என் மலர்
வேலூர்
குடியாத்தம் பகுதியில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
குடியாத்தம்:
குடியாத்தம் நகரில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
குடியாத்தம் தரணம் பேட்டை பஜார், தாழையாத்தம்பஜார், நேதாஜி சவுக், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு, சித்தூர் கேட், நெல்லூர்பேட்டை, சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
முழு ஊரடங்கால் ஓரிரு இரண்டு சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தவிர யாரும் செல்லாததால் சாலையில் வெறிச்சோடி உள்ளது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் ஆல்பர்ட் ஜான். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு சென்று வந்தார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆல்பர்ட் ஜான் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆல்பர்ட் ஜான் மற்றும் அவரது மனைவி வாழப்பாடியில் உள்ள குடியிருப்பு தனிமைப் படுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில் ஆல்பர்ட் ஜானுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரவி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது குடியிருப்பு வாசிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என செ.குதமிழரசன் வலியுறுத்தி உள்ளார்.
குடியாத்தம்:
குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் நிருபர்களிடர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் இருபக்கமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்காமலும் உரிய இழப்பீடு வழங்காமலும் வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காமலும் திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
அவர்களுக்கு கால அவகாசம் வழங்கி வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மேலும் அவர்களை 50,60 ஆண்டுகளாக அங்கேயே குடியிருக்கின்றனர் அவர்களை திடீரென அகற்றுவதால் அவர்களுக்கு வாடகைக்குகூட வீடு கிடைக்காத அவல நிலையில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திடீரென நீதிமன்ற உத்தரவு எனக் கூறுவது சரியில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்ற உத்தரவு வந்தது ஆனால் அப்போது அமல்படுத்தாமல் திடீரென குடியாத்தத்தில் மட்டும் அகற்றுவது உள்நோக்கம் கொண்டது.
அங்கு வசிப்பவர்களுக்கு உரிய மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது அங்கு குடியிருப்பவர்களுக்கு வாடகை வீடு கிடைக்காத அவலநிலையால் விரக்தியில் பவுனம்மாள் என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழக அரசு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை காட்டி குடியிருக்கும் வீடுகளை அகற்றுவோம் என கூறுபவர்கள் தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது அதை மீட்க வேண்டும்.
சென்னையில் தீவு திடல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எதிர்கட்சிகள் ஆக இருந்தவர்கள் குரல் எழுப்பினார்கள் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் என கூறினார்.
பேட்டியின்போது குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வேலூரில் இன்று 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 53,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,429 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,149 பேர் பலியானார்கள். தற்போது 2,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 337 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 267 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை. மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் அருகே வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள். அவர் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் கவுண்டன்ய மகாநதி ஆற்றின்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட உள்ளதால் ஏராளமானோர் தங்கள் வீடுகளை காலி செய்து வேறு இடத்தில் வாடகைக்கு குடியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எங்கும் வீடு கிடைக்காததால் விரக்தி அடைந்த பவுனம்மாள் வியாழக்கிழமை இரவு தனது வீட்டருகே தெருவில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பவுனம்மாள் இறந்து விட்டார்.
வேலூர் மாவட்டத்தில் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பங்கேற்பவர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு விழாவிலும் 100 காளை, 150 வீரர்களுக்கு மிகாமலும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இன்று காளை விடும் விழா தொடங்கியது. வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு, அணைக்கட்டு அருகே உள்ள சிவநாதபுரம், கே.வி.குப்பம் பனமடங்கி, குடியாத்தம் குட்லவாரிபல்லி ஆகிய கிராமங்களில் இன்று மாடு விடும் விழா நடந்தது.
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஓடுபாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதற்கிடையில் ஓடு பாதையில் நின்றிருந்த பலரையும் காளைகள் முட்டித்தள்ளின. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரி பல்லி கிராமத்தில் 107-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன.
இந்த காளைகளின் உரிமையாளர்கள் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டிய பின்பு காளை விடும் திருவிழாவில் காளைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.
காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
மாடு விடும் விழா புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாடு விடும் விழாக்களை கண்காணித்தனர்.
மாடு விடும் விழா நடந்த கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,162 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 340 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 287 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.
மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ் குமார் (வயது 40) தேங்காய் உரிக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் கிராமத்தில் உள்ள பாக்கம் ஏரி நிரம்பியது.
பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் ஏரியில் மீன் பிடித்து வந்தனர் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏரியில் மீன் பிடிக்க வலை வலைவீசி உள்ளனர்.
அவர்களுடன் ரோஸ் குமாரும் செல்வது வழக்கம் நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம்போல் பாக்கம் ஏரியில் வலைவீசினர் மாலையில் வலையில் மீன் சிக்கியுள்ளதா என்பதை பார்க்க ரோஸ்குமார் ஏரியில் இறங்கினார். அப்போது நீரில் மூழ்கினார்.
அதனால் கரை மேல் இருந்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து அவர்களது உறவினர்களுள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் பாக்கம் ஏரியில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 7 மணி வரை தேடினர்.
நேற்று காலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் பாக்கம் ஏரியில் இறங்கி ரோஸ் குமாரின் உடலை தேடினர் பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏரியில் பல அடி ஆழம் இருப்பதாலும் ஏரி நிரம்பி உள்ளதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று மாலையில் குடியாத்தம் வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் சுரேஷ் சக்காரியா தலைமையில் 15 பேர் இரண்டு பைபர் படகுகளில் பாக்கம் ஏரியில் இறங்கி தேடினர். சுமார் 40 மணி நேரத்திற்குப் பின் ரோஸ் குமாரின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும் பரதராமி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே பைக் மீது லாரி மோதியதால் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் சுண்ணாம்பு பேட்டை உண்டியல் தர்மய்ய நாயுடு தெருவைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் ஓய்வு பெற்ற சப்&இன்ஸ்பெக்டர்.இவரது மகன் பாலாஜி (வயது 36). 2010-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வநதார்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சோதனை சாவடியில் பணி முடித்துவிட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார் கொட்டமிட்டா கிராமம் அருகே எதிர் திசையில் ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பாலாஜி இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் விபத்தில் பலியான பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் பலமனேரியில் விபத்தை ஏற்படுத்திய லாரியை குடியாத்தம் தாலுகா போலீசார் கைப்பற்றினர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வெங்கடாஜலபதி (வயது 36) என்பவரை கைது செய்தனர்.
பாலாஜியின் உடலுக்கு இன்று காலையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் அஞ்சலி செலுத்தினார். பாலாஜிக்கு லாவண்யா என்ற மனைவியும், 3 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.
பொங்கல் தினத்தன்று போலீஸ்காரர் பாலாஜி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குடியாத்தம் அருகே வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்துகொன்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை என்.எஸ்.கே நகர் சன்னதி தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் கூலித்தொழிலாளி இவரது மனைவி பவுனம்மாள் (வயது 60) இவர்களுக்கு ஒரு மகள் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்கள் குடியிருந்த வீடு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதால் அதனை விரைவில் இடிக்க உள்ளனர்.
இதனால் பல இடங்களில் வாடகைக்கு வீடு தேடினர். எங்கும் வீடு கிடைக்காததால் விரக்தி அடைந்த பவுனம்மாள் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டருகே தெருவில் நின்று உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பவுனம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கும், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனம்மாள் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் பாலாற்று பாலத்தில் பைக் மீது லாரி மோதியதில் கணவன்&மனைவி படுகாயம் அடைந்தனர்.
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து வேலூர் வரும் சாலையில் உள்ள பழைய பாலாற்று பாலத்தில் இன்று காலை லாரி ஒன்று எதிர்திசையில் காட்பாடி நோக்கி சென்றது.
அப்போது தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அவரது கணவருடன் பைக்கில் வேலூருக்கு வந்து கொண்டிருந்தார். பாலத்தில் வந்தபோது பைக் மீது லாரி மோதியது. இதில் தம்பதி இருவரும் படுகாயமடைந்தனர்.மேலும் பைக் முழுவதும் லாரி சக்கரத்தில் சிக்கி நொறுங்கியது.
இந்த விபத்தால் பழைய பாலாற்று பாலத்தில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நகர முடியாதபடி அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அப்போது அந்த வழியாக வந்த காட்பாடி டி.எஸ்.பி. பழனி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய பைக் மற்றும் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது.
வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேலூர்:
பொங்கல் பண்டிகை யொட்டி வேலூர் மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் கரும்புகள் கொண்டு வரபட்டது.
சிதம்பரம், பண்ரூட்டி சேத்தியாதோப்பு போன்ற பகுதிகளிலிருந்து கரும்புகள் வந்தன. 20 கரும்புகள் கொண்ட ஒருகட்டு ரூ.300 முதல் ரூ.350வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கலையொட்டி மண்பானை, மஞ்சல், வண்ணகோல பொடிகள், பூக்கள் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். மஞ்சல் ரூ.40 முதல் விற்பனை செய்யபட்டன.
பொங்கல் பண்டிகைக்கான அதிகளவில் சக்கரைவள்ளி கிழங்கு, பூசணிக்காய், வாழைக்காய், கருணை கிழங்கு போன்றவை வந்துள்ளன.
காய்களின் விலை விவரம் தக்காளி (கிலோ) ரூ.50, மொச்சை ரூ.60, சக்கரவள்ளி கிழங்கு ரூ.40, கத்தரிக்காய் ரூ.60, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.10, கருணைகிழங்கு ரூ.30, உருளை கிழங்கு ரூ.40, சேனை கிழங்கு ரூ.30, சேப்பங்கிழங்கு ரூ.30, பூசணிக்காய் (கிலோ) ரூ.30, வாழைக்காய் ரூ.5 என விற்கப்படுகின்றன.
பூக்கள் சீசன் முடிந்துவிட்டதால் வரத்து குறைவாக பூக்கள் சீசன் முடிந்துவிட்டதால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் பூக்கள் விலை குறையவில்லை மல்லி கிலோ ரூ.700, முல்லை ரூ.700, சாமந்தி ரூ.100 முதல் 250 வரையிலும், கனகாம்பரம் ரூ.1200 ரோஜா ரூ.150, துளசி ஒரு கட்டு ரூ.5க்கும் விற்பனையானது.
வேலூர் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் குற்ற நடவடிக்கைகள் தடுக்க போலீசார் மாறு வேடத்தில் மக்களோடு மக்களாக தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றன.






