என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய ஐ.ஜி.யை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி அதிரடி
    X

    கேரளா: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய ஐ.ஜி.யை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி அதிரடி

    கேரளா மாநிலத்தில் குடித்து விட்டு தாறுமாறாக கார் ஒட்டிய குற்றப்பிரிவு ஐ.ஜி ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து அம்மாநில காவல் துறை தலைமை இயக்குநர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநில காவல்துறையில் குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஜெயராஜ். கடந்த மாதம் 24-ம் தேதி கொல்லம் அருகே உள்ள அஞ்சலில் ஜெயராஜ் தனது கார் ஓட்டுநருடன் தாறுமாறாக காரை ஓட்டியுள்ளார். இது தொடர்பாக புகார் எழுந்ததும் ஜெயராஜ் மற்றும் அவரது டிரைவருக்கு மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் இருவரும் மது குடித்தது உறுதியானது. இதனையடுத்து, டிரைவர் சந்தோஷ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே, ஜெயராஜ் மீதான புகாரை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில காவல் துறை இயக்குநருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜெயராஜ்ஜை சஸ்பெண்ட் செய்து காவல் துறை தலைமை இயக்குநர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான ஜெயராஜ், ஏற்கனவே குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்து பின்னர் இது குறித்து விசாரணைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×