search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்துக்கு 5,500 டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, சளிமாதிரி சேகரிக்கப்படுகிறது. அதைத்தவிர 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சத்து 40 ஆயிரம், 2-வது கட்டமாக 13 ஆயிரம், 3-வது கட்டமாக 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவற்றில் 2 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் காணப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 4-ம் கட்டமாக 4,500 கோவேக்சின், 1,000 கோவிஷீல்டு என மொத்தம் 5,500 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவை, வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×