என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    90 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

    306 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 1,200-க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    இது வரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவ பரிசோதனைகளை குறைக்கக் கூடாது என அறிவுறுத்தியும், சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை அதிகரிக்க அக்கறை காட்டாத நிலையே தொடர்கிறது.

    1,800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 306 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டியது அவசியமாகும். தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அதில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பது ஏற்புடையதல்ல நோய் பரவல் அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும்
    Next Story
    ×