search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டிச.6-ந்தேதி I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்: கார்கே அழைப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டிச.6-ந்தேதி I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்: கார்கே அழைப்பு

    • 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
    • கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    4 மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் அந்த கட்சி ஆட்சியை இழந்தது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    சத்தீஸ்கரில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் நேரம் செல்ல செல்ல பின்தங்கியது. இதனால் அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த நிலையில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவரது வீட்டில் மாலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கட்சிகள் தனியாக போட்டியிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எப்படி எதிர்கொள்வது? பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    Next Story
    ×