search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்கு கைகொடுத்த தபால் வாக்குகள்

    சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    காட்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும், அ.தி.மு.க சார்பில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராமுவும் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையின் போது, துரைமுருகனை அ.தி.மு.க. வேட்பாளர் ராமு கலங்கடித்தார். தொடக்கம் முதலே ராமு முன்னிலையில் இருந்து வந்தார். இடையில் மாறி மாறி முன்னிலை வந்த போதும், கடைசியாக 25-வது சுற்று முடிவில் ராமு 346 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் தபால் வாக்குகள் ராமுவுக்கு கைகொடுக்கவில்லை.

    தபால் வாக்குகள் முடிவு இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது. மொத்த தபால் வாக்குகள் 2,832 ஆகும். அதில் துரைமுருகன் 1,897 வாக்குகளும், ராமு 719 வாக்குகளும் பெற்றனர். அதை தொடர்ந்து ஏற்கனவே பழுதான 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 1,804 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் துரைமுருகனுக்கு 796 வாக்குகளும், ராமுவுக்கு 882 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் 85,140 வாக்குகளும், ராமு 84,394 வாக்குகளும் பெற்றனர்.
    Next Story
    ×