என் மலர்
விருதுநகர்
செல்லமாக வளர்த்த நாய் இறந்து போன நிலையில், அதன் நினைவாக தன்னுடைய வீட்டில் நாய்க்கு மெழுகுச்சிலை அமைத்து போலீஸ்காரர் பராமரித்து வருகிறார்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரேணுகாந்த். இவர் நாய் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு் நாய் குட்டியை வளர்ப்பதற்காக கொடைக்கானலில் இருந்து வாங்கி வந்தார்.
பின்னர் அந்த நாய்க்கு பவுலி என பெயர் சூட்டி தன்னுடைய வீட்டில் செல்லமாக 8 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த நாய்க்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனது. இதனால் ரேணுகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் நாயை அடக்கம் செய்தனர்.
நாய் மேல் கொண்ட பாசத்தால், அதன் நினைவாக தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் அந்த நாய்க்கு மெழுகுச்சிலை அமைத்து போலீஸ்காரர் ரேணுகாந்த் பராமரித்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 45 ஆயிரத்து 33 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவானது.
15 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,765 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 92 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.
மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.
1,460பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 2,700-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் பரிசோதனை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.
தமிழக அரசு இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்டத்தில் அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் மாவட்ட மக்களிடையே புதிய வைரஸ் தொற்று காரணமாக நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்தவர்களில் மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு பொது இடங்களில் நோய் தடுப்பு வழி முறைகளும் முறையாக பின்பற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாகும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மெத்தனப்போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

சிவகாசி அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் தடுக்க முடியாமல் போகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
இதில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக குமார் (வயது 47), முனீஸ்வரன் (29), சங்கர் (30) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பாலகிருஷ்ணன் (74), வேல்முருகன் (43), சரவணன் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசியை வேனில் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் 75 மூட்டை அரிசியை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசாருக்கு சாத்தூர் வழியாக வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் முத்தால்நாயக்கன்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேனை மடக்கினார்கள். அந்த வேனில் சோதனை செய்த போது அதில் 75 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவர்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை (வயது 37) கைது செய்தனர். அந்த வேனில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீசார் படந்தால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கைப்பையுடன் நின்று கொண்டிருந்த படந்தாலை சேர்ந்த ஜெயராமன் (வயது58), குருலிங்காபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (40) ஆகிய 2 பேரிடம் இருந்து 6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
சாத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சாத்தூர் அருகே இருக்கன்குடி நார்காபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகசெல்வம் (வயது 20). இவர் தனது தங்கை ஜோதிகாவுடன் (16) இரு சக்கர வாகனத்தில் நேற்று சிவகாசி தேவராஜ் நகருக்கு வந்து கொண்டிருந்தார். பழைய விருதுநகர் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகசெல்வம் லாரி சக்கரத்தில் சிக்கி தனது தங்கை கண் முன்னே பரிதாபமாக இறந்தார். போலீசார் விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நத்தம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருமணமான 28 நாளில் விஷம் குடித்துவிட்டு விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 23). இவர் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த தனது உறவினர் வைரசீமான் என்பவரை காதலித்து கடந்த 28 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வைர சீமான் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான மறுநாளே புதுப்பெண் மகேஸ்வரியை விருதுநகர் லட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி தனது கணவர் வைரசீமானை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லாமல் போய்விட்டது.
கணவரது உறவினர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மகேஸ்வரி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்து அங்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக வாயிலில் வைத்து விஷம் குடித்துவிட்டு மகேஸ்வரி மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அங்கு நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரை விசாரித்தபோது தான் விஷமருந்தி விட்டதாக தெரிவித்ததுடன், மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மகேஸ்வரி மனு மீது விசாரணை நடத்த அவரது கணவர் வைரசீமானை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் செயல்படாத நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாகவும் இதனை தொடர்ந்து மேல் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் மகேஸ்வரியின் புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 75 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
சாத்தூர்:
விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசாருக்கு சாத்தூர் வழியாக வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் முத்தால்நாயக்கன்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேனை மடக்கினார்கள்.
அந்த வேனில் சோதனை செய்த போது அதில் 75 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவர்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை (வயது 37) கைது செய்தனர். அந்த வேனில் இருந்த 75 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 653 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 222 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 92 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.
இந்த நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது. 1,800-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்பட வில்லை.
மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பது இல்லை. பரிசோதனை முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்கிறது.
மாவட்ட நிர்வாகமும் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் வெளியிட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறையை அறிவுறுத்துவது இ்ல்லை.
இம்மாவட்டத்தில் 322 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 92 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 228 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனரா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து ஒரு கிராமம் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த கிராமத்திலும் விதிமுறைப்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா, நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதும் உறுதி செய்யப்படாத நிலையே இருந்து வருகிறது.
நோய் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படாததால் மாவட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளைப் பற்றிய தகவலும் தெரியாமலேயே போய்விடுகிறது இதனால் மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது.
குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகம் பொது இடங்களிலாவது நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில் மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அருப்புக்கோட்டை அருகே லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அருப்புக்கோட்டை:
திருச்சுழி மல்லம்பட்டியில் இருந்து டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு புலியூரானைச் சேர்ந்த டிரைவர் சீனிவாசன் கரிசல்குளத்துக்கு சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரெயில்வே மேம்பாலம் அருகே லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சீனிவாசன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியிலிருந்து 47 சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் 2ஆயிரத்தி 800 டன் எடையுள்ள 57 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.
சின்னசேலம்:
தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியிலிருந்து 47 சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் 2ஆயிரத்தி 800 டன் எடையுள்ள 57 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் சின்னசேலம்-கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது.
இந்த பணிகளை சின்னசேலம் கிடங்கு மேலாளர் பிரபு, துணை கிடங்கு மேலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய உணவுக் கழக மேலாளர் சகாதேவன், தர ஆய்வு உதவியாளர் திருநீலகண்டன், இளநிலை உதவியாளர் சுவீட் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
90 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.
306 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 1,200-க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
இது வரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவ பரிசோதனைகளை குறைக்கக் கூடாது என அறிவுறுத்தியும், சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை அதிகரிக்க அக்கறை காட்டாத நிலையே தொடர்கிறது.
1,800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 306 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டியது அவசியமாகும். தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அதில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பது ஏற்புடையதல்ல நோய் பரவல் அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும்