்கள் கையில் (Keep a beard or keep a girlfriend, the choice is yours) என்ற பதாகையையும் பெண்கள் ஏந்தி சென்றனர்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.

இந்த பேரணி உண்மையான பேரணியா? இல்லை ரீல்ஸ்காக எடுக்கப்பட்ட வீடியோவா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com