search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஐ.ஜி"

    • போலீஸ் துறை சார்பில் மன மகிழ் மன்ற மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சரக ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    ராசிபுரம்:

    போலீஸ் துறை சார்பில் மன மகிழ் மன்ற மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரம் அருகே உள்ள வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது.

    பரிசளிப்பு

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சரக ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    மேலும் சேலம் மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு பரிசு கோப்பை களையும், சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார் (ராசிபுரம்), முத்துகிருஷ்ணன், நாமகிரி பேட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் செயலாளர் முத்துவேல் ராமசாமி, தொழிலதிபர் பாலசுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஐ.ஜி. பவானீஸ்வரி பேசுகையில் பள்ளி மாணவ, மாணவிகள் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால்தான் குடும்பமும் நாடும் நன்றாக இருக்கும். நாடு நன்றாக வளர்ந்தால் அனைத்து துறையும் வளர்ச்சி அடையும்.

    காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் வழங்கப்பட்டு வருகிறது. படிப்பின் முக்கியத்துவத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர் என்றார்.

    டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பேசும்போது, மாணவ, மாணவிகள் தீய பழக்கங்களில் இருந்து விடுபட மனமகிழ் மன்றம் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தாய், தந்தை இல்லாத குழந்தைகளை பாதுகாக்க போலீசார் தயாராக உள்ளனர் என்றார்.

    ×