என் மலர்tooltip icon

    வேலூர்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு வருகிறார்கள். அதனால் படுக்கை இல்லாத சூழல் காணப்பட்டது. கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் காத்திருக்கும் அவலம் நேர்ந்தது.

    வேலூர்:

    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கெரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு 550 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

    தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு வருகிறார்கள். அதனால் படுக்கை இல்லாத சூழல் காணப்பட்டது. கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் காத்திருக்கும் அவலம் நேர்ந்தது.

    படுக்கைகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலை காணப்பட்டது. மூச்சு திணறல் மற்றும் மோசமான நிலையில் வரும் கொரோனா நோயாளிகளுக்கு உறவினர் காத்திருக்கும் அறை மற்றும் வராண்டாக்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனை தீவிரசிகிச்சை பிரிவு அருகே காலி இடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க ஷெட் அடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

    இங்கு ஆக்சிஜன் வசதியுன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மரணம் அடைந்தார்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் சுயநினைவை இழந்து, கோமா நிலைக்கு சென்றதாக தெரிகிறது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவருக்கு கோமதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்‌. கோமதி வேலூர் காவல் பயிற்சி மையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சினிமா உதவி இயக்குனர் உள்பட 4 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானார்கள்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதேபோல பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர். இறப்பு விகிதமும் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இறந்த 4 பேரில் ஒருவர் பா.ஜ.க.வை சேர்ந்த சென்னை மதுரவாயல் மண்டல செயலாளராக இருந்த தாயுமானவர். இவர் கொரோனாவுக்கு இறந்ததாக வேலூர் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் அவர், சினிமா உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார்.

    இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஜார் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 66), வியாபாரி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாளுக்கு, நாள் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளால் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இந்த கட்டுப்பாடுகளின்படி வேலூரில் நேற்று காலையிலேயே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் காலை நேரத்தில் சென்று காய்கறி, மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர். வேலூர், காட்பாடியில் உள்ள உழவர் சந்தை கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆனால் வேலூரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் கூட்டம் ஓரளவுக்கு காணப்பட்டது. தேவையில்லாத இதர பல கடைகள் நகரில் திறக்கப்பட்டு இருந்தன. அப்போது மாநகராட்சி அதிகாரிகள் திறக்க அனுமதிக்கப்படாத கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும் அபராதமும் விதித்தனர்.

    மதியம் 12 மணிக்கு பின்னர் மளிகை கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னர் திறந்திருந்த கடைகளை மூட போலீசார் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து வேலூர் மார்க்கெட், மண்டி தெரு, கிருபானந்த வாரியார் சாலை, அண்ணாசாலை, ஆற்காடு ரோடு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. காட்பாடி, காந்திநகர், சித்தூர் சாலையில் உள்ள கடைகள் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மக்கள் நடமாட்டம் இல்லாததால் வேலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டது. ஆனால் சில தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றன.

    பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் செயல்பட்டன. பேக்கரி கடைகள், ஓட்டல்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்திருந்தன. அங்கு உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கவில்லை. பார்சல் மூலம் பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.

    இறைச்சி கடைகளும் மதியம் 12 மணிக்கு பின்னர் மூடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

    பகல் 12 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, சளிமாதிரி சேகரிக்கப்படுகிறது. அதைத்தவிர 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சத்து 40 ஆயிரம், 2-வது கட்டமாக 13 ஆயிரம், 3-வது கட்டமாக 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவற்றில் 2 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் காணப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 4-ம் கட்டமாக 4,500 கோவேக்சின், 1,000 கோவிஷீல்டு என மொத்தம் 5,500 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவை, வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 516 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 648 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 400-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த பிறமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 648 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 28,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 492 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். 408 பேர் உயிரிழந்துள்ளனர். 2,633 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காட்பாடி தாலுகாவில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் விருதம்பட்டு, வி.ஜி. ராவ்நகர், இ.பி. காலனி, காங்கேயநல்லூர், காந்தி நகர், காட்பாடி, பர்னீஸ்வரம், கார்ணாம்பட்டு, கீழ்வடுகன்குட்டை, உள்பட பல்வேறு இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வி.ஐ.டி.சித்தா சிகிச்சை மையம் ஆகியவற்றில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிலர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    ஒரு தெருவில் 3 வீடுகளிலோ அல்லது ஒரே குடும்பத்தில் 4 பேருக்கோ கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த தெரு தகரத்தால் அடைக்கப்படுகிறது. அந்த தெருவில் வசிப்பவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வருவதற்காக தெருவில் சிறிதளவு பகுதி மட்டும் மூடப்பட்டிருக்காது.

    மேலும் தகரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று ஒட்டப்படும். 14 நாட்களுக்கு பின்னர் அந்த தகரம் அகற்றப்படும்.

    கொரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது 28 தெருக்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் நாட்கள் முடிவடைந்ததால் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த 6 தெருக்களில் இருந்த தகரம் அகற்றப்பட்டன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குடியாத்தம் அருகே பம்புசெட் கிணற்றின் தொட்டியில் தண்ணீரில் எடுக்க வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே மீனூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன், விவசாயி. இவரது மனைவி பரிமளா (வயது 36). நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பம்புசெட் கிணற்றின் தொட்டியில் இருந்து வீட்டிற்கு குடத்தின் மூலம் தண்ணீர் எடுக்க வந்தார். தண்ணீர் எடுக்கும் போது திடீரென தவறி கிணற்றில் விழுந்தார். சுமார் 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்த பரிமளாவை காப்பாற்ற அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்துள்ளனர்.

    ஆழம் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி பரிமளாவை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    அடுக்கம்பாறை:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் உள்பட 12 பேர் ஒரேநாளில் பலியாகி உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் வேலூர் அரசு மருத்துவமனைகள் நிரம்பி உள்ளது.

    அறிகுறி தென்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பு தன்மை கொண்டவர்கள் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இறந்துள்ளனர். அதில் 5 பேருக்கு தொற்று உள்ளது. மீதம் உள்ள 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்கள். எனினும் அவர்கள் வயது மூப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினையால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர பிற சிகிச்சைகளுக்கான பொது மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    ஆனால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
    வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

    காட்பாடி
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1துரைமுருகன்திமுக85140
    2வி.ராமுஅதிமுக84394
    3எஸ்.ராஜாஅமமுக1066
    4சுதர்சன்இஜக1003
    5திருக்குமரன்நாம் தமிழர்10449
    வேலூர்
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1கார்த்திகேயன்திமுக83057
    2எஸ்.ஆர்.கே.அப்புஅதிமுக74555
    3வி.டி.தருமலிங்கம்அமமுக862
    4விக்ரம் சக்ரவர்த்திம.நீ.ம.7210
    5பூங்குன்றன்நாம் தமிழர்8476
    அணைக்கட்டு
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1நந்தகுமார்திமுக95159
    2வேலழகன்அதிமுக88799
    3சதீஷ்குமார்அமமுக1140
    4ராஜசேகர்இஜக328
    5சுமித்ரா நாம் தமிழர்8125
    கே.வி. குப்பம்
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1ஜெகன்மூர்த்திபிபிகே84579
    2சீத்தாராமன்திமுக73997
    3தனசீலன்தேமுதிக1432
    4வெங்கடசாமிஇஜக519
    5திவ்யராணிநாம் தமிழர்10027
    குடியாத்தம்
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1அமலுதிமுக100412
    2பரிதாஅதிமுக93511
    3ஜெயந்தி பத்மநாபன்அமமுக1822
    4ராஜன்இஜக482
    5கலையேந்திரிநாம் தமிழர்11834
    சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    காட்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும், அ.தி.மு.க சார்பில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராமுவும் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையின் போது, துரைமுருகனை அ.தி.மு.க. வேட்பாளர் ராமு கலங்கடித்தார். தொடக்கம் முதலே ராமு முன்னிலையில் இருந்து வந்தார். இடையில் மாறி மாறி முன்னிலை வந்த போதும், கடைசியாக 25-வது சுற்று முடிவில் ராமு 346 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் தபால் வாக்குகள் ராமுவுக்கு கைகொடுக்கவில்லை.

    தபால் வாக்குகள் முடிவு இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது. மொத்த தபால் வாக்குகள் 2,832 ஆகும். அதில் துரைமுருகன் 1,897 வாக்குகளும், ராமு 719 வாக்குகளும் பெற்றனர். அதை தொடர்ந்து ஏற்கனவே பழுதான 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 1,804 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் துரைமுருகனுக்கு 796 வாக்குகளும், ராமுவுக்கு 882 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் 85,140 வாக்குகளும், ராமு 84,394 வாக்குகளும் பெற்றனர்.
    காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
    வேலூர்:

    காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு 745 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    ஆரம்பம் முதலே காட்பாடியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், துரைமுருகன் 52,526 வாக்குகள் பெற்றார்.

    அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 745 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றது அவரது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார்.

    தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி 51304 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    திமுக வேட்பாளர் சீத்தாராமன் 45277 வாக்குகள் பெற்று 2-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யராணி 6170 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும், நோட்டா அந்த தொகுதியில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து தேமுதிக 1047 வாக்குகளும் இந்திய ஜனநாயக கட்சி 362 வாக்குகளும் பெற்றுள்ளது.
    ×